Rasi Palan Today, June 7: மிதுனத்திற்கு மகிழ்ச்சி கும்பத்திற்கு லாபம்.. இன்னைக்கு உங்க ராசிக்கு என்ன பலன்?
Rasi Palan Today, June 7 : எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாக காணலாம்.
நாள்: 07.06.2022
நல்ல நேரம் :
காலை 10.30 மணி முதல் காலை 11.30 மணி வரை
மாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரை
கௌரி நல்ல நேரம் :
காலை 1.30 மணி முதல் காலை 2.30 மணி வரை
மாலை 7.30 மணி முதல் மாலை 8.30 மணி வரை
இராகு :
மாலை 3.00 மணி முதல் மதியம் 4.30 மணி வரை
குளிகை :
மதியம் 12.00 மணி முதல் மாலை 1.30 மணி வரை
எமகண்டம் :
மதியம் 9.00 மணி முதல் மாலை 10.30 மணி வரை
சூலம் –வடக்கு
மேஷம் :
மேஷ ராசி நேயர்களே, உங்களிடம் அமைதியின்மை மற்றும் பாதுகாப்பின்மை உணர்வு காணப்படும். இதனால் உங்கள் தன்னம்பிக்கை குறையும். என்றாலும் வெற்றி பெற நீங்கள் உற்சாகமாக முயல வேண்டும். உங்கள் மதிப்பை உங்கள் மேலதிகாரிகளிடம் நிரூபிக்க வளரச்சியை உண்டாக்கும் புதுமையான யோசனைகள் தேவை. இன்று பணிகளை சரியான நேரத்தில் முடிக்க இயலாது.
ரிஷபம்:
ரிஷப ராசி நேயர்களே, இன்று நன்மை தீமை எனப் பலன்கள் கலந்து காணப்படும். இன்று நிச்சயமற்ற தன்மை காணப்படும். முயற்சியில் வெற்றி பெறுவதற்கு மிகுந்த பொறுமை அவசியம். இன்று கவனக் குறைவு காணப்படும். உங்கள் செயல் திறன் மந்தமாக இருக்கும். பனியின் போது கவனமாக இருக்க வேண்டும்.
மிதுனம் :
மிதுன ராசி நேயர்களே, இன்று பணிகள் அதிகமாக காணப்படும். உங்கள் இலக்குகளை நீங்கள் அடைவீர்கள். முக்கியமான முடிவுகள் எடுக்க இது உகந்த நாள். சக பணியாளர்கள் உதவிகரமாக இருப்பார்கள். பணியில் உங்கள் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள்.
கடகம் :
கடக ராசி நேயர்களே, உங்கள் இலக்குகளை அடைய கடுமையாகப் போராட வேண்டும். திட்டமிட்டு நம்பிக்கையுடன் செயலாற்ற வேண்டும். அஞ்சாத மன ஆற்றலும் நம்பிக்கையும் கொண்டால் உங்கள் விருப்பங்கள் நிறைவேறும். இன்று நீங்கள் பொறுமையுடன் செயல்பட்டால் உங்கள் பணிகளை சிறப்பாக ஆற்ற இயலும். உங்களுக்கு கொடுக்கப்பட பணிகளைச் செய்யும் போது யோசித்து சிறப்பாக ஆற்ற வேண்டும்.
சிம்மம்:
சிம்ம ராசி நேயர்களே, முக்கியமான நேரங்களில் நீங்கள் பொறுமை இழந்து காணப்படுவீர்கள். இது உங்களின் வளர்ச்சியை பாதிக்கும். பெரியவர்களின் ஆலோசனை கேட்டு நடந்து கொள்வது சிறந்த பலனைத் தரும். இன்று பணியில் மிதமான வளர்ச்சியே காணப்படும். பணிகள் அதிகமாக காணப்படும். இதற்கு நேரம் செலவாகும். உங்கள் கீழ் பணிபுரிபவர்களுடனான உறவு சிறப்பாக இருக்காது.
கன்னி :
கன்னி ராசி நேயர்களே, இன்று நீங்கள் அமைதியின்றி உணர்ச்சி வசப்பட்டு இருக்கும் வகையிலான சூழ்நிலை காணப்படும். இன்று சமநிலையோடு இருக்க வேண்டும். ஆன்மீக ஈடுபாடு உங்களுக்கு ஆறுதல் மற்றும் வளர்ச்சியை அளிக்கும். திறமையாக பணியாற்ற பணிகளை ஆற்றும் போது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இன்று பணிகள் அதிகமாக காணப்படும்.
துலாம் :
துலாம் ராசி நேயர்களே, இன்று செழிப்பாக இருக்க நீங்கள் கடுமையாக முயற்சிக்க வேண்டும். இன்று நல்ல பலனடைய அதிர்ஷ்டமான நாள். விரைந்து முடிவெடுத்தல் மற்றும் இடைவிடாத முயற்சி மூலம் இது சாத்தியம். இந்து மகிழ்ச்சி கரமான நாளாக இருக்கும்.இன்று பணியிடத்தில் திருப்தி காணப்படும். உங்கள் திறமைகளை நிரூபிப்பதற்கான புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
விருச்சிகம் :
விருச்சிக ராசி நேயர்களே, உங்கள் லட்சியங்களை அடைய இன்று சாதகமான நாள். இன்று மகிழ்ச்சியான தருணங்கள் காணப்படும். முக்கிய முடிவுகள் எடுப்பது நல்ல பலனைத் தரும். புதிய வாய்ப்புகள் உங்களுக்கு நல்ல பலன் தரும். உங்கள் பணிகளை முடிக்க ஏதுவான சூழ்நிலை காணப்படும்.
தனுசு :
தனுசு ராசி நேயர்களே, இன்று மிதமான பலன்களே கிடைக்கும். இன்றைய கடினமான சூழ்நிலைகளை சமாளிக்க தேவையான ஆற்றலை வளர்த்துக் கொள்ள வேண்டும். உங்கள் மனதை ஆன்மீகத்தில் ஈடுபடுத்துவதன் மூலம் உங்களுக்கு ஆறுதல் கிடைக்கும். பணியிடத்தில் சில சவால்கள் காணப்படும். ஆனால் திட்டமிட்டு செயலாற்றினால் சமாளிக்கலாம். ஈடுபாட்டுடன் பணி செய்தால் சிறந்த பலன்கள் கிடைக்கும்.
மகரம் :
மகர ராசி நேயர்களே, இன்று பதட்டமான சூழ்நிலை காணப்படும். பொறுமையுடனும் உறுதியுடனும் நீங்கள் சமாளிக்க வேண்டும். விஷயங்கள் உங்கள் கட்டுப்பாட்டை மீறிக் காணப்படும். அமைதியான அணுகுமுறை கொண்டு கையாள வேண்டும். உங்கள் பணிகளை திறமையாக ஆற்ற இயலாது. சகபணியாளர்கள் ஒத்துழைக்க தவறுவார்கள். மேலதிகாரிகளின் பாராட்டும் கிடைக்காது.
கும்பம்:
கும்ப ராசி நேயர்களே, இன்று முன்னேற்றகரமான பலன்கள் காணப்படும். உங்கள் இலக்குகளை எளிதில் அடையலாம். இன்று எடுக்கும் முக்கிய முடிவுகள் நல்ல பலன்களைத் தரும். இன்று வளர்ச்சி காணப்படுகின்றது. பணியில் மும்மரமாக காணப்படுவீர்கள். திட்டமிதுவதன் மூலம் திறமையாகப் பணியாற்றலாம்.
மீனம்:
மீன ராசி நேயர்களே, உங்கள் லட்சியங்களை அடைவதற்கு இன்று சாதகமான நாள். இன்றைய நாளின் செயல்களை நீங்கள் எச்சரிக்கையுடனும் விவேகத்துடனும் செய்வீர்கள். சமயோஜித புத்தியின் மூலம் செயல்படுவதால் நல்ல பலன்கள் கிடைக்கும். பனியின் செயல்திறனில் வளர்ச்சி காண்பீர்கள். உங்கள் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்