Saturn Transit: சனியின் நட்சத்திர பெயர்ச்சி! இந்த 5 ராசிகளுக்கு கோடீஸ்வர யோகம்.. உங்கள் ராசி இதில் இருக்கா?
Saturn Transit: சனி பகவானால் அடுத்த 100 நாட்களுக்கு அதிர்ஷ்டத்தையும், வாழ்க்கையில் மிகப்பெரிய நேர்மறை மாற்றங்களையும் அனுபவிக்கப் போகும் 5 ராசிகள் எவை.

சனியைப் போல கொடுப்பவரும் இல்லை; சனியைப் போல கெடுப்பவரும் இல்லை பழமொழி உண்டு. இந்நிலையில் ஜோதிட சாஸ்திரத்தில் நவக்கிரகங்களில் மிக முக்கிய கிரகமாகவும், "நீதிமான்" அல்லது "கர்மகாரகன்" என்றும் சனி பகவான் போற்றப்படுகிறார். இவர் ஒரு ராசியில் சுமார் இரண்டரை ஆண்டுகள் வரை பயணிப்பதால், இவரது பெயர்ச்சி மற்றும் நட்சத்திர மாற்றங்கள் மனித வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
சனி பகவான்
தற்போது சனி பகவான் மீன ராசியில் வக்ர நிலையில் பயணித்து வருகிறார். சமீபத்தில் ரேவதி நட்சத்திரத்திலிருந்து உத்திரட்டாதி நட்சத்திரத்திற்கு இவர் பெயர்ச்சியாகியுள்ளார். இந்த நட்சத்திரத்தில் சனி பகவான் 2027-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை தொடர்வார். சனியின் இந்த நட்சத்திரப் பெயர்ச்சி சில சவால்களைத் தந்தாலும், சில ராசிக்காரர்களுக்கு அள்ள அள்ளக் குறையாத செல்வத்தையும் வாரிக் வழங்கவுள்ளது. குறிப்பாக, உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பயணிக்கும் சனி பகவானால் அடுத்த 100 நாட்களுக்கு அசைக்க முடியாத அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகும் 5 ராசிகள் என்னென்ன என்பதைபார்ப்போம்.
இதையும் படிங்க: Guru - Ketu Conjunction: தீபாவளி திருநாளில் குரு-கேது சேர்க்கை.. கோடீஸ்வர யோகம் பெறப்போகும் 4 அதிர்ஷ்ட ராசிகள் எவை?
ரிஷபம்
ரிஷப ராசியினருக்கு தொழிலிலும் உத்தியோகத்திலும் இதுவரை இருந்து வந்த தடைகள் அனைத்தும் சூரியனைக் கண்ட பனி போல விலகும். வேலையில் சிறப்பான மற்றும் படிப்படியான வளர்ச்சி காணப்படும். வியாபாரத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் புதிய வாய்ப்புகள் கதவைத் தட்டும். கூடுதல் பொறுப்புகள் அதிகரிக்காலும் உங்கள் கடின உழைப்பும் துணிச்சலான முடிவுகளும் எதிர்காலத்தில் பெரும் நிதி லாபத்தைப் பெற்றுத் தரும்.
மிதுனம்
மிதுன ராசியினருக்கு நீண்ட நாட்களாக இருந்து வந்த மன உளைச்சல், குழப்பங்கள் மறைந்து மன அமைதி கிடைக்கும். குடும்பத்திலும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் நிலவி வந்த மனக்கசப்புகள் தீர்ந்து சுமுகமான சூழல் நிலவும். நிதி விஷயங்களில் பெரிய முடிவுகளை எடுக்கும் போது மட்டும் சற்று யோசித்து செயல்படுவது நல்லது. வேலைவாய்ப்பு தொடர்பான மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும். நீண்ட காலமாக அரைகுறையாக நின்றுபோன காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த 100 நாட்கள் தொழில் மற்றும் உத்தியோகத்தில் புதிய புரட்சி ஏற்படப்போகிறது. அலுவலகத்தில் உயரதிகாரிகளின் பாராட்டும் பூரண ஆதரவும் உங்களுக்குக் கிடைக்கும். வேலை மாற்றம் செய்ய காத்திருப்பவர்களுக்கு எதிர்பாராத நல்ல வாய்ப்புகள் தேடி வரும். சிலருக்குக் சம்பள உயர்வும், விரும்பிய பதவி உயர்வும் கிடைக்கும். நிதி நிலைமை முன்னேறி உங்களின் தன்னம்பிக்கையும் இரட்டிப்பாகும்.
மகரம்
மகர ராசியினருக்கு வரவிருக்கும் நாட்கள் எதிர்பார்க்காத வகையில் அற்புதமான மாற்றங்களை கொடுக்கப்போகிறது. வேலை செய்யும் இடத்தில் உரிய அங்கீகாரமும் பாராட்டும் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு, லாபகரமான புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.
புதிய வருமான வழிகள் திறப்பதால் உங்களின் நிதி நிலைமை முன்னேறும். நிலுவையில் இருந்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும்.
கும்பம்
கும்ப ராசியினருக்கு நீண்ட நாட்களாக தடைப்பட்டிருந்த பிரச்சனைகளும் படிப்படியாக குறையத் தொடங்கும். ஏழரை சனியின் இறுதிக்கட்டம் (பாத சனி) நடப்பதால், சில சிறிய தடைகள் வரலாம். எனினும், நிதானத்துடனும் பொறுமையுடனும் செயல்பட்டால் பெரிய பாதிப்புகள் ஏதுமின்றி பெரும் நன்மைகளை பெறலாம். தொழிலை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதற்கான திட்டங்கள் கைக்கூடி வரும்.
ட்ரெண்டிங் செய்திகள்






















