Rasipalan 23 June, 2023: மிதுனத்துக்கு ஓய்வு... சிம்மத்துக்கு நட்பு... உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்!
RasiPalan Today June 23: இந்த நாளில் எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாகக் காணலாம்.
நாள்: 23.06.2023 - வெள்ளிக்கிழமை
நல்ல நேரம்:
காலை 9.30 மணி முதல் காலை 10.30 மணி வரை
மதியம் 1.30 மணி முதல் மதியம் 2.30 மணி வரை
இராகு:
காலை 10.30 மணி முதல் மதியம் 12.00 மணி வரை
குளிகை:
காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை
எமகண்டம்:
மதியம் 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை
சூலம் - மேற்கு
மேஷம்
கலை சார்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில் ஆர்வம் அதிகரிக்கும். கடன்களை அடைப்பதற்கான உதவி கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். செயல்பாடுகளில் அனுபவ அறிவு வெளிப்படும். தாய்மாமன் வழியில் அனுசரித்துச் செல்லவும். நன்மை நிறைந்த நாள்.
ரிஷபம்
விவசாயம் சார்ந்த பணிகளில் மேன்மை ஏற்படும். உறவினர்களின் வழியில் ஆதாயம் உண்டாகும். புதிய மனை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். அரசு தொடர்பான செயல்களில் அனுகூலம் உண்டாகும். தனிப்பட்ட விஷயங்களை பகிர்வதை தவிர்க்கவும். வாகனம் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் கைகூடும். உத்தியோக பணிகளில் முக்கியத்துவம் அதிகரிக்கும். உற்சாகம் நிறைந்த நாள்.
மிதுனம்
புதிய முயற்சிகளுக்கு வித்தியாசமான செயல்பாடுகளின் மூலம் தீர்வு காண்பீர்கள். தடைப்பட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். மனதில் இருந்துவந்த குழப்பங்களுக்கு தெளிவு பிறக்கும். புதுவிதமான பொருட்களின் மீது ஆர்வம் உண்டாகும். மாமனார் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். மறதி தொடர்பான பிரச்சனைகள் குறையும். சிறுதூர பயணங்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். ஓய்வு நிறைந்த நாள்.
கடகம்
பெருந்தன்மையான செயல்பாடுகளின் மூலம் பலரின் நம்பிக்கையை பெறுவீர்கள். பார்வை தொடர்பான பிரச்சனைகள் குறையும். தனவரவுகளின் மூலம் கையிருப்புகள் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். அடமான பொருட்களை மீட்பதற்கான வாய்ப்புகள் அமையும். கணிதம் தொடர்பான துறைகளில் ஆர்வம் அதிகரிக்கும். வங்கி சார்ந்த துறைகளில் பொறுப்புகள் மேம்படும். சாதனை நிறைந்த நாள்.
சிம்மம்
எளிதில் முடியும் என எதிர்பார்த்த பணிகளில் அலைச்சல்கள் ஏற்படும். புதுமையான விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். பொருளாதாரம் சார்ந்த விஷயங்களில் சிந்தித்துச் செயல்படவும். உடன்பிறந்தவர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும். மறதி தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் உண்டாகும். வேலையாட்களை பற்றிய புரிதல் மேம்படும். நட்பு நிறைந்த நாள்.
கன்னி
உத்தியோக பணிகளில் இருந்துவந்த நெருக்கடியான சூழல் குறையும். பிறமொழி பேசும் மக்களின் அறிமுகம் கிடைக்கும். உலகியல் வாழ்க்கை பற்றிய புதுவிதமான கண்ணோட்டம் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். உணவு தொடர்பான துறைகளில் திறமைகள் வெளிப்படும். மறைமுகமான சில விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் அதிகரிக்கும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.
துலாம்
உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். விவசாயம் தொடர்பான பணிகளில் மேன்மை உண்டாகும். இணையம் சார்ந்த துறைகளில் ஆர்வம் அதிகரிக்கும். துறை சார்ந்த சில நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள். விவேகம் வேண்டிய நாள்.
விருச்சிகம்
வியாபார பணிகளில் புதுவிதமான மாற்றங்களின் மூலம் லாபம் உண்டாகும். எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாகும். மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கி அமைதி உண்டாகும். மருத்துவ பொருட்கள் தொடர்பான வியாபாரத்தில் லாபம் பெருகும். உயர் அதிகாரிகளின் மூலம் ஆதரவான சூழ்நிலைகள் ஏற்படும். கடந்த கால நினைவுகள் தோன்றி மறையும். வெற்றி நிறைந்த நாள்.
தனுசு
வாழ்க்கைத் துணையின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உண்டாகும். பழக்கவழக்கங்களில் சிறு சிறு மாற்றங்கள் ஏற்படும். பாதியில் நின்ற வேலைகளை செய்து முடிப்பீர்கள். புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். மனதளவில் புதிய தெளிவு பிறக்கும். வாழ்க்கை துணையுடன் சிறு தூர பயணம் சென்று வருவீர்கள். விவேகமான செயல்பாடுகள் மதிப்பை மேம்படுத்தும். குழப்பம் அகலும் நாள்.
மகரம்
தொழில் நிமிர்த்தமான பயணங்கள் கைகூடும். அரசு சார்ந்த பணிகளில் பொறுமை வேண்டும். விவேகமான செயல்பாடுகள் உங்கள் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும். உலகியல் நடவடிக்கையில் மாற்றங்கள் ஏற்படும். இடமாற்றம் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். வழக்கு சார்ந்த பணிகளில் கவனம் வேண்டும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும். சலனம் நிறைந்த நாள்.
கும்பம்
சுபகாரியம் தொடர்பான முயற்சிகளில் முன்னேற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். அதிர்ஷ்டகரமான சில வாய்ப்புகள் உண்டாகும். நண்பர்களின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். உயர் பதவிகளில் இருப்பவர்களின் அறிமுகம் உண்டாகும். நிறைவு நிறைந்த நாள்.
மீனம்
ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். எதிராக இருந்தவர்களை வெற்றி கொள்வீர்கள். தாய்மாமன் வழியில் அனுகூலம் ஏற்படும். கடன் சார்ந்த இன்னல்கள் குறையும். மனநிலையில் சில மாற்றங்கள் ஏற்படும். கூட்டு வியாபாரத்தில் பொறுமை வேண்டும். விளையாட்டு விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். பணி நிமிர்த்தமான செயல்களில் மாற்றமான சூழல் அமையும். இன்பம் நிறைந்த நாள்.