Rasipalan: விருச்சிகத்துக்கு கீர்த்தி... சிம்மத்துக்கு இரக்கம்... உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்!
RasiPalan Today April 08: இந்த நாளில் எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாகக் காணலாம்.
நாள்: 08.04.2023 - சனிக்கிழமை
நல்ல நேரம்:
காலை 7.30 மணி முதல் காலை 8.30 மணி வரை
மாலை 3.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை
இராகு:
காலை 9.30 மணி முதல் காலை 10.30 மணி வரை
குளிகை:
காலை 6.00 மணி முதல் காலை 7.30 மணி வரை
எமகண்டம்:
மாலை 1.30 மணி முதல் மாலை 3.00 மணி வரை
மேஷம்
புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் ஆதாயம் அடைவீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். சுபச்செய்திகளின் மூலம் மகிழ்ச்சி அடைவீர்கள். செலவுகளை குறைப்பது தொடர்பான சிந்தனைகள் மேம்படும். செயல்பாடுகளில் இருந்த போட்டி, பொறாமைகள் குறையும். பயணங்களால் அனுகூலமான வாய்ப்புகள் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தகுதிக்கு ஏற்ப உயர்வு உண்டாகும். பொறுமை வேண்டிய நாள்.
ரிஷபம்
உத்தியோகம் தொடர்பான புதிய முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். தாய்மாமன் வழியில் ஒத்துழைப்பு உண்டாகும். வெளியூர் பயணங்களால் புதிய அனுபவம் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். கால்நடை சார்ந்த விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். நிதானமான செயல்பாடுகள் நன்மதிப்பை ஏற்படுத்தும். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் மேம்படும். லாபம் நிறைந்த நாள்.
மிதுனம்
பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள். கேளிக்கை சார்ந்த விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். நுணுக்கமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். ஆன்மிக பணிகளில் ஆர்வம் ஏற்படும். மனதில் புதுவிதமான ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் பிறக்கும். உணர்வுகளை வெளிப்படுத்துவதில் கவனம் வேண்டும். அறிவியல் சார்ந்த துறையில் இருப்பவர்களுக்கு திறமைகள் வெளிப்படும். பூர்வீக சொத்துக்களை விற்பதில் லாபம் கிடைக்கும். சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்.
கடகம்
தொழில் நிமிர்த்தமான பயணங்கள் கைகூடும். உணவு சார்ந்த விஷயங்களில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். மனதில் புரட்சிகரமான சிந்தனைகள் உண்டாகும். உடலில் இருந்த மந்தத்தன்மை குறையும். கால்நடை தொடர்பான செயல்பாடுகளின் மூலம் ஆதாயம் ஏற்படும். அரசு வழியில் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். அன்பு நிறைந்த நாள்.
சிம்மம்
எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். சிறு தூர பயணங்களின் மூலம் மாற்றங்கள் உண்டாகும். இடமாற்றம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். மறைமுக எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். விற்பனை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு திறமைகள் வெளிப்படும். அரசு வழியில் ஒத்துழைப்பான சூழல் ஏற்படும். மனதளவில் புதிய நம்பிக்கை பிறக்கும். கடினமான செயல்களை கூட எளிதில் செய்து முடிப்பீர்கள். இரக்கம் நிறைந்த நாள்.
கன்னி
புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். உங்களின் பேச்சுக்களுக்கு மதிப்பு அதிகரிக்கும். கலை சார்ந்த துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்களின் மீது ஆர்வம் உண்டாகும். பற்கள் சார்ந்த பிரச்சனைகள் குறையும். உங்களின் திறமைகள் வெளிப்படும். சுப முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். பொருளாதாரம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். நட்பு கிடைக்கும் நாள்.
துலாம்
கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து செல்லவும். பெருந்தன்மையான செயல்பாடுகளின் மூலம் உங்களின் மீதான மதிப்பு மேம்படும். மனதில் ஏற்பட்ட சிந்தனைகளின் மூலம் ஒருவிதமான சோர்வு ஏற்படும். பணிபுரியும் இடத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். மற்றவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து செயல்படவும். புதிய துறை சார்ந்த தேடல் உண்டாகும். மாணவர்களுக்கு கற்றலில் ஈடுபாடு அதிகரிக்கும். உதவிகள் நிறைந்த நாள்.
விருச்சிகம்
சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். சுபகாரியம் நிமிர்த்தமான செலவுகள் உண்டாகும். பழைய நினைவுகளால் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். பிறமொழி பேசும் மக்களின் அறிமுகம் கிடைக்கும். எதிராக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். மறதி தொடர்பான பிரச்சனைகள் தோன்றி மறையும். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து செல்லவும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் உண்டாகும். வியாபார பணிகளில் லாபம் மேம்படும். கீர்த்தி நிறைந்த நாள்.
தனுசு
சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். எதிர்பாராத அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் கிடைக்கும். கடினமான சூழ்நிலைகளையும் சமாளிக்கக்கூடிய மனப்பக்குவம் ஏற்படும். சாதுரியமான செயல்பாடுகளின் மூலம் வளர்ச்சி அடைவீர்கள். உயர்கல்வியில் மேன்மை ஏற்படும். உத்தியோக பணிகளில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். மேன்மை நிறைந்த நாள்.
மகரம்
எதிர்பார்த்த கடன் சார்ந்த உதவிகள் சாதகமாகும். செல்வச்சேர்க்கை தொடர்பான சிந்தனைகள் உண்டாகும். தொழில் நிறுவனங்களில் நிர்வாக திறமை வெளிப்படும். பொருளாதாரத்தில் இருந்துவந்த ஏற்ற, இறக்கங்கள் குறையும். உறவினர்கள் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். புதிய ஆடைகள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். உயர் அதிகாரிகளால் ஒத்துழைப்பான சூழ்நிலைகள் ஏற்படும். எதிர்ப்புகள் நிறைந்த நாள்.
கும்பம்
பாகப்பிரிவினைகளில் இருந்துவந்த இழுபறிகள் மறையும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். மற்றவர்களின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றுவீர்கள். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு மதிப்பு அதிகரிக்கும். திட்டமிட்ட பணிகள் இனிதே நிறைவுபெறும். முயற்சிக்கு உண்டான அங்கீகாரம் கிடைக்கும். ஆன்மிகம் தொடர்பான விஷயங்களில் ஈடுபடுவதன் மூலம் மனதில் அமைதி உண்டாகும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.
மீனம்
குடும்ப உறுப்பினர்களிடம் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. கணிதம் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு கவனம் வேண்டும். விவாதங்களில் நிதானத்துடன் இருக்கவும். நண்பர்களின் வழியில் அலைச்சலும், எதிர்பாராத விரயங்களும் உண்டாகும். நீண்ட நேரம் கண்விழிப்பதை தவிர்க்கவும். வரவுகள் இருந்தாலும் அதற்கு ஏற்ப செலவுகள் உண்டாகும். பழக்கவழக்கங்களில் சில மாற்றங்கள் ஏற்படும். விவேகம் வேண்டிய நாள்.