Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!! சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
Sukran Peyarchi 2024 in Tamil: ”சுக்கிரன் பொதுவாக மகிழ்ச்சியை தரக்கூடிய கிரகம். அதனால் அவர் நமக்கு நன்மையே செய்வாரே தவிர தீமையை செய்ய மாட்டார்.
அன்பார்ந்த வாசகர்களே சுக்கிரன் மிதுனத்தில் பெயர்ச்சியாகி கொண்டிருந்த சமயத்தில் பலருக்கு ஏற்றத்தையும் சிலருக்கு முன்னேற்றத்தையும், இன்னும் சிலருக்கு சறுக்கல்களையும் கூட தந்து இருக்க கூடும். ஆனால் சுக்கிரன் பொதுவாக மகிழ்ச்சியை தரக்கூடிய கிரகம். அதனால் அவர் நமக்கு நன்மையே செய்வாரே தவிர தீமையை செய்ய மாட்டார். குறிப்பாக சுக்கிரன் உங்கள் ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்து விட்டால் அவர் எங்கே பெயர்ச்சியானாலும் உங்களுக்கு நன்மைதான் செய்வார். ஒருவேளை உங்கள் ஜாதகத்தில் சுக்கிர நீச்ச கதியில் இருந்தால் வேலை சம்பந்தமாக உங்களுக்கு முன்னேற்றத்தையும் பெண்கள் வழியில் சில இரக்கங்களையும் கொடுத்திருக்க கூடும். ஆனால் தற்போது கடகத்தில் பெயர்ச்சியாக போகும் சுக்கிரனும் அனைவருக்கும் நன்மையை தருவார் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
காரணம் கடகம் சுக்கிரனுக்கு பிடித்த வீடு. குறிப்பாக சுக்கிரனின் வீடான ரிஷபத்தில் சந்திரன் உச்சம் ஆவார். அதே போல சுக்கிரனும், சந்திரனும் ஏறக்குறைய நண்பர்கள் தான். வாசனை திரவியங்கள், குளிர்பானங்கள், பன்னீர் சோடா போன்றவை கூட கடகத்தில் இருக்கும் சுக்கிரன் குறிக்கும்.. ஒருவரின் ஜாதகத்தில் கடகத்தில் சுக்கிரன் இருந்து விட்டால் ஒரு குளிர்சாதன பெட்டியை வைத்துக்கொண்டு அதில் பல குளிர்பானங்களை வாங்கி கடையை நடத்தி பெரிய அளவிற்கு அவர்கள் பிரபலமாவார்கள். பணக்காரர்கள் கூட ஆவார்கள். இந்த மாதிரியான சூழ்நிலையில் கடல் கடந்து போய் வணிகம் செய்து வருவது, வெளிநாட்டில் வேலை செய்வது சுக்கிரனின் காரகத்துவங்கள் ஆன ஃபுட் ஐட்டம்ஸ் அதாவது உணவு தின்பண்டங்கள் ஏற்றுமதி செய்வது வெளிநாட்டிற்கு துணிகளை ஏற்றுமதி செய்வது, இறக்குமதி செய்வது போன்ற வேலைகளை செய்வார்கள். இப்படியான சுக்கிரன் உங்கள் வாழ்க்கையில் உங்கள் ராசிக்கு என்ன செய்யப்போகிறது பார்க்கலாம்.....
மேஷ ராசி:
மேஷ ராசிக்கு சுக்கிரன் இரண்டாம் அதிபதி மற்றும் ஏழாம் அதிபதி. குடும்ப அதிபதி மற்றும் களத்திர ஸ்தான அதிபதி நிச்சயமாக ஒரு யோக காரகன் தான். இப்படி இருக்க சுக்கிரன் கடகத்தில் இருக்கிறார். நான்காம் வீட்டில் நல்ல நிலையில் அதுவும் உங்கள் ராசிக்கு சுக ஸ்தானத்தில் கேட்க வேண்டும். புதிய வாகனத்தை வாங்கி மகிழ போகிறீர்கள். பழைய வாகனத்தை பழுது பார்ப்பீர்கள். இருக்கின்ற நிலத்தை நீங்கள் மேலும் விரிவுபடுத்தி புதுநிலம் வாங்க வாய்ப்புண்டு. வீடு பராமரிப்பீர்கள் புதிதாக அறைகளை கட்டுவீர்கள் போன்ற பிரமாதமான பலன்கள் உங்களுக்கு ஏற்படும் வயிறு சம்பந்தமான தொந்தரவு இருந்தவர்களுக்கு தற்போது நிவர்த்தியாகும் மருந்து மாத்திரைகள் மூலமாக உடல்நிலை சரியாகும். தாயாரின் உடல்நிலை சீராகும்...
ரிஷப ராசி :
அன்பார்ந்த ரிஷப ராசி வாசகர்களே! உங்களுடைய ராசிக்கு மூன்றாம் இடத்தில் சுக்கிரன் நல்ல நிலையில் தான் இருக்கிறார். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். தடைகள் விலகும். வெளியூர், வெளிநாடு போன்றவை சாதகமாக முடியும். இருக்கின்ற இடத்தை விட்டு வேறு இடத்திற்கு நகர்வதற்கான வாய்ப்புகள் உண்டு. இரண்டாம் அதிபதி புதனும், உங்களுக்கு நல்ல வலிமையான நிலையில் தான் இருக்கிறார். குறிப்பாக உங்கள் ராசிக்கு ராசி அதிபதி மூன்றாம் வீட்டில் இருப்பது ஏற்கனவே உங்கள் பேச்சுக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் உள்ளது, அதைவிட பன்மடங்கு உயரும் எதார்த்தங்களோடு பழகிக் கொள்ள நீங்கள் விருப்பப்படுவீர்கள். ஆனால் தற்போது அதையும் தாண்டி கனிவான பேச்சு உங்களிடத்தில் தென்படும். மற்றவர்களுக்கு ஆறுதல் கூறுவீர்கள். கடன் சுமை குறையும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த நண்பரை சந்திப்பீர்கள்...
மிதுன ராசி :
அன்பார்ந்த மிதுன ராசி வாசகர்களே! உங்களுடைய ராசிக்கு இரண்டாம் இடத்தில் கடக ராசியில் சுக்கிரன் இருப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். வங்கி கணக்கில் சேமிப்பு உயரும். ஏற்கனவே பழைய பாக்கியை நீங்கள் அடைப்பீர்கள் வருமானம் உயரும், குடும்பத்தோடு சுற்றுலா சென்று வருவீர்கள், பிரிந்த தம்பதிகள் ஒன்று கூடுவார்கள். கடன்களை அடைக்க வழி பிறக்கும். தொழில் மாற்றம் மற்றும் இடம் மாற்றம் உண்டு. ஆகையால் இருக்கின்ற இடத்தை விட்டு வெகு தொலைவில் செல்கிறோம் என்று எண்ண வேண்டாம். இடப்பெயற்சி உங்களுக்கு நல்ல மாற்றத்தை உண்டாக்கும்.
கடக ராசி :
அன்பார்ந்த கடக ராசி வாசகர்களே! உங்களுடைய ராசியிலேயே சுக்கிரன் அமர்கிறார். பதினொன்றாம் அதிபதி ராசியில் அமர்வது மிகப்பெரிய செல்வத்தைக் கொண்டு வரும். போதாத குறைக்கு, மூத்த சகோதரர்களின் ஆதரவு கிடைக்கும். பெரியோர்களின் ஆதரவு கிட்டும், யாரையும் நம்பி ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம், வெளியூர் வெளி மாநிலம் சென்று படிக்க வேண்டும் என்று இருந்த கடக ராசி வாசகர்களுக்கு இதோ அந்த வாய்ப்பு, குறிப்பாக 12-ம் வகுப்பு முடித்துவிட்டு டிகிரிக்காக காத்திருப்பதற்கு இந்த மாதம் நல்ல ஏற்றமான மாதமே. ராசியிலேயே சுக்கிரன் அமர்வது செல்வம் மற்றும் செல்வாக்கை உயர்த்தும்.
சிம்ம ராசி :
அன்பார்ந்த சிம்ம ராசி வாசகர்களே 12ஆம் இடத்தில் சுக்கிரன் உங்களுக்கு மூன்றாம் அதிபதி மற்றும் பத்தாம் அதிபதி. தொழில் ரீதியான பிரயாணங்கள் இருக்கும். வேலையில் சற்று அலைச்சல் இருந்தாலும் ஆதாயம் உண்டு. ஏற்கனவே பத்தாம் இடத்தில் குரு பகவான் அமர்ந்திருக்க தற்போது பத்தாம் அதிபதி சுக்கிரன் 12 ஆம் வீட்டில் இருக்க, இடம் மாற்றம் உண்டாகும். அப்படி நீங்கள் இடம் மாறுவதன் மூலம் உங்களுக்கு நன்மையே பிறக்கும். மருத்துவமனைக்கு சென்று அதன் மூலம் நீங்கள் குணமடையலாம். நல்ல உறக்கம் வரும். வாழ்க்கையில் அடுத்த கட்ட நகர்வுக்காக காத்திருப்பவர்களுக்கு இதுதான் வாய்ப்பு.
கன்னி ராசி:
அன்பார்ந்த கன்னி ராசி வாசகர்களே! உங்களுடைய ராசிக்கு 11 ஆம் வீட்டில் சுக்கிரன் லாபாதிபதி. லாபத்திலேயே அமர்வுதான். கிட்டத்தட்ட பல வருடங்களாக நீங்கள் பணத்திற்காக எதிர்பார்த்துக் காத்திருந்தால் அந்த பணம் தற்போது கைக்கு வரும். சொத்து சம்பந்தமான பிரச்சனைகளில் இருந்து தீர்வு கிடைக்கும். மாட மாளிகையில் வீட்டைக் கட்டி கிரகப்பிரவேசம் செய்வீர்கள். கன்னி ராசியை பொறுத்தவரை ஏழாம் வீட்டில் ராகு அமர்ந்து, திருமண வயதிற்கு உடையவர்களுக்கு வரன் அமையாமலே தள்ளி போக செய்து கொண்டிருப்பார். தற்போது அந்த நிலை மாறி சுக்கிரன் கடகத்தில் அமரும்போது நல்ல வரனை வீட்டு வாயில் தேடி வர வைப்பார். நீங்கள் எதிர்பார்க்காத பல நன்மைகள் நடக்கப் போகிறது இந்த சுக்கிர பெயர்ச்சியில்.
துலாம் ராசி:
அன்பார்ந்த துலாம் ராசி வாசகர்களே! உங்களுடைய ராசிக்கு பத்தாம் வீட்டில் சுக்கிரன். ராசி அதிபதி பத்தாம் வீட்டில் அமர்வது நிச்சயமாக வியாபாரத்தில் முன்னேற்றத்தை உண்டாக்கும். தொழிலில் இரட்டிப்பு லாபம் கிடைக்க வழி வகை செய்யும். நீண்ட நாள் நண்பரை சந்தித்து மகிழ்வீர்கள். அடிவயிறு சம்பந்தமான தொந்தரவுகள் விலகும். புதிய முயற்சிகளில் ஈடுபடலாம் வெற்றியை தரும், ஏற்கனவே ஒரு தொழிலை பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு இரு தொழிலில் லாபம் உண்டாகும். மேலதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள். அஷ்டமாதிபதி சுக்கிரன் பத்தாம் வீட்டில் அமர்வது இடமாற்றத்தை தொழில் மாற்றத்தை உண்டாக்கும்
விருச்சிக ராசி:
அன்பார்ந்த விருச்சக ராசி வாசகர்களே! உங்களுடைய ராசிக்கு 9 ஆம் வீடான பாக்கியஸ்தானத்தில் சுக்கிரன் அமர்கிறார். திருமண பேச்சு வார்த்தைகள் நல்லபடியாக முடிவடையும். முதல் திருமணம் சோபிக்காதவர்களுக்கு இரண்டாம் திருமணத்திற்கான வரன்கள் வாயில் தேடி வரும், புத்திர பாக்கியத்திற்கான வாய்ப்புகள் உண்டு. கூட்டு வியாபாரத்தின் மூலம் லாபம் கிடைக்கும், நண்பர்களின் ஆதரவு உண்டு, அரசு உத்தியோகத்திற்காக காத்திருக்கும் அன்பர்களுக்கு தற்போது அதற்கான நல்ல தகவல்கள் வரும். ஏழாம் வீட்டில் குரு பகவான் அமர்ந்து ராசியை பார்ப்பதால் தேகம் பொலிவு பெறும். வியாதிகள் விலகும்
தனுசு ராசி:
அன்பார்ந்த தனுசு ராசி வாசகர்களே! உங்களுக்கு சுக்கிரன் அஷ்டமஸ்தானம் ஆகி எட்டாம் இடத்தில் அமர்கிறான். திடீர் அதிர்ஷ்டங்கள் தன வரவுகள் உண்டாகப் போகிறது. யார் உங்களுக்கு பணம் கொடுக்கப் போகிறார்கள் என்று தெரியாத அளவிற்கு பணம் கொட்டப் போகிறது. எட்டாம் இடத்தில் சுக்கிரன் அமர்ந்து உங்களுக்கு மிகப்பெரிய யோகங்களை செய்யப் போகிறார். தனுசு ராசிக்கு சுக்கிரன் ஆறாம் வீட்டிற்கும், பதினொன்றாம் வீட்டிற்கும் அதிபதி. அவர் அஷ்டமஸ்தானத்தில் செல்வது சிலருக்கு லாட்டரி யோகத்தை கூட கொண்டு வரும். நிச்சயமாக நீங்கள் ஒரே நாளில் கோடீஸ்வரராக கூட ஆகலாம். எதிரிகள் இருந்த இடம் தெரியாமல் போவார்கள். மலையளவு கடன் இருந்தாலும் கடுகு அளவு சிரித்துப் போகும்
மகர ராசி:
அன்பார்ந்த மகர ராசி வாசகர்களே! உங்களுடைய ராசிக்கு ஐந்தாம் அதிபதி ஏழாம் வீட்டில் இருக்கிறார். பூர்வீகம் தொடர்பான நல்ல தொடர்பு ஏற்படும். உறவினர்களோடு மகிழ்ச்சியாக நேரம் செலவிடுவதற்கான காலகட்டம். 5 ஆம் அதிபதி ஏழாம் வீட்டில் இருப்பது புத்திர பாக்கியத்தை மென்மேலும் அதிகப்படுத்தும். மழலை செல்வங்கள் வீட்டில் உருவாகும். நீண்ட நாட்களாக காத்திருந்த நல்ல காரியங்கள் செவிக்கு வந்து சேரும். தொழில் ரீதியான முன்னேற்றங்கள் ஏற்பட போகிறது. குறிப்பாக சரியான பணமில்லாமல் ஒரு தொழிலில் முடங்கி கிடந்த உங்களுக்கு புதிய தொழில் வாய்ப்புகள் கிடைக்கும். அதன் மூலம் பணவரவு உண்டு.
கும்ப ராசி:
அன்பார்ந்த கும்ப ராசி வாசகர்களே! உங்களுடைய ராசிக்கு நல்ல காலம் பிறந்து விட்டது. ஆறாம் வீட்டில் சுக்கிரனை அமர்ந்து பல திடீர் அதிர்ஷ்டங்களை உங்களுக்கு கொண்டு வரப் போகிறார். குறிப்பாக சொல்லப்போனால் ஒன்பதாம் அதிபதி ஆறாம் வீட்டில் அமர்வது. மற்றவர்களின் உதவியால் வியாபாரத்தில் முன்னேற்றங்கள் படிப்படியாக வரப்போகிறது. ஷேர் மார்க்கெட் பங்கு சந்தை போன்றவற்றின் மூலம் லாபம் ஏற்படும். நீண்ட நாட்களாக உடலில் தங்கி இருந்த நோய்கள் விலகும். மறைமுக எதிரிகள் கூட உங்களுக்கு இல்லாமல் போவார்கள். தொழிலில் நல்ல மாற்றம் உண்டாகும். உயர் அதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள்.
மீன ராசி:
அன்பார்ந்த மீன ராசி வாசகர்களே! உங்களுடைய ராசிக்கு ஐந்தாம் வீட்டில் சுக்கிரன். பூர்வீக ஸ்தானத்தில் அமரும் சுக்கிரன் நல்ல ஞானத்தையும், அறிவையும் கொடுப்பார். எந்த இடத்தில் எதை பேச வேண்டும். யாரிடத்தில் என்ன சொல்ல வேண்டும் போன்ற சமயோசித்த எண்ணங்களை ஏற்படுத்துவார். சுக்கிரன் பணத்தைக் குறிப்பதால் மூன்றாம் அதிபதி ஐந்தாம் வீட்டில் பணரீதியாக நீங்கள் எடுத்து வைக்கும் காரியங்கள் வெற்றி அடையும். கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். பெண்கள் வழி ஆதாயம் உண்டு. பணம் கையில் இல்லை சீக்கிரமாக செலவாகிறது என்று இருந்தவர்களுக்கு ஜூலை மாதம் வரை உங்களுக்கு சுக்கிரன் கடகத்தில் பயணிப்பதால் வங்கி கணக்கில் பணம் எப்பொழுதும் புழங்கும். மீன ராசிக்கு எட்டாம் அதிபதியும் சுக்கிரன் என்பதால் நிச்சயமாக திடீர் அதிர்ஷ்டங்களால் திக்கு முக்காடுவீர்கள். உறவினர்களுடன் மகிழ்ச்சியாக நேரம் செலவிட காலகட்டம். அரசு வழி ஆதாயம் உண்டு. உயர் அதிகாரிகளின் பாராட்டை பெறக்கூடும். மொத்தத்தில் மீன ராசிக்கு சுக்கிர பெயர்ச்சி அமோகமாக இருக்கிறது.