உங்கள் பிள்ளைகளின் அறையில் இந்த நிறத்தை அடியுங்கள்.. அப்புறம் பாருங்க
வாஸ்து சாஸ்திரத்தின் படி குறிப்பிட்ட சில நிறங்களைத் தேர்வு செய்து அதை பிள்ளைகளின் அறைகளில் அடித்தால் அந்த வீட்டில் உள்ள குழந்தைகளில் கல்வி கேள்வியில் சிறந்து விளங்குவார்களாம்.
வாஸ்து சாஸ்திரத்தின் படி குறிப்பிட்ட சில நிறங்களைத் தேர்வு செய்து அதை பிள்ளைகளின் அறைகளில் அடித்தால் அந்த வீட்டில் உள்ள குழந்தைகளில் கல்வி கேள்வியில் சிறந்து விளங்குவார்களாம்.
வாஸ்து சாஸ்திரத்தின் படி வீடுகட்டுவது இப்போது சர்வ சாதாரண நிகழ்வாக ஆகிவிட்டது. ஒரு காலத்தில் வசதி படைத்தோர் மட்டுமே வாஸ்து சாஸ்திரத்தின் படி வீடு கட்ட, கட்டிய வீட்டை அங்கே இடித்து, இங்கே இடித்து வாசலை மாற்ற கதவை மாற்ற என இருந்தனர்.
இப்போது வாஸ்து சாஸ்திரம் சர்வ சாதாரணமாகிவிட்டது. வாஸ்து சாஸ்திரம் பற்று ஆச்சார்யர் இந்து பிரகாஷ் கூற்றின் படி ஒரு குறிப்பிட்ட நிறத்தை சுவரில் பூசினால் பிள்ளைகளின் படிப்பு படு ஜோராக இருக்குமாம்.
அதாவது க்ரீம் கலர், வெளிர் பர்ப்பிள் கலர், வெளிர் பச்சை நிறம், நீல நிறம் (வானத்தின் நீலம்) ஆகியனவற்றில் ஏதேனும் ஒரு நிறத்தைத் தேர்வு செய்து சுவரில் அடித்தால் குழந்தைகளுக்குப் படிப்பு நன்றாக வருமாம். மஞ்சள் என்பது கல்விக்கான நிறமாம். பச்சை என்பது ஞானத்துக்கான நிறமாம். இந்த நிறங்களில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து உங்கள் பிள்ளைகளின் ஸ்டடி ரூமில் அடிக்குமாறு பரிந்துரைக்கிறது வாஸ்து சாஸ்திரம்.
அதேபோல் பிள்ளைகளின் அறையில் உள்ள சுவரில் மாட்டும் ஓவியங்கள், படங்களையும் பார்த்துப் பார்த்து தேர்வு செய்ய வேண்டும் எனக் கூறுகிறது சாஸ்திரம்.
சாஸ்திரப்படி சுவர் ஓவியங்களை வரைந்தால் பிள்ளைகளின் மனம் அங்குமிங்கும் அலையாமல் பாடத்தில் முழு கவனம் செலுத்துமாம்.
வாஸ்து சாஸ்திரம் என்பது, ஒரு நிலத்தில் கட்டிடம் கட்டுவதற்குரிய முறைகளையும், அதன் தத்துவங்களையும் விளக்கும் ஒரு வேதம் சார்ந்த அறிவுத்துறையாகும்.
கி.மு 3000 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்டிருக்கக்கூடுமெனக் கருதப்படுகிறது. இந்துக்களின் முதல் நூல்களான நான்கு வேதங்களில், நான்காவது வேதமான அதர்வண வேதத்தில் இது பற்றிச் சொல்லப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. வாஸ்து சாஸ்திரத்தின் பல்வேறு அம்சங்களையும் விரிவாக விளக்கிப் பல நூல்கள் பழைய காலத்திலேயே எழுதப்பட்டுள்ளன. வாஸ்து சாஸ்திரத்தின் நோக்கம், மக்களுடைய நல்வாழ்வுக்காக அவர்களுடைய தேவைகளையும் எதிர்பார்ப்புக்களையும் பூத்திசெய்வதுடன், கட்டப்படுகின்ற கட்டிடம், மனிதன் இயற்கையுடனும், இப் பிரபஞ்சத்தின் ஒழுங்குடனும் இசைந்து போவதற்கு உதவுவதுமாகும் என்று வாஸ்து சாஸ்திர நிபுணர்கள் கூறுகின்றனர்.
கட்டிடம் கட்டுவதற்கான மனையில் (நிலம்), கட்டிடத்தின் அமைவிடம், நோக்கும் திசை, மற்றும் கட்டிடத்தின் வெவ்வேறு பகுதிகள் இருக்கவேண்டிய இடம் என்பவற்றைத் தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிப்பது வாஸ்து.
அந்த வாஸ்துவின் படி தான் குறிப்பிட்ட சில நிறங்களைத் தேர்வு செய்து அதை பிள்ளைகளின் அறைகளில் அடித்தால் அந்த வீட்டில் உள்ள குழந்தைகளில் கல்வி கேள்வியில் சிறந்து விளங்குவார்கள் எனக் கூறப்படுகிறது.