Tamil New Year Vrichugam Rasi Palan: 'விருச்சிகத்துக்கு விபரீத ராஜயோகம் அடிக்கப்போகுது..' - பட்டைய கிளப்பும் தமிழ் புத்தாண்டு..!
தமிழ் புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு விருச்சிக ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன் என்பதை கீழே காணலாம்.
ஆண்டுதோறும் சித்திரை 1ம் தேதியை தமிழ்நாட்டில் தமிழ் புத்தாண்டாக கொண்டாடி வருகிறோம். இதையடுத்து, தமிழ் புத்தாண்டிற்கான ராசிபலனை நமது ஏபிபி நாடு வாசகர்களுக்காக ஜோதிட கஜகேசரி டாக்டர் ஆச்சார்ய ஹரேஷ் ராமன் கணித்துள்ளார்.
விருச்சிக ராசிக்காரர்களுக்கான பலன்கள் குறித்து அவர் கூறியிருப்பதாவது, ”வாழ்க்கையில் நீங்கள் உச்சம் தொட்டு சுபமாக இருக்க வாழ்த்துகள். 2023ம் ஆண்டு அக்டோபர் 31-ந் தேதி பிறகு புத்தாண்டு உங்களுக்கு கலையுலகம் சார்ந்த நபர்களுக்கு அருமையாக இருக்கும். குழந்தைகள் உடல்நலனில் கவனம் தேவை. ஆண் குழந்தைகள் பிறக்கும் வாய்ப்பு உண்டு. மூதாதையர்கள் சொத்துகள் சேரும் பாக்கியம் உண்டு.
குரு, ராகு:
முக்கியமான நண்பர் பிரியக்கூடிய வாய்ப்பு உள்ளது. மூத்த சகோதர, சகோதரிகள் பிரியும் வாய்ப்பு உள்ளது. நீங்கள் நினைத்த காரியம் ரகசியமாக நடக்கும் வாய்ப்பு உண்டு. செவ்வாய் வீட்டில் குரு, ராகுவோட சஞ்சாரம். உங்களுக்கு வரக்கூடிய எதிரிகள் அனைவரும் பெரிய ஆட்களாகவே இருப்பார்கள். ஆனால், குரு. ராகு செவ்வாயில் இருப்பதால் வெற்றி பெறுவது நீங்களாக இருப்பீர்கள். அந்த வெற்றி அக்டோபர் 31-ந் தேதிக்கு பிறகு நடக்கும்.
வீடு வாங்கும் பிரார்த்தம் உண்டு. புதிய இடம் வாங்கும் யோகம் உண்டு. அடிவயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. நரசிம்ம சுவாமியை வழிபட வேண்டும். நீர் ஆகாரம் நிறைய குடிக்க வேண்டும். அருமையான ஆண்டாக இந்த ஆண்டு மாறப்போகிறது. நீங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். வாகனங்களில் கவனமாக செல்ல வேண்டும்.
உடல்நலத்தில் கவனம் வேண்டும்:
அனுஷ நட்சத்திரத்தில் உடல்நலத்தில் கவனம் வேண்டும். வீட்டில் இருப்பவர்களின் உடல்நலத்திலும் கவனம் வேண்டும். கேட்ட நட்சத்திரத்தினருக்கு இந்தாண்டு புதிய விஷயங்களை கற்றுக்கொள்ள வாய்ப்புகள் இருக்கும். சிலருக்கு புதிய வாழ்க்கை உருவாக வாய்ப்புகள் உள்ளது. புதிய வேலை அமையக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். நல்ல மாற்றங்கள் கண்டிப்பாக நடக்கும்.
விசாக நட்சத்திரத்தினருக்கு விபரீத ராஜயோகம் அடிக்கும். வழக்கு, விவகாரங்களில் நீங்களே வெற்றி பெறுவீர்கள். வாழ்க்கையில் இதுபோன்ற சோதனை தருணம் இருக்காது. ஆனால், இந்த சோதனையின் இறுதியில் நீங்களே ஜெயிப்பீர்கள். பழனி முருகன் கோயிலுக்கு சென்று பசுநெய் தானம் செய்துவிட்டு வந்தால் பயங்கரமான மாற்றங்கள் உங்கள் வாழ்க்கையில் நடக்கும்.”
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.