RasiPalan Today April 1: ரிஷபத்துக்கு அனுகூலம்.. கடகத்திற்கு எதிர்பார்ப்பு.. உங்கள் ராசிக்கு என்ன பலன் தெரியுமா..?
RasiPalan Today April 1: இந்த நாளில் எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாக காணலாம்.
நாள்: 01.04.2023 - சனிக்கிழமை
நல்ல நேரம்:
காலை 7.30 மணி முதல் காலை 8.30 மணி வரை
மாலை 3.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை
இராகு:
காலை 9.30 மணி முதல் காலை 10.30 மணி வரை
குளிகை:
காலை 6.00 மணி முதல் காலை 7.30 மணி வரை
எமகண்டம்:
மாலை 1.30 மணி முதல் மாலை 3.00 மணி வரை
மேஷம்
விளையாட்டு சார்ந்த பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். மனதில் புதுவிதமான சிந்தனைகளும், ஆசைகளும் தோன்றும். பயணங்களின் மூலம் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் புதுவிதமான அனுபவம் உண்டாகும். வழக்கு தொடர்பான விஷயங்களில் சாதகமான முடிவு கிடைக்கும்.
ரிஷபம்
உடன்பிறந்தவர்கள் வழியில் அனுகூலமான சூழ்நிலைகள் உண்டாகும். செய்கின்ற முயற்சியில் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும். வியாபாரத்தில் உள்ள சில நுணுக்கங்களை கற்று கொள்வீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் ஈடுபாடு அதிகரிக்கும். பாகப்பிரிவினைகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
மிதுனம்
தனவரவை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு மேம்படும். உடன்பிறந்தவர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும்.
கடகம்
புதிய முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். எழுத்து சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். மாணவர்களுக்கு கல்வியில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். இனம்புரியாத சில கனவுகளின் மூலம் மனதில் அமைதியின்மை உண்டாகும். திட்டமிட்ட பணிகளில் காலதாமதம் ஏற்படும். வெளியூர் பயணங்களின் மூலம் மாற்றங்கள் உண்டாகும்.
சிம்மம்
வெளியூர் தொடர்பான பணிகள் சாதகமாகும். ஆடம்பர செலவுகளின் மூலம் சேமிப்பு குறையும். விவாதங்களில் கவனம் வேண்டும். ரகசியமான செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். இறை சார்ந்த பணிகளில் ஈடுபாடு உண்டாகும். சில தடைகளின் மூலம் எதிர்பார்ப்புகள் தாமதமாக நிறைவேறும். எதிர்பாராத இடமாற்றம் சிலருக்கு சாதகமாகும். கால்நடை சார்ந்த பணிகளில் கவனம் வேண்டும்.
கன்னி
வியாபாரத்தில் செய்யும் சிறு சிறு மாற்றங்களின் மூலம் லாபம் மேம்படும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு ஒத்துழைப்பு மேம்படும். சேமிப்பது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். எதிர்கால முதலீடுகளை பற்றிய ஆலோசனைகள் கிடைக்கும். மனதளவில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள்.
துலாம்
சொந்த தொழில் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உலகியல் நிகழ்வுகளின் மூலம் மனதில் மாற்றம் ஏற்படும். புதுவிதமான ஆடைகள் மீது ஆர்வம் உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். உடற்பயிற்சி சார்ந்த விஷயங்களில் ஈடுபடுவீர்கள். மாணவர்களுக்கு கற்கும் திறனில் மாற்றங்கள் உண்டாகும். நேர்மைக்கு உண்டான அங்கீகாரம் கிடைக்கும்.
விருச்சிகம்
வழக்கு சார்ந்த பணிகளில் உள்ள சில நுணுக்கங்களை புரிந்து கொள்வீர்கள். குடியுரிமை கிடைப்பதில் இருந்துவந்த தாமதம் குறையும். உணவு சார்ந்த விஷயங்களில் மாற்றங்கள் உண்டாகும். மருத்துவ துறைகளில் லாபம் ஏற்படும். நெருக்கமானவர்களுடன் சிறு தூர பயணங்கள் சென்று வருவீர்கள். மனதில் ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும்.
தனுசு
வாழ்க்கைத் துணையுடன் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து செல்லவும். கொடுக்கல், வாங்கலில் கவனம் வேண்டும். வர்த்தகம் தொடர்பான பணிகளில் சிந்தித்து செயல்படவும். எளிமையான செயல்கள் கூட தாமதமாக நிறைவுபெறும். குழந்தைகளின் செயல்பாடுகளில் கவனம் வேண்டும். வியாபார பணிகளில் விழிப்புணர்வுடன் செயல்படவும். அரசு சார்ந்த பணிகளில் இழுபறியான சூழ்நிலைகள் ஏற்படும்.
மகரம்
நண்பர்களின் வழியில் ஆதரவும், ஒத்துழைப்பும் உண்டாகும். தொழில் சம்பந்தமாக வெளிவட்டார தொடர்புகள் கிடைக்கும். உறவினர்களை பற்றி புரிந்து கொள்வீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். தோற்றப்பொலிவில் சிறு சிறு மாற்றங்கள் ஏற்படும். மனதில் ஆன்மிக நாட்டம் உண்டாகும். வாழ்க்கைத் துணைவரின் வழியில் ஒத்துழைப்பு மேம்படும். பூர்வீக சொத்துக்களால் நன்மை உண்டாகும்.
கும்பம்
உடன்பிறந்தவர்களின் வழியில் ஒத்துழைப்பு மேம்படும். உத்தியோக பணிகளில் மாற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். இலக்கியம் சார்ந்த பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். குழந்தைகளின் எண்ணங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். செயல்பாடுகளில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். மறைமுக திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சூழ்நிலைகள் உண்டாகும்.
மீனம்
குடும்பத்தில் கலகலப்பான சூழல் அமையும். மனதிற்கு பிடித்த உணவினை உண்டு மகிழ்வீர்கள். பயணங்களின் மூலம் சாதகமான சூழ்நிலைகள் உண்டாகும். சிற்றின்பம் சார்ந்த செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். மனை விற்பது மற்றும் வாங்குவது தொடர்பான பணிகளில் லாபம் உண்டாகும். புதுவிதமான பயிற்சிகளில் கலந்து கொள்வீர்கள். உத்தியோக பணிகளில் மதிப்பு மேம்படும்.