Dhanusu Rasi Palan: காதல், குழந்தை, சொத்துக்கு பஞ்சம் இல்லை...! தனுசு ராசிக்காரர்களுக்கு ஏகபோகம்தான்! தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்!
Dhanusu Rasi Palan Tamil New Year 2023: தனுசு ராசி நேயர்களுக்கு பிரபல ஜோதிடர் கஜகேசரி டாக்டர் ஆச்சார்ய ஹரேஷ்ராமன் கணித்த பலன்களை கீழே விரிவாக காணலாம்.

தமிழ் மாதத்தின் முதல் மாதம் சித்திரை. நாளை மறுநாள்( 14-ஆம் தேதி) தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடப்படவிருக்கிறது.
அறிவியல் ரீதியாக சூரியன் பூமியை சுற்றி வர 365 நாட்கள், 6 மணி நேரம், 11 நிமிடம், 48 நொடிகள் ஆகிறது. இதை வைத்து தான் தமிழ் வருடத்தின் கால அளவும் பின்பற்றப்படுகிறது. சூரியன் மேஷ ராசியில் நுழைவதை தமிழ் வருடத்தின் தொடக்க ஆண்டு என்றும், மீன ராசியிலிருந்து வெளிவருவதை இறுதி ஆண்டு என வைத்து தமிழ் புத்தாண்டு கணக்கிடப்படுகிறது. சோபகிருந்து புத்தாண்டில் ராசிபலன் குறித்த முழு பலன்களை பிரபல ஜோதிடர் கஜகேசரி டாக்டர் ஆச்சார்ய ஹரேஷ்ராமன் கணித்துள்ளார்.
தனுசு ராசிக்கான பலன்கள் என்னென்ன என்பது குறித்து கீழே விரிவாக காணலாம்.
தனுசு ராசி அன்பர்களே..!
சோபகிருது ஆண்டில் தனுசு ராசி அல்லது தனுசு லக்னம் சார்ந்த நபர்களே,இந்த காலகட்டங்களில் செவ்வாய் உடைய வீட்டில் குரு, ராகு-வின் சஞ்சாரம் ஏப்ரல்-14 ஆம் தேதிக்கு பிறகு ஏற்பட போகிறது.
உடல்நலனில் அக்கறை முக்கியம்
ஏப்ரல் -22 ஆம் தேதி குருப்பெயர்ச்சி நடக்கிறது. இந்தநிலையில், ஏப்ரல்- 13 மற்றும் 14 ஆம் தேதிகளில் உங்களுடைய உடல்நலனில் கவனம் செலுத்த வேண்டியது மிகவும் அவசியம்.ஐந்து கிரக சேர்க்கை; ஐந்தாம் இடமென்று சொல்லக்கூடிய பஞ்சப ஸ்தானத்தில் ஏற்பட போகிறது. எனவே, உடல்நலனின் கவனத்துடன் இருப்பது நல்லது.
உடல் வெப்பம் அதிகரித்து அம்மை , நெஞ்சு சம்பந்தப்பட்ட பாதிப்புகள் உள்ளிட்டவைகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகமிருப்பதால் தனுசு ராசிக்காரர்கள் உடல்நலனைப் பேணுவதில் சற்று கூடுதல் கவனம் செலுத்துவது அவசியமானதாகிறது. பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை உடற்பயிற்சி செய்து உடல் நலனை பாதுகாப்பது சிறந்தது. இந்த சமயத்தில் கூடுதல் கவனத்தோடு இருப்பது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.
புதிய வரவுகள்
இந்தாண்டில் புதிய வாகனம், வீடு உள்ளிட்டவைகள் வாங்குவதற்கு வாய்ப்புகள் தேடி வரும்.
பதவி உயர்வு, புதிய பொறுப்புகள், நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்கும் காலமிது. நம்பிக்கையுடன் புத்தாண்டு தரும் பரிசுகளுக்காக காத்திருங்கள். வீடு வாங்கும் ப்ராப்தங்கள் அதிகம்.மூதாதையர்களின் சொத்து உரியவர்களுக்கு வந்து சேரும் நன்மை நடக்கும்.
வாழ்வின் வரம் தரும் தருணங்கள்
இந்த ராசியில் உள்ள ஆண்களுக்கு புத்திர பாக்கியம் உருவாகும் வாய்ப்புகள் அதிகம்; காதல் மலர வாய்ப்புள்ளது. திருமணம் கைகூடும் வாய்ப்புகள் அதிகம்.
முயற்சிகள் வெற்றி பெறும்
மூன்றாம் இடம் என்று சொல்லக்கூடிய உபஜய ஸ்தானஸ்த்தில் மிக முக்கியமானதாக சொல்லக்கூடிய சனி கிரகம் இருப்பதால், முயற்சிகள் அனைத்தும் கைக்கூடும் வாய்ப்புகள். மெதுவாக நடப்பதுபோல் இருந்தாலுன், முயற்சிகள் வெற்றி பெறுவது உறுதி. அச்சம் வேண்டாம். நடப்பவைகள் நன்மைக்கே என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
முயற்சிகள் மேற்கொள்ளும்போது, அது நிறைவேற காலமெடுப்பது போல தெரிந்தாலும் கவலை வேண்டாம். இது உங்களின் முயற்சிகள் வெற்றி பெறும் காலம் என்பதை நம்புங்கள். நம்பிகையுடன் நடைபோடுங்கள்.
சதய நட்சத்திர நேயர்களுக்கு, பெயரும் புகழும் வந்துசேரும் காலமிது.
இந்தக் காலகட்டங்களில் மூக்கு,தொண்டை, காது சம்பந்தப்பட்ட உபாதைகள் ஏற்படும். சற்று கவனமுடன் இருங்கள். ஆனால், பெரிதாக ஏதும் நடக்காது. சளி பிரச்சனைகள் ஏற்படும். நுரையீரல் தொடர்பான பிரச்சனைகளும் ஏற்பட வாய்ப்புள்ளது. கொஞ்சம் கவனமுடன் இருக்க வேண்டும்.
குரு-ராகுவின் சஞ்சாரம் நிறைய நன்மைகளை வழங்கினாலும், சில கெடுதல்களும் உண்டு என்பதை மனதில் நிறுத்துங்கள்.
தொழில் மேம்பாடு
வீட்டில் தேவையில்லாத சஞ்சலங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. கவனமுடன் இருக்கவும். வங்கி துறையில் வேலைவாய்ப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆசிரியராகும் வாய்ப்புகள் அதிகம்.ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். தொழிலில் சிறு சிறு பாதிப்புகள் இருந்தாலும், எல்லாம் சரியாகிவிடும்.
கெமிக்கல் துறையில் வேலை கிடைக்கும். புதிய தொழில் வாய்ப்புகள் கிடைக்கும். தொழில் தொடங்கும் பாக்கியம் உள்ளது. வணிக ரீதியாக மேம்பாடுகள் நடக்கும் நேரமிது. பொருளாதாரம் ஏற்றம் பெறும். தொழில் முன்னேற்றம் உண்டு. தாயார் உடல்நிலையில் கவனம் செலுத்த வேண்டியது முக்கியது.
வெளிநாட்டில் குடியுரிமை வாய்ப்பு:
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த தமிழ்ப் புத்தாண்டு பல நன்மைகளை வழங்க உள்ளது. வெளிநாட்டில் குடியுரிமை பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டு.
ஆன்மீகம் நாட்டம் அதிகரிக்கும்
ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும்.ஞானம் சார்ந்த விசயங்களில் தெளிவு பிறக்கும். குழந்தைகளின் உடல்நலனிலும் கவனம் தேவை. மற்றபடி, புதிய பாதை, பயணம், வாய்ப்புகள் என நன்மைகள் உண்டாகும் காலமிது.
தனுசு ராசி உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்திருப்பவர்களுக்கு பண வரவு உண்டு. நினைத்த காரியங்கள் நடக்கும்.
பூராட நட்சத்திரக்காரர்களுக்கும் பெரிதாக பாதிப்புகள் ஏதுமில்லை. வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் நடைபெறும். குழந்தை பேறு கிட்டும். பெண்கள் குழந்தைகள் வாரிசு உருவாரும். வெளிநாடு செல்லக் கூடியா வாய்ப்பு உண்டு. இடமாற்றம் உண்டாகும்.
மூல நட்சத்திரம் தொழிலில் சின்ன சரிவு ஏற்படும். உத்யோக மாற்றம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
தனுசு ராசி நேயர்களுக்கு பொருளாதாரத்தில் ஏற்றம் உண்டாகும். குடும்பத்தில் சிறிய சிக்கல்கள் ஏற்படும் வாய்ப்புள்ளதால் கவனமாக இருக்க வேண்டும்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

