Maruti Suzuki Jimny: உள்ளூரில் ஈ அடிக்க, வெளியூரில் புயல் அடிக்குது.. 4 வருடம் வெயிட்டிங் பீரியட் - ஜிம்னி அமோகம்
Maruti Suzuki Jimny Booking: சுசூகி நிறுவனத்தின் ஜிம்னி நோமேட் ஆஃப் ரோடருக்கான முன்பதிவு, சில மாதங்களுக்குப் பிறகு ஜப்பானில் மீண்டும் தொடங்கியுள்ளது.

Maruti Suzuki Jimny Booking: சுசூகி ஜிம்னி நோமேட் ஆஃப் ரோடருக்கான காத்திருப்பு காலம், 4 வருடங்களாக நீண்டுள்ளது.
ஜிம்னிக்கு குவியும் ஆதரவு
மாருதி சுசூகி நிறுவனத்தால் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட 5 டோர் ஜிம்னி கார் மாடலுக்கு, இந்திய சந்தையில் எதிர்பார்த்த அளவு வரவேற்பு கிடைக்கவில்லை. அதேநேரம், சர்வதேச சந்தையில் இந்த காருக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த எஸ்யுவி மீது இந்தியர்கள் பெரிய ஈடுபாட்டை காட்டாத நிலையில், ஜப்பானில் அதற்கு நேர் எதிரான சூழல் நிலவுகிறது. காரணம் ஜிம்னி நோமேட் என்ற பெயரில் அங்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த காராணது, உடனடியாக ஹிட் அடித்துள்ளது.
4 ஆண்டுகளான காத்திருப்பு காலம்
ஜப்பானில் கடந்த ஏப்ரல் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட ஜிம்னி நோமேடிற்கு கிடைத்த வரவேற்பானது அமோகமானதாக இருந்தது. சந்தைப்படுத்தப்பட்ட நான்கே நாட்களில் 50 ஆயிரத்திற்கும் அதிகமான யூனிட்கள் முன்பதிவு செய்யப்பட்டன. அதிகப்படியான தேவை காரணமாக காருக்கான முன்பதிவை நிறுத்த வேண்டிய சூழலுக்கு சுசூகி நிறுவனம் தள்ளப்பட்டது. அதோடு, காரை டெலிவெரி பெறுவதற்கான காத்திருப்பு காலம் என்பது சுமார் 4 ஆண்டுகளாக அதிகரித்தது. இது சுசூகியின் சொந்த சந்தையில் சிறிய ஆஃப்-ரோடர் எஸ்யுவிக்கு நிலவும் மிகப்பெரிய வரவேற்பை காட்டுகிறது.
மீண்டும் தொடங்கிய முன்பதிவு
இந்நிலையில் சுமார் 6 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஜிம்னி நோமேட் காரின் முன்பதிவை சுசூகி மீண்டும் தொடங்கியுள்ளது. இது ஆயிரக்கணக்கான ஆர்வமுள்ள வாடிக்கையாளர்களுக்கு பெரும் வாய்ப்பாக அமைந்துள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஜிம்னி 5-டோர் கார்கள் சமீபத்தில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான யூனிட்டுகளின் ஒட்டுமொத்த ஏற்றுமதியைக் கடந்துள்ளன. 2023 ஆம் ஆண்டில் இந்தியாவில் உற்பத்தியைத் தொடங்கிய இந்த எஸ்யூவி, ஜப்பான், ஆஸ்திரேலியா, மெக்சிகோ, சிலி மற்றும் தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட சர்வதேச சந்தைகளை அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜிம்னி 5-டோர் கார், மாருதி சுசூகியின் ஃபிராங்க்ஸுக்குப் பிறகு அதிக ஏற்றுமதி செய்யப்படும் இரண்டாவது மாடல் இதுவாகும். புகழ்பெற்ற ஆஃப்-ரோடர்களின் நீண்ட வரலாற்றில் ஜிம்னி நோமேட் முதல் 5 டோர் கார் அமைப்பை கொண்டுள்ளது. இது ஜிம்னி குடும்பத்தின் தனித்துவமான பலங்களைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது - 4WD அமைப்பு, லேடர் ஃப்ரேம் சேஸ் கொண்டுள்ளது.
ஜிம்னி 5 டோரின் வடிவமைப்பு
நீளமான வீல்பேஸ் மற்றும் கூடுதல் பின்புற கதவுகள் உள்ளே நுழைவதையும் வெளியே செல்வதையும் மென்மையாக்குகின்ற. அதே நேரத்தில் லக்கேஜ் இடத்தையும் அதிகரித்துள்ளன. தோற்றத்தில், நோமேட் அதன் முந்தைய எடிஷனின் பழக்கமான நிமிர்ந்த மற்றும் பாக்ஸி வடிவமைப்போடு ஒட்டிக்கொண்டிருக்கிறது. ஐந்து-ஸ்லாட் கிரில் குரோம் பூசப்பட்ட சரவுண்ட்டுடன் கன்மெட்டல் பூச்சு பெறுகிறது மற்றும் வாங்குபவர்கள் ஆறு வெளிப்புற வண்ண விருப்பங்களை தேர்வு செய்யலாம்.
அவற்றில் புதியதாக சேர்க்கப்பட்ட சிஸ்லிங் ரெட் மெட்டாலிக் மற்றும் செலஸ்டியல் ப்ளூ பேர்ல் மெட்டாலிக் ஆகியவை அடங்கும். இன்ஜின் ரீதியாக, SUV FR லேஅவுட் மற்றும் பகுதி நேர 4WD அமைப்புடன் 3-லிங்க் ரிஜிட் ஆக்சில் சஸ்பென்ஷன் அமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. கூடுதல் நீளம் மற்றும் எடையைக் கையாள சுசூகி பொறியாளர்கள் லேடர் சேஸை வலுப்படுத்தியுள்ளனர்.
பாதுகாப்பான பயணம்
நீட்டிக்கப்பட்ட வீல்பேஸ் அதிவேக நிலைத்தன்மை மற்றும் ஒட்டுமொத்த சாலை நடத்தைகளையும் மேம்படுத்தியுள்ளது. ஜிம்னி நோமேட் மோதல் குறைப்புக்காக சுசூகியின் இரட்டை கேமரா ப்ரேக் ஆதரவு அமைப்பை ஸ்டேண்டர்டாக கொண்டுள்ளது. அதே நேரத்தில் ஆட்டோமேடிக் எடிஷன்கள் அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல் வசதியை சேர்க்கின்றன. ஜப்பானில் ஜிம்னி நோமேடின் வெற்றி, சிறிய 4×4 இன் காலத்தால் அழியாத ஈர்ப்பு எவ்வாறு நுகர்வோரிடம் தொடர்ந்து எதிரொலிக்கிறது என்பதை நினைவூட்டுகிறது. இந்திய சந்தையிகல் அதன் விற்பனை மந்தமாக இருந்தாலும், 5-டோர் ஜிம்னிக்கான உலகளாவிய வரவேற்பு குறைந்ததாக இல்லை.
இந்தியாவில் இதன் விலை ரூ.12.31 லட்சத்தில் தொடங்கி, ரூ.14.44 லட்சம் வரை நீள்கிறது.





















