TN Assembly Session LIVE: "அதிமுகவை பகைவராக நினைக்கவில்லை” - பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ வேலு
TN Assembly Session 2022 LIVE Updates: தமிழ்நாடு பட்ஜெட் மீதான மானிய கோரிக்கை விவாதம் கூட்டம் நிகழ்வுகள் உடனுக்குடன் விரைவாக கீழே லைவ் ப்ளாகில் காணலாம்.

Background
TN Assembly Session 2022 LIVE Updates:
தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த 18-ஆம் தேதி நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதன்பின்னர் பட்ஜெட் மீதான பொது விவாதம் நடைபெற்றது. இந்நிலையில் பட்ஜெட் தொடர்பான மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் இன்று முதல் நடைபெறும் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்திருந்தார்.
பட்ஜெட் கூட்ட தொடரின் இரண்டாவது அமர்வு வரும் 6ஆம் தேதி தொடங்கி மே மாதம் 10ஆம் தேதி வரை நடைபெறுகிறது. ஏப்ரல் 6ஆம் தேதி முதல் மானிய கோரிக்கை மீதான விவாதம் தொடங்க உள்ளது. அதன்படி தமிழ்நாடு சட்டப்பேரவையின் நிகழ்ச்சி நிரல்:
6-4-2022: நீர்வளத்துறை
7-4-2022: 34 - நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை
42 - ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
8-4-2022: 12- கூட்டுறவு
13-உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு
9-4-20322 (சனிக்கிழமை): அரசு விடுமுறை
10-4-2022(ஞாயிற்றுக்கிழலை): அரசு விடுமுறை
TN Assembly Session LIVE: "அதிமுகவை பகைவராக நினைக்கவில்லை” - பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ வேலு
அதிமுகவை நாங்கள் பகைவராக நினைக்கவில்லை என பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ வேலு சட்டப்பேரவையில் பேசி இருக்கிறார்
அயோத்தியா மண்டப விவகாரத்தில் அரசியலை புகுத்த நினைத்தால் அது நடக்காது - முதலமைச்சர்
அயோத்தியா மண்டபம் விவகாரத்தில் அரசியலை புகுத்தி கட்சியை பலப்படுத்த நினைத்தால் அது நடக்காது என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்





















