Bajaj Pulsar 2024: பல்சர் N150, N160 பைக் மாடல்களை களமிறக்கிய பஜாஜ் நிறுவனம்..! ஒவ்வொன்றிலும் இரண்டு வேரியண்ட்கள்
Bajaj Pulsar 2024: பஜாஜ் நிறுவனம் புதிய பல்சர் N150 மற்றும் பல்சர் N160 பைக் மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.
Bajaj Pulsar 2024: பஜாஜ் நிறுவனம் புதிய பல்சர் பைக் மாடல்களின் விலையை, 3000 முதல் 6000 ரூபாய் வரை அதிகரித்துள்ளது.
பஜாஜ் பல்சர் 2024:
பஜாஜ் நிறுவனம் சில நாட்களுக்கு முன்பு பல்சர் N150 மற்றும் N160 இன் 2024 மாடல்களை வெளியிட்டது. இந்நிலையில், தனது இரண்டு புதிய பைக்குகளையும் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இரண்டு பைக்குகளும் இப்போது தலா இரண்டு வேரியண்ட்களை பெறுகின்றன. பஜாஜ் பல்சர் N150க்கான தொடக்க விலை ரூ. 1.18 லட்சம் ஆகவும், அதிகபட்ச விலை ரூ.1.24 லட்சம் வரையிலும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பல்சர் என்160 மாடலின் தொடக்க விலை ரூ.1.31 லட்சம் ஆகவும், அதிகபட்ச ரூ.1.33 லட்சம் வரையிலும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பேஸ் வேரியண்ட் பல்சரின் அம்சங்கள், விவரங்கள்:
பல்சர் N150 மற்றும் பல்சர் N160 ஆகிய இரண்டின் தொடக்க வேர்யண்ட்கள் இன்னும் முந்தைய மாடலில் உள்ள, டிஜி-அனலாக் டிஸ்பிளேவுடன் இணைந்து செயல்படுகின்றன. மேலும் இந்த இரண்டு மாடல்களின் அனைத்து அம்சங்களும், எல்லா வகையிலும் 2023 மாடலையே சார்ந்து இருக்கின்றன. N150 மற்றும் N160க்கு முறையே ரூ.1.18 லட்சம் மற்றும் ரூ.1.31 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி, புதிய பல்சர் மாடல்களுக்கான விலையும், 2023 பல்சர் மாடல்களின் விலையை போன்றே நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
டாப் வேரியண்ட் பல்சரின் அம்சங்கள், விவரங்கள்:
பஜாஜ் பல்சர் N150 இன் புதிய டாப் எண்ட் வேரியண்ட் இப்போது புளூடூத் இணைப்புடன் கூடிய புதிய LCD டேஷைப் பெறுகிறது. இதனுடன் பயனாளர் தங்களது செல்போனை இணைப்பதன் மூலம் தங்களுக்கு வரும் தொலைபேசியை அழைப்புகளை ஏற்க/நிராகரிக்க கூடிய வசதி வழங்கப்பட்டுள்ளது. மற்ற முக்கியமான மாற்றம் என்னவென்றால், N150 ஆனது இப்போது பின்பக்க டிஸ்க் பிரேக்குடன் வருகிறது. இருப்பினும் இது ஒற்றை-சேனல் ABS உடன் மட்டுமே செயல்படுகிறது.
புதிய பஜாஜ் பல்சர் N160-ன் டாப் எண்ட் வேரியண்ட் இப்போது டூயல்-சேனல் ABS உடன் மட்டுமே கிடைக்கிறது, இது இந்த இடமாற்ற வரம்பில் டூயல்-சேனல் ABS வசதி கொண்ட ஒரே பைக் என்ற பெருமையை தருகிறது. பல்சர் N150 போலவே, ரூ. 1.31 லட்சம் மதிப்பிலான புதிய பல்சர் N160-ன் தொடக்க வேரியண்ட்டும் 2023ம் ஆண்டு வெளியான மாடலைப் போலவே உள்ளது. மேலும் ரூ. 1.33 லட்சம் டாப் வேரியண்டில் டிஜிட்டல் டேஷ் வடிவத்தில் மட்டுமே மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மற்றபடி அனைத்துமே பழைய அம்சங்களே தொடர்கிறது.