Rasipalan October 7 : கன்னிக்கு அதிர்ஷ்டம்..! கும்பத்திற்கு புத்திசாலித்தனம்..! அப்போ உங்க ராசிக்கு எப்படி இன்று..?
RasiPalan Today October 7: இந்த நாள் எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாக காணலாம்.
நாள்: 21.09.2022
நல்ல நேரம் :
காலை 9.15 மணி முதல் காலை 10.45 மணி வரை
மாலை 4.45 மணி முதல் மாலை 5.45 மணி வரை
மதியம் 12.15 மணி முதல் மதியம் 1.15 மணி வரை
மாலை 6.30 மணி முதல் மாலை 7.30 மணி வரை
இராகு :
காலை 10.30 மணி முதல் மதியம் 12 மணி வரை
குளிகை :
காலை 7.30 மணி முதல் காலை 9 மணி வரை
எமகண்டம் :
மதியம் 3 மணி முதல் மதியம் 4.30 மணி வரை
சூலம் –மேற்கு
மேஷம் :
மேஷ ராசி நேயர்களே, இன்று நீங்கள் பொறுமையுடனும் உறுதியுடனும் இருக்க வேண்டும். உணர்ச்சி வசப்படுதல் தவிர்க்க வேண்டும். உங்கள் செயல்களை திட்டமிட்டு ஆற்றுவதன் மூலம் முன்னேற்றம் காணலாம். பணியில் உங்கள் கீழ் பணி புரிபவர்களுடன் மோதல் காணப்படும். பணியிடத்தில் சுமுகமான சூழ்நிலை அமைய பதட்டத்தை கட்டுபடுத்த வேண்டும்.
ரிஷபம்:
ரிஷப ராசி நேயர்களே, இன்று நம்பிக்கையான போக்கு காணப்படும். இதனால் எளிதில் வெற்றியை அடையலாம். பயனுள்ள முடிவுகள் எடுப்பது உங்களுக்கு இன்று மிகவும் நல்லது. பணியிடத்தில் வளர்ச்சி காணப்படுகின்றது. உங்கள் பணிகளை உற்சாகமாகவும் எளிதாகவும் செய்வீர்கள். உங்கள் பணிகளை விரும்பி செய்வீர்கள்.
மிதுனம் :
மிதுன ராசி நேயர்களே, இன்று தகவல் பரிமாற்றத்தின் போது கவனமாக இருக்க வேண்டும். சிறந்த திட்டமிடல் வேண்டும். உறுதியை வெளிபடுத்த வேண்டும். அதிக அளவு பணம் தக்க வைத்துக்கொள்ள இந்த நாள் சிறந்த நாளாக இருக்காது. இன்று பற்றாக்குறை காணப்படும் அல்லது உங்களின் சம்பாதிக்கும் ஆற்றல் குறைந்து காணப்படும்.
கடகம் :
கடக ராசி நேயர்களே, இன்று ஆன்மீக விஷயங்களில் ஆர்வம் வளர்த்துக் கொள்வதன் மூலம் மகிழ்ச்சியும் ஆறுதலும் கிடைக்கும். இழந்தது போன்ற உணர்வு காணப்படும். பணியில் குறைந்த வளர்ச்சி காணப்படும். உங்கள் பணிகளை மேம்படுத்த பயனுள்ள திட்டங்களை தீட்ட வேண்டும். சூழ்நிலையை அனுசரித்து நடந்து கொள்ளுங்கள்.
சிம்மம்:
சிம்ம ராசி நேயர்களே, இன்று தொழில் சார்ந்த மற்றும் யதார்த்தமான அணுகுமுறையை மேற்கொள்ள வேண்டும். உங்கள் செயல்களை ஆற்றுவதில் சில தடைகள் காணப்படும். இன்றைய நாளை கவனமுடன் திட்டமிட வேண்டும். உங்கள் பணிகளை எளிதாக ஆற்ற மிகுந்த முயற்சி தேவை. உங்கள் செயல்களை சிறந்த முறையில் ஆற்ற திட்டமிட வேண்டும்.
கன்னி :
கன்னி ராசி நேயர்களே, இன்று இன்று அதிர்ஷ்டமான நாள். உங்கள் இலக்கை அடைந்து மகிழ்ச்சி அடைவீர்கள். முக்கியமான முடிவுகள் இன்று எடுக்கலாம்.இன்று உங்கள் பணிக்கான சிறந்த பலன்களைக் காண்பீர்கள். புதிய வாய்ப்புகள் இன்றைய நாளை சிறப்பானதாக ஆக்கும்.
துலாம் :
துலாம் ராசி நேயர்களே, இன்று உங்கள் விருப்பங்கள் மேம்படும் நாள். சுமகமான பலன்கள் கிடைக்கும் முக்கியமான முடிவுகளை இன்று எடுக்கலாம். பயணங்களுக்கான வாய்ப்பு உள்ளது. பணியைப் பொறுத்த வரை இன்று உற்சாகமான நாள். உங்களின் உழைப்பிற்கான ஊக்கத் தொகை மற்றும் சலுகைகள் போன்ற பண வரவு காணப்படும்.
விருச்சிகம் :
விருச்சிக ராசி நேயர்களே, இறை வழிபாடு, ஸ்லோகம் மந்திரம் இவற்றின் மூலம் இன்று ஆறுதல் மற்றும் திருப்தி பெறலாம். இன்று உங்கள் செயல்கள் சிறப்பாக இருக்க அவற்றை திட்டமிடுங்கள். இன்று பணிகளை முறையாக திட்டமிட்டுஆற்றுவதன் மூலம் நற்பலன்களைப் பெறலாம். உங்கள் மேலதிகாரிகளிடம் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும்.
தனுசு :
தனுசு ராசி நேயர்களே, உங்கள் விருப்பங்கள் நிறைவேறுவதற்கு உகந்த நாள் அல்ல. முக்கியமான முடிவுகளை இன்று எடுக்க கூடாது அல்லது தள்ளிப்போட வேண்டும். நேர்மறையான எண்ணங்களைப் பராமரிப்பதன் மூலம் நீங்கள் விரும்பியபடி செயலாற்றலாம். கடினமாக உழைத்தாலும் அதற்கான பாராட்டு கிடைக்காது. இது உங்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தும். பணிகள் கடினமாக காணப்படும்.
மகரம் :
மகர ராசி நேயர்களே, உங்கள் விருப்பங்கள் நிறைவேறும். அதனால் மகிழ்ச்சி உண்டாகும். முக்கியமான முடிவுகள் இன்று பலனளிக்கும். இன்று நீங்கள் பிரகாசிப்பீர்கள். உங்களிடம் காணப்படும் பணம் உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும். பயனுள்ள திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம் பண வளர்ச்சி ஏற்படும்.
கும்பம்:
கும்ப ராசி நேயர்களே, உங்கள் புத்திசாலித் தனத்தை பயன்படுத்தி நீங்கள் உங்கள் செயல்களில் வெற்றி பெறலாம். உங்கள் பொறுப்புகளை திறமையாக செய்வதே உங்களின் இன்றைய குறிக்கோளாக இருக்கும். பணியில் உங்கள் ஆற்றலை வெளிப்படுத்துவீர்கள்.உங்கள் சக பணியார்களின் ஆதரவு கிடைக்கும். உங்கள் திறமை பாராட்டைப் பெரும்.
மீனம்:
மீன ராசி நேயர்களே, நீங்கள் உறுதியுடன் இருக்க வேண்டும். கவனமுடன் செயலாற்ற வேண்டும். தைரியமாகவும் துணிவாகவும் இருக்க முயல வேண்டும். பணிச்சுமை காரணமாக உங்கள் மேலதிகாரிகள் மற்றும் கீழ் பணிபுரிபவர்களுடன் சில விரும்பத்தாகத தருணங்களை சந்திக்க வேண்டியிருக்கும்.