தஞ்சை பெரிய கோவிலில் ஆஷாட நவராத்திரி விழா - திரளான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனர்
தஞ்சை பெரியகோவிலில் ஆஷாட நவராத்திரி விழாவை ஒட்டி வாராஹி அம்மனுக்கு சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.
![தஞ்சை பெரிய கோவிலில் ஆஷாட நவராத்திரி விழா - திரளான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனர் Varahi Amman is specially decorated on the occasion of Ashada Navratri festival in Thanjavur Periyakovil தஞ்சை பெரிய கோவிலில் ஆஷாட நவராத்திரி விழா - திரளான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனர்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/09/fa11fee78fefd0b77e9bc00e427f16a21657365009_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தஞ்சை பெரியகோவிலில் ஆஷாட நவராத்திரி விழாவை ஒட்டி வாராஹி அம்மனுக்கு சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.
தஞ்சை பெரிய கோவிலில் வாராகி அம்மன் வழிபாடு சிறப்பு வாய்ந்தது. பெரிய கோவிலை கட்டிய மாமன்னர் ராஜ ராஜசோழன் போருக்கு செல்லும் முன்பு வராகி அம்மனை வணங்குவதை வழக்கமாக வைத்திருந்தார். மாமன்னர் ராஜாராஜசோழன் இந்த அன்னையின் அருள் பெற்றுதான் எந்த செயலையும் தொடங்குவார். தஞ்சை பெரிய கோவிலின் தெற்கு புறத்தில் மகா வாராஹி சன்னதி அமைந்துள்ளது.
காசி நகரத்தில் வாராகி அன்னைக்கு மிகப்பெரிய கோவில் உள்ளது. இங்குள்ள வாராகியை நேரடியாக தரிசிக்க முடியாது துவாரங்களின் வழியாகத்தான் தரிசிக்க முடியும். ஞாயிறு கிழமைகளில் வாராகியை வழிபட்டால் நோய்கள் தீரும். திங்கட்கிழமைகளில் வழிபட்டால் மன நல பாதிப்புகள் நீங்கும். வீடு நிலம் தொடர்பான பிரச்சினைகள் தீர செவ்வாய்கிழமைகளில் வராகியை வழிபடலாம். கடன் தொல்லைகள் தீர புதன்கிழமை வழிபடலாம். குழந்தை பேறு கிடைக்க வியாழக்கிழமை வழிபடலாம். கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கவும் வியாழக்கிழமை வழிபடலாம். வெள்ளிக்கிழமை வழிபட நினைத்த காரியம் நிறைவேறும்.
தஞ்சை பெரிய கோயிலில் தனி சன்னதியில் அமைந்துள்ள மிகவும் பழமையான வாராஹிக்கு ஆஷாட நவராத்திரி விழா ஒவ்வொரு ஆண்டும் விமரிசையாக நடந்து வருகிறது. அந்த வகையில் இந்தாண்டு கடந்த ஜூன் 28ம் தேதி காலை மகா கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. தொடர்ந்து அபிஷேகம், வாராஹி ஹோமம், ஆகியவை நடந்தது. இதையடுத்து வாராஹி அம்மன் இனிப்பு அலங்காரத்துடன் விழா துவங்கியது. இதில் 29ம் தேதி மஞ்சள் அலங்காரம், 30ம் தேதி குங்குமம், கடந்த 1ம் தேதி தேதி சந்தனம், 2ம் தேதி தேங்காய்ப்பூ, 3ம் தேதி மாதுளை, 4ம் தேதி நவதானியம், 5ம் தேதி வெண்ணெய், 6ம் தேதி கனி வகைகள், 7ம் தேதி காய்கறி அலங்காரம் ஆகியவை நடந்தது.
கடந்த 8ம் தேதி புஷ்ப அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடந்தது. நாள்தோறும் காலை 8 முதல் 10 மணி வரை சிறப்பு வாராஹி ஹோமும், 10 முதல் 11 மணி வரை சிறப்பு அபிஷேக, தீபாராதனையும், மாலை 6 மணி முதல் சிறப்பு அலங்காரமும், இரவில் கலை நிகழ்ச்சிகளும் நடந்தது. இதில் நேற்று முன்தினம் 8ம் தேதி தேதி மாலை 6 மணிக்கு வாராஹி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை அரண்மனை தேவஸ்தானம் மற்றும் ஆஷாட நவராத்திரி விழாக்குழுவினர் செய்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)