RRR : ரூ.1000 கோடி வசூல் படைத்து ஆர்ஆர்ஆர் சாதனை.. அமீர்கானுடன் கொண்டாடிய படக்குழு...!
இந்தப் படத்தின் ஹிந்தி பதிப்பு புதன்கிழமை 200 கோடியைத் தாண்டியது. இருப்பினும், இந்த நிகழ்வில் ஆலியா காணப்படவில்லை.
ஆர்ஆர்ஆர் திரைப்படம் உலகளவில் 1000 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இதனை படக்குழுவினர் கொண்டாடியுள்ளனர்.
பாகுபலி என்னும் பிரம்மாண்ட படைப்பிற்கு பிறகு அதன் இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் உருவான ஆர்.ஆர்.ஆர்(RRR) திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. 1920-ஆம் காலக்கட்டத்தில் வாழ்ந்த அல்லுரி சீதா ராமராஜூ மற்றும் கொமரம் பீம் ஆகிய இரண்டு சுதந்திர போராட்ட வீரர்களின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு இந்தப்படம் உருவாகியுள்ளது.
படத்தில் பிரபல தெலுங்கு நடிகர்கள் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் இருவரும் கதாநாயகர்களாக நடித்துள்ளனர். இவர்களுடன் ஆலியா பட், ஸ்ரேயா சரண், அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட ஐந்து மொழிகளில் இப்படம் வெளியானது.
இந்நிலையில், கடந்த மார்ச் 25-ம் தேதி வெளியான இப்படம் 1000 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இதன் வெற்றியை இயக்குநர் ராஜமெளலி நடிகர்கள் ராம் சரண், ஜூனியர் என்டிஆர் நடிகர் அமீர்கானுடன் இணைந்து மும்பையில் கொண்டாடியுள்ளனர். இந்தப் படத்தின் ஹிந்தி பதிப்பு புதன்கிழமை 200 கோடியைத் தாண்டியது. இருப்பினும், இந்த நிகழ்வில் ஆலியா காணப்படவில்லை.
கடந்த புதன்கிழமையன்று நடைபெற்ற பிரமாண்டமான நிகழ்ச்சியில் அமீர் கான், நடிகை ஹுமா குரேஷி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதுதொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram
View this post on Instagram
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்