Kawasaki Ninja h2: கவாசகியின் மிரட்டலான ஸ்போர்ட்ஸ் பைக்குகள்.. லுக்கில் அசத்தும் நின்ஜா சீரிஸ் விவரங்கள்
கவாசகி நிறுவனம் தனது நின்ஜா சீரிஸின் இரண்டு புதிய ஸ்போர்ட்ஸ் இருசக்கர வாகனங்களை ஒரே நேரத்தில் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.
கவாசகி நிறுவனம் தனது நின்ஜா சீரிஸின் இரண்டு புதிய ஸ்போர்ட்ஸ் இருசக்கர வாகனங்களை ஒரே நேரத்தில் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.
கவாசகி H2 SX சீரிஸ்:
கவாசகி நின்ஜா வாகனம் என்பது, தொழில்நுட்பம், செயல்திறன் மற்றும் பயண வசதியின் மிக உயர்ந்த தரங்களுடன் ஒருங்கிணைப்பட்ட ஒரு வாகனம் ஆகும். நீண்ட தூர சுற்றுலா மற்றும் தினசரி பயணம் ஆகிய இரண்டிற்கும் தனித்துவமான சமநிலை சூப்பர்சார்ஜ்டு இன்ஜின் இந்த மாடலில் வழங்கப்படுகிறது. இந்நிலையில் தான், 2024 நின்ஜா H2 SX மற்றும் நின்ஜா H2 SX SE ஆகிய இரண்டு மாடல்களைகளையும், கவாசகி நிறுவனம் ஒரே நேரத்தில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்து உள்ளது.
விலை விவரம்:
2024 கவாசகி நின்ஜா H2 SX மாடலின் விலை 31 லட்சத்து 95 ஆயிரம் ரூபாயாகவும், நின்ஜா H2 SX SE மாடல்களின் விலை 32 லட்சத்து 95 ஆயிரம் ரூபாய் என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் ஸ்டான்டர்டு வேரியன்ட் மெட்டாலிக் டயப்லோ பிளாக் நிறத்திலும், H2 SX SE மாடல் மெட்டாலிக் கிராஃபைட் கிரே நிறத்திலும் கிடைக்கின்றன.
இன்ஜின் விவரம்:
இரண்டு சூப்பர்பைக் மாடல்களிலும் புதிய புகை விதிகளுக்கு பொருந்தும் இன்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. அதன்படி, புதிய கவாசகி H2 SX மற்றும் H2 SX SE மாடலில் 998சிசி, சூப்பர்சார்ஜ் செய்யப்பட்ட, இன்-லைன் நான்கு சிலிண்டர் மோட்டார் இடம்பெற்றுள்ளது. இந்த இன்ஜின் 200 ஹெச்.பி. பவர், 137.3 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இதைத் தவிர வாகனத்தின் பெரும்பாலான டிசைன், அம்சங்கள், ஹார்டுவேர் மற்றும் மின்சார அம்சங்கள் முந்தைய வெர்ஷனில் உள்ளதை போன்றே உள்ளன. எந்தவித மாற்றங்களும் செய்யப்படவில்லை.
சிறப்பம்சங்கள்:
இரண்டு சூப்பர்பைக் மாடல்களிலும் அட்வான்ஸ்டு ரைடர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம், டயர் பிரெஷர் மானிட்டரிங் சிஸ்டம், வெஹிகில் ஹோல்டு அசிஸ்ட், பிலைன்ட் ஸ்பாட் டிடெக்ஷன், அடாப்டிவ் குரூயிஸ் கன்ட்ரோல், ஃபார்வேர்டு கொலிஷன் வார்னிங், ரைடு மோட்கள், டிராக்ஷன் கண்ட்ரோல், 6.5 இன்ச் டி.எஃப்.டி., ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி, ஏ.பி.எஸ். மற்றும் பல்வேறு வசதிகள் வழங்கப்படுகின்றன. 2024 கவாசகி மாடலில் கூர்மையான முன்புறம், எல்.இ.டி. ஹெட்லைட்கள், டிரான்ஸ்பேரன்ட் வைசர், சைடு ஃபேரிங்குகள் உள்ளன. இவை பைக்கிற்கு அதிரடி தோற்றத்தை வழங்குகின்றன. இரு மாடல்களிலும் ஸ்ப்லிட்-சீட் செட்டப், பக்கவாட்டில் மவுன்ட் செய்யப்பட்ட எக்சாஸ்ட் வழங்கப்பட்டு இருக்கிறது.