மேலும் அறிய
Advertisement
Watch Video: அஸ்ரத்சயது ஹமீது அவுலியா தர்கா சார்பில் காஞ்சி காமாட்சி அம்மனுக்கு வரவேற்பு! வைரலாகும் வீடியோ
40 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்று வந்த புஷ்ப பல்லாக்கு திருவிழா, கடந்த ஆண்டு முதல் மீண்டும் நடைபெற்று வருகிறது
உலகப் புகழ்பெற்ற காஞ்சிபுரம் காமகோடி அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் மாசி பிரம்மோற்சவம் 10 நாட்கள் நடப்பது வழக்கம். இதில் காலை மற்றும் மாலை வேளைகளில் பல்வேறு வாகனங்களில் காமாட்சி அம்மன், லட்சுமி சரஸ்வதியுடன் எழுந்தருளி நான்கு ரத வீதிகளில் வலம் வந்து, பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.இதன் நிறைவு விழாவில் தேவேந்திர குல வேளாளர்கள் சார்பில், புஷ்ப பல்லக்கு நிகழ்ச்சி நடத்தப்படும்.
அஸ்ரத்சயது ஹமீது அவுலியா தர்கா சார்பில் காஞ்சி காமாட்சி அம்மனுக்கு வரவேற்பு.. மத நல்லிணக்கம்😍 pic.twitter.com/TcaOP2Xx4j
— Kishore Ravi (@Kishoreamutha) March 1, 2022
கடந்த 40 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டு இருந்த பூப்பல்லக்கு நிகழ்ச்சி, காஞ்சி மடாதிபதி ஸ்ரீ விஜயேந்திரரின் கோரிக்கையின் பேரில், தேவேந்திர குல வேளாளர் சங்கத் தலைவர் ஜான்பாண்டியன், கடந்த ஆண்டு முதல் தொடங்கி வைத்தார். இந்தாண்டு பிரம்மோற்சவம் கடந்த 15 நாட்களுக்கு முன் தொடங்கி, நேற்று முன்தினம் பூப்பல்லக்கு நிகழ்ச்சியுடன் நிறைவடைந்தது. இதையொட்டி, காமாட்சி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து, லட்சுமி சரஸ்வதியுடன் பூப்பல்லக்கில் எழுந்தருளி வாணவேடிக்கையுடன் ராஜ வீதிகளில் வலம் வந்தார்.
இந்நிலையில், காஞ்சி சங்கர மடம் அருகில் உள்ள அஸ்ரத்சயது ஹமீது அவுலியா தர்கா அமைந்துள்ளது. இதை சார்ந்த நிர்வாகிகள், கடந்த காலங்களில் நிகழ்ந்த மத நல்லிணக்கத்தின் அடிப்படையில் இந்தாண்டு தர்காவில் இருந்து ரோஜா பூக்கள் மற்றும் பன்னீருடன் காமாட்சி அம்மனை வரவேற்று சிறப்பு தரிசனம் மேற்கொண்டனர்.
இதேபோல், காஞ்சிபுரம் வரதராஜர் கோயில் பிரம்மோற்சவ விழாவில் ரத உற்சவத்தின்போது, அதே பகுதியில் உள்ள மண்டபத்தில் எழுந்தருளும் வரதராஜ பெருமாளுக்கு, படையிலடும் நிவைவேந்தியம் முதல் மரியாதையாக இதற்கான நிர்வாகிகளுக்கு வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க:'திகிலூட்டுகிறது'.. உக்ரைன் போரால் பதறிப்போன ப்ரியங்கா சோப்ரா!! இன்ஸ்டாவில் சோக பதிவு!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
உலகம்
பொழுதுபோக்கு
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion