மேலும் அறிய

Sani Bhagavan: கும்பத்தில் பின்னோக்கி செல்லும் சனி! தொழிலில் உச்சத்தை தொட போகும் 2 ராசிகள்!!! சனியின் ஆட்டம் ஆரம்பம்!!!

கும்ப ராசியில் தற்போது நிலை கொண்டிருக்கும் சனி பகவான்(Sani Bhagavan) பின்னோக்கி செல்ல இருப்பதால் சில ராசிகளில் மாற்றம் ஏற்பட உள்ளது.

அன்பார்ந்த abp நாடு வாசகர்களே, சனிபகவான் கும்ப ராசியில் 30 வருடங்களுக்கு ஒரு முறை சஞ்சாரம் செய்கிறார். அப்படி செய்யும் காலத்தில்  சில மாதங்களுக்கு பின்னோக்கி செல்வது வழக்கம். அதேபோலத்தான் தற்போது சனி பகவான் பின்னோக்கி செல்ல ஆரம்பித்திருக்கிறார். இப்படியான சூழ்நிலையில் சில ராசிகளுக்கு மிக ஏற்றமான பலன்களையும், மற்ற ராசிகளுக்கு பாதகமான பலன்களையும் கொண்டு வரும். ஆனால் கோள்சாரத்தில் நகரம் கிரகங்களை வைத்து உங்கள் வாழ்க்கையில் 100% அப்படியே நடந்து விடும் என்பதை கணித்து விட முடியாது அதற்காக உங்களுடைய சுய ஜாதகத்தை ஒருமுறை  நல்ல ஜோதிட நிபுணர்களிடம் கலந்து ஆலோசித்து நடப்பவற்றை தெரிந்து கொள்வது நல்லது.

சனி பகவானின் பார்வைகள்:

ஒவ்வொரு ராசியிலும் இரண்டரை ஆண்டுகள் பயணிக்கும் சனி பகவான்  தனக்கே உண்டான  நீதி வழங்கும் தன்மையோடு ஒவ்வொரு ராசியினருக்கும் நல்லவைகளை அல்லது தீயவைகளையோ வாரி வழங்குவார்.   உங்களுடைய ஜாதகத்தில் கிரகங்கள் நன்றாக அமைந்து அந்த நன்றாக அமைந்த கிரகங்களின் தசையோ, புத்தியோ, அந்தரமோ நடக்குமாயின்  சனிபகவான் உங்களை ஒன்றும் செய்து விடமாட்டார். அதுவும் கருமத்தின் அடிப்படையில் தான் நடக்கிறது.  இருக்கட்டும் சனியை பற்றி பெரிதாக நாம் தெரிந்து கொள்ளலாம். ஆனால்  அவர் நல்லவருக்கு நல்லவர், கெட்டவருக்கு கெட்டவர் என்று கூறலாம். தற்போது சனியினால் உச்சத்தை தொடப் போகும் நான்கு ராசிகளைப் பற்றி தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

மேஷ ராசி :

அன்பார்ந்த மேஷ ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு இதனால் வரையில் 11ஆம் வீட்டில் பயணம் செய்து வந்த சனி பகவான் தற்போது பத்தாம் வீட்டை நோக்கி நகர்கிறார். இது ஒரு நல்ல நகர்வு. சனி பொறுத்தவரை மேஷ ராசிக்கு மிகுந்த பிடித்தமான ஒரு கிரகம்.  ஆனால் மேசத்தில் சனி நீச்சமடைவார். ஒருவர் எழுந்து நின்று நடப்பதற்கு சனி தான் காரணம். அந்த பலத்தை கொடுப்பவர் சனி.  ஒருவர் சோர்வாகத் தன்னை கருதுகிறார் அல்லது தன்னை ஒரு சோம்பேறியாக கருதுகிறார் என்றால், அவருடைய உடம்பில் சனியின் பாதிப்பு இருக்கிறது என்று அர்த்தம். 

மேஷ ராசியாகிய உங்களது வீட்டில் சனி நீச்சம் அடைவார். அந்த ராசிக்கு வரும்போது சனி அவருடைய பலத்தை இழக்கிறார். ஆனால், நீச்ச பங்க ராஜயோகம் என்ற விதியின் அடிப்படையில் செவ்வாய் ஆட்சி பலத்தோடு  சனி உடன் அமர்ந்தால் மிகப்பெரிய ராஜயோகத்தை கொண்டு வருவார் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.   தற்போதும் கூட சனி பதினொன்றாம் வீட்டில் இருந்து  பத்தாம் வீடான தன்னுடைய ஆட்சி வீட்டை நோக்கி நகர். 

மேஷ ராசி அன்பர்கள் சுறுசுறுப்போடு இருந்தால் நிச்சயமாக சனி உங்களை எதுவும் செய்து விட முடியாது.   மேஷம் என்பது மலைகளைக் குறிக்கக்கூடிய இடம், மேடான பகுதி  உயர்வான பகுதி. மனிதர்கள் அண்ணாந்து பார்க்கக்கூடிய பகுதி ராஜாக்கள் வசிக்கக் கூடிய பகுதி அதனால்தான் சூரியன் உச்சத்தில் இருக்கிறது மேஷ ராசி. சனியை பொருத்தவரை  அவர் ஒரு உழைப்பாளி.  தொழிலாளர்களை குறிக்கும்  நன்றாக வேலை செய்பவர்களை குறிக்கும்  உடல் உழைப்பை போட்டு  வேலைகளை செய்து அதன் மூலம்   வருவாய் ஈட்டுவதை குறிக்கும்.  

மேஷம்  ராஜாங்கம் என்றால் சனி.  ராஜாவுக்கு கீழே வேலை செய்யும் தொழிலாளர். அதனால் தான் மேஷ ராசியில் சனியின் பலம் குறைகிறது.  ஆனால் மேஷ ராசிக்கு பத்தாம் வீடு சனியின் வீடாக வருகிறது அதுவும் தொழிலை   குறிக்கக்கூடிய வீடாக வருகிறது. ஒரு மேஷ ராசி அன்பர்  இதுவரை தான் செய்து வந்த தொழிலில் என்ன விதமான தவறுகளை செய்திருக்கிறோம்? அதை எப்படி சரி செய்து கொள்ளலாம்? என்று சிந்திப்பதற்கான காலகட்டம்.

யாரை நம்பி நீங்கள் பணம் போட்டீர்களோ? அந்த பணம் எப்படி ஏமாந்தோம்? என்பதை கணக்கிட்டு சரியான பாதையை நோக்கி தற்போது பயணிக்க போகிறீர்கள். உற்றார் உறவினர்களின் ஆதரவு இல்லாமல் தனித்து வளர்ந்த உங்களுக்கு தற்போது சனி கர்மக்காரனாக பத்தாம் வீட்டில் அமர்வது மிகப்பெரிய யோகத்தை தான் கொண்டு வரப் போகிறது.  ஒரு இடத்தில் அமர்ந்திருந்து வேலை பார்த்தது போதும்  எழுந்து ஓடுவோம் வருவது வரட்டும் என்று தற்போது நகரப் போகிறீர்கள்.  புதிய வேலைவாய்ப்புகள் உங்களைத் தேடி வரும்.

எவ்வளவு பெரிய ப்ராஜெக்ட் ஆக இருந்தாலும் உங்களை நம்பி உயர் அதிகாரிகள் கொடுப்பார்கள். இதற்கு முன்னால் நீங்கள் செய்த தவறுகளை சரி செய்து கொண்டு,  நன்றாக பயணிக்க போகிறீர்கள்.   உற்றார் உறவினர்களோடு நேரம் செலவிடுவதற்கான காலகட்டம் தான் இது. பணம் சம்பாதிப்பது என்று முடிவு எடுத்து விட்டீர்கள்  அதற்கான உழைப்பை தற்போது போடப் போகிறீர்கள்.  இதற்கான பலனை நவம்பர் மாதத்திற்கு பிறகு அனுபவிக்கப் போகிறீர்கள்.  ஏதேனும் வழக்குகளில் நீங்கள் சிக்கி இருந்தால் கூட அதிலிருந்து சுலபமாக வெளியில் வருவீர்கள்.  இதனால் வரையில் நீங்கள் செய்த புண்ணியத்தின் பலனை தற்போது பத்தாம் இடத்தை நோக்கி பயணிக்கும் சனி பகவானால் அனுபவிக்க போகிறீர்கள் .   புதிய முயற்சிகள் வெற்றி அடையும்.

ரிஷப ராசி :

அன்பார்ந்த ரிஷப ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு 9 ஆம் வீட்டில் சனி பகவான்  ஆலோசனை பெறக்கூடிய இடம். வாழ்க்கையில் நீங்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற ஆலோசனை ஒன்பதாம் பாவம் தான் உங்களுக்கு வழங்கும்.  அந்த இடத்தில் தான் தந்தையாரை வைத்திருக்கிறார்கள்.  நீங்கள் எங்கிருந்து வந்தீர்களோ அந்த இடத்தை குறிக்கும்  உங்களுடைய  ஆசான்களை குறிக்கும்,   குருமார்களை குறிக்கும்,   வாழ்க்கையில் எவ்வளவு தவறு செய்தாலும் செய்த தவறு என்ன என்று சுட்டிக் காட்டும் நபர்களை குறிக்கும்,   உங்களுக்கு அறிவுரை கூறும் நண்பர்களை குறிக்கும்,   வாழ்க்கையில் வழிகாட்டியாய் இருக்கக்கூடிய உறவினர்களையும் சுற்றத்தாரையும் குறிக்கும்.

இப்படிப்பட்ட அற்புதமான இடத்தை நோக்கி சனி பகவான் பயணிப்பது உங்களுக்கு எவ்வளவு பெரிய மேன்மை பாருங்கள்.  பத்தாம் இடத்தில் சஞ்சாரம் செய்து வந்த சனி தற்போது ஒன்பதாம் வீட்டை நோக்கி  10 ஆம் வீடு என்பது என்ன? சலிக்காமல் உழைப்பது  சனி. உங்களுக்கு உற்ற நண்பர் எந்தவித தீங்கும் செய்ய மாட்டார் ரிஷப ராசிக்கு சனி பிடித்தமான ஒரு கிரகம். ஆகையால் தான் ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு சனி தசையோ புத்தியோ நடக்குமாயின் அதுவும் சனி நல்ல நிலையில் இருந்து விட்டால் நிச்சயமாக ஒரு விதத்தில் கோடீஸ்வரர்கள் ஆகிய தீரும்.

இந்த தருணத்தில் ஒன்பதாம் இடத்தை நோக்கி பயணிக்கும் சனி  உங்கள் ராசிக்கு  மிகப்பெரிய பண பாக்கியத்தைக் கொண்டு வருவார் காரணம் 9ஆம் இடம் என்பது பாக்கியஸ்தானம்.  வாழ்க்கையில் உங்களுக்கு பாக்கியமாக பெறக்கூடியவற்றைக் குறிக்கும்.   ஒரு வகையில் நீங்கள் அடுத்து என்ன செய்யலாம்  என்ற  சிந்தனையை சனி தற்போது கொண்டு வந்து கொடுப்பார். எப்படிப்பட்ட சூழ்நிலைகளில் நீங்கள் சிக்கி இருந்தாலும் அதிலிருந்து விடுபட போகிறீர்கள். ஒருவேளை உங்களுக்கு குடும்ப பிரச்சனை அதிகமாக இருக்கலாம்  உங்களுடைய வாழ்க்கைத் துணையிடம் சில போராட்டங்களை நீங்கள் சந்திக்கலாம்  சண்டை போட்டு வாழ்க்கையே வீணாகி விட்டது  என்ற நிலையிலும் நீங்கள் ஒரு வேலை இருக்கலாம்.

இப்படியான சூழ்நிலையில் ஒன்பதாம் இடத்தை நோக்கி பயணிக்கும் சனி  வாழ்க்கைத் துணையின் பிரச்சனையை ஓரளவுக்கு சமாளிக்க சக்தியை கொடுப்பார். ஒன்பதாம் இடத்தை நோக்கி பயணிக்கும் சனி  மூன்றாம் பார்வையாக  உங்களது லாப ஸ்தானத்தை பார்ப்பார். ஆனால் சனி முழுவதுமாக மகர ராசியில் வீற்றிருக்கப் போவதில்லை. ஆனால் மகர ராசியை நோக்கி பயணிக்க போகிறார்  இதன் காரணமாக நல்ல நிலையில் நீங்கள் இருப்பீர்கள் இருக்கப் போகிறீர்கள்.  நீண்ட நாட்களாக தள்ளிப்போன திருமண காரியங்கள் விரைவில் கைகூடும்.

குறிப்பாக லக்கனத்தில் இருக்கும் குரு பகவான் ஏழாம் வீட்டை பார்ப்பதால் நீண்ட நாட்களாக திருமணமாகாமல் 30 வயதை கடந்த ஆண் பெண் இருவருக்கும் தற்போது வரன்கள் வாயில் வந்து நிற்கும் அளவிற்கு சுப நிகழ்வுகள் வீட்டில் நடந்தேற போகிறது .   வெளிநாட்டுக்கு செல்ல வேண்டும் பணம் சம்பாதிக்க வேண்டும் வேலை கிடைக்க வேண்டும் கிடைக்குமா? கிடைக்காதா? என்ற ஏக்கத்தோடு இருக்கும் ரிஷப ராசி. அன்பர்களுக்கு  நிச்சயமாக வெளிநாட்டில் வேலை கிடைக்கும்  ஒன்பதாம் பாவம் என்பது நீண்ட தூர பிராயணங்களையும் வெகு தொலைவில் வசிப்பதையும் சுட்டிக்காட்டும்.  அதுவே மூன்றாம் பாவம் என்பது உள்ளூரில் நமக்கு நன்றாக தெரிந்த இடங்களில் சுற்றுவதை காட்டும்  இப்படியான சூழ்நிலையில் நமக்குத் தெரியாத அயல் நாட்டினர்  உங்களுக்கு அறிமுகமாக வாய்ப்புண்டு.   ஏற்கனவே வேலை பார்த்திருக்கும் உங்களுக்கு உத்தியோக உயர்வு கிடைக்குமா என்ற எண்ணத்தில் இருந்திருப்பீர்கள் அது நிச்சயம் நடக்கும்  ஆர்வத்தோடு காத்திருங்கள் அதிசயம் உண்டாகும்.   தற்போது போடுகின்ற உழைப்பு  எதிர்காலத்தில் உங்களுக்கு மிகப்பெரிய பலன்களை வாரி வழங்கப் போகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ரூ. 2,700 கோடி! பிரம்மிக்க வைக்கும் இசட் வடிவ சுரங்கப்பாதை! திறந்து வைத்த பிரதமர் மோடி!
ரூ. 2,700 கோடி! பிரம்மிக்க வைக்கும் இசட் வடிவ சுரங்கப்பாதை! திறந்து வைத்த பிரதமர் மோடி!
"நம்பிக்கை, பக்தி மற்றும் கலாச்சாரத்தின் சங்கமம்" மகா கும்பமேளா குறித்து பூரித்து போன பிரதமர் மோடி
பிராமண தம்பதிகள் 4 குழந்தைகள் பெற்றால்... - பம்பர் பரிசை அறிவித்த அமைச்சர்! ம.பியில் சலுகை!
பிராமண தம்பதிகள் 4 குழந்தைகள் பெற்றால்... - பம்பர் பரிசை அறிவித்த அமைச்சர்! ம.பியில் சலுகை!
Happy Pongal 2025 Wishes: பொங்கல் வாழ்த்துகள் சொல்லிட்டிங்களா.! உங்களுக்காக டாப் 8 வாழ்த்து புகைப்படங்கள்...
Happy Pongal 2025 Wishes: பொங்கல் வாழ்த்துகள் சொல்லிட்டிங்களா.! உங்களுக்காக டாப் 8 வாழ்த்து புகைப்படங்கள்...
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Velumani Vs Munusamy | கே.பி.முனுசாமி Vs எஸ்.பி.வேலுமணி.. பிரிந்து நிற்கும் MLA-க்கள்! தலைவலியில் EPSVijay Vs Ajith : அஜித்தை கண்டுக்காத விஜய் TN BJP New Leader : சென்னை வரும் கிஷன் ரெட்டி தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர்? பரபரக்கும் சீனியர்கள்!Nellai Elephant Gandhimathi : யானை காந்திமதிக்கு என்னாச்சு? கதறி அழுத பாகன்! சோகத்தில் நெல்லை மக்கள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரூ. 2,700 கோடி! பிரம்மிக்க வைக்கும் இசட் வடிவ சுரங்கப்பாதை! திறந்து வைத்த பிரதமர் மோடி!
ரூ. 2,700 கோடி! பிரம்மிக்க வைக்கும் இசட் வடிவ சுரங்கப்பாதை! திறந்து வைத்த பிரதமர் மோடி!
"நம்பிக்கை, பக்தி மற்றும் கலாச்சாரத்தின் சங்கமம்" மகா கும்பமேளா குறித்து பூரித்து போன பிரதமர் மோடி
பிராமண தம்பதிகள் 4 குழந்தைகள் பெற்றால்... - பம்பர் பரிசை அறிவித்த அமைச்சர்! ம.பியில் சலுகை!
பிராமண தம்பதிகள் 4 குழந்தைகள் பெற்றால்... - பம்பர் பரிசை அறிவித்த அமைச்சர்! ம.பியில் சலுகை!
Happy Pongal 2025 Wishes: பொங்கல் வாழ்த்துகள் சொல்லிட்டிங்களா.! உங்களுக்காக டாப் 8 வாழ்த்து புகைப்படங்கள்...
Happy Pongal 2025 Wishes: பொங்கல் வாழ்த்துகள் சொல்லிட்டிங்களா.! உங்களுக்காக டாப் 8 வாழ்த்து புகைப்படங்கள்...
”துளியும் இல்லாத பாதுகாப்பு” கீழ்ப்பாக்கம் பாலியல் சீண்டல் விவகாரம்.. ஈபிஎஸ் காட்டம்
”துளியும் இல்லாத பாதுகாப்பு” கீழ்ப்பாக்கம் பாலியல் சீண்டல் விவகாரம்.. ஈபிஎஸ் காட்டம்
ஆசிரியர்களே..ஜன.23-க்குள் இதை செய்ங்க; தொடக்கக் கல்வி இயக்குநரகம் உத்தரவு-  என்ன தெரியுமா?
ஆசிரியர்களே..ஜன.23-க்குள் இதை செய்ங்க; தொடக்கக் கல்வி இயக்குநரகம் உத்தரவு-  என்ன தெரியுமா?
அடடே... பிப்.28 முதல் எமிஸ் பணிகளில் இருந்து ஆசிரியர்களுக்கு விடுதலை- என்ன வேலையெல்லாம் கிடையாது?
அடடே... பிப்.28 முதல் எமிஸ் பணிகளில் இருந்து ஆசிரியர்களுக்கு விடுதலை- என்ன வேலையெல்லாம் கிடையாது?
"பெரியாரைப் பத்தி தப்பா பேசுறவங்க பிறப்பைச் சந்தேகப்பட்றேன்" கோபத்தின் உச்சியில் துரைமுருகன்
Embed widget