Today Rasipalan : கும்பத்துக்கு குழப்பம்..! கன்னிக்கு வெற்றி..! இந்த நாள் உங்களுக்கு எப்படி அமையும்..?
Today Rasipalan : இந்த நாள் எந்த ராசிக்காரர்களுக்கு எப்படி அமையும் என்பதை கீழே விரிவாக காணலாம்.
நல்ல நேரம் :
காலை 7.30 மணி முதல் காலை 8.30 மணி வரை
மாலை 12.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை
கௌரி நல்ல நேரம் :
காலை 10.30 மணி முதல் காலை 11.30 மணி வரை
இரவு 9.30 மணி முதல் இரவு 10.30 மணி வரை
இராகு :
காலை 9 மணி முதல் காலை 10.30 மணி வரை
குளிகை :
காலை 6 மணி முதல் காலை 7.30 மணி வரை
எமகண்டம் :
மதியம் 1.30 மணி முதல் மதியம் 3 மணி வரை
சூலம் – கிழக்கு
மேஷம் :
மேஷ ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு சுகமான நாளாக அமையும். நீண்ட நாள் வாங்க நினைத்த பொருளை வாங்கி மகிழ்வீர்கள். மனதிற்கு பிடித்தவரை சந்தித்து மகிழ்வீர்கள். மனதில் புது உற்சாகம் பிறக்கும். குடும்பத்தில் குதூகலம் உண்டாகும்.
ரிஷபம் :
ரிஷப ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு நன்றாக அமையும். நீணட நாட்களாக நீங்கள் எதிர்பார்த்த காரியம் ஒன்று நடக்கும். சகோதரர்கள் வழியில் உதவி கிட்டும். சொத்துக்கள் வழியில் நீடித்து வந்த பிரச்சினை நீங்கும். மிகப்பெரிய பிரச்சினைகள் பேச்சுவார்த்தை மூலம் சுமூகமாக நடக்கும்.
மிதுனம் :
மிதுன ராசிக்காரர்களே இந்த நாள் உங்களது வாழ்வில் எதிர்பாராத திருப்பங்கள் ஏற்படும். திடீரென தொலைதூரப் பயணம் மேற்கொள்ள வேண்டிய சூழல் ஏற்படலாம். தொழில் மற்றும் வாழ்க்கையில் முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டிய நிலை ஏற்படலாம். சிவபெருமானை வழிபட வேண்டியது அவசியம்.
கடகம் :
கடக ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு அருமையாக அமையும். ஆக்கப்பூர்வமான முறையில் செயல்படுவீர்கள். தொழிலில் சமயோசிதமாக செயல்படுவீர்கள். அக்கம்பக்கத்தினர் மற்றும் நண்பர்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும்.
சிம்மம் :
சிம்ம ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு சற்று குழப்பமான நாளாக அமையும். முக்கிய முடிவுகளை எடுப்பதை ஒத்திவைப்பது நல்லது. தேவையில்லாத விவகாரங்களில் தலையிடக்கூடாது. நண்பர்களின் கொடுக்கல் – வாங்கல் விவகாரங்களுக்கு உத்தரவாதம் அளிக்கக்கூடாது.
கன்னி :
கன்னி ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு சந்தோஷமான நாளாக அமையும். நண்பர்களுடன் மேற்கொள்ளும் பயணம் உற்சாகமாக, மகிழ்ச்சியாக அமையும். மனதிற்கு பிடித்தவர்களுடன் நேரத்தை செலவிடுவீர்கள். தேவையில்லாத தொல்லைகள் உங்களை விட்டு விலகும்.
துலாம் :
துலாம் ராசிக்காரர்களே இந்த நாள் நீங்கள் பொறுமையுடன் செயல்பட வேண்டும். கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும். பணிபுரியும் இடங்களில் மிகவும் அமைதியை கடைபிடிக்க வேண்டும். உயரதிகாரிகளிடம் சுமூகமாக நடந்து கொள்ள வேண்டும்.
விருச்சிகம் :
விருச்சிக ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு புகழ் கிட்டும். தொழிலில், பணிபுரியும் இடத்தில் உங்களது உழைப்பிற்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். பெற்றோர்கள் – பிள்ளைகள் இடையே இருந்த மனக்கசப்பு அகலும். வரன்கள் வாயில் வந்து சேரும். காதலர்கள் இடையே அன்பு அதிகரிக்கும்.
தனுசு :
தனுசு ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு மன அமைதி கிட்டும். குடும்பத்தில் நீடித்து வந்த சிக்கல் இன்று சுமூகமாக தீர்க்கப்படும். பிள்ளைகள் இன்று உங்கள் அறிவுரைப்படி செயல்படுவார்கள். வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். உடல்நலத்தில் நீடித்து வந்த பிரச்சினை சீராகும்.
மகரம் :
மகர ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு நன்மை மிகுந்த நாளாக அமையும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து எதிர்பார்த்த உதவிகள் கிட்டும். கர்ப்பிணி பெண்கள் மனம் மகிழ்ச்சி அடைவீர்கள். பணவரவு, தன வரவு உண்டாகும்.
கும்பம் :
கும்ப ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு ஓய்வு எடுக்க வேண்டிய சூழல் ஏற்படலாம். மனதில் தேவையில்லாத குழப்பங்கள் குடிகொள்ளும். எதையும் பெரிதாக நினைக்கக்கூடாது. சில உண்மைகளை உணர்ந்து கொள்ள வேண்டும். பிடித்தவர்களுக்கு பிடித்ததை செய்து மகிழ்வீர்கள். எம்பெருமானை வணங்கி மன ஆறுதல் அடையுங்கள்.
மீனம்:
மீன ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு தொழிலில் ஆர்வம் அதிகரிக்கும். மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்துவீர்கள். பிள்ளைகள் – பெற்றோர்கள் இடையே அன்பு அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். சுபச்செலவுகள் உண்டாகும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்