Rasi Palan Today, July 7: மிதுனத்திற்கு முயற்சி.. துலாமிற்கு குழப்பம்.. இன்றைய ராசி பலன்கள்.. !
Rasi Palan Today, July 7: இந்த நாள் எந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாக காணலாம்.
நாள்: 07.07.2022
நல்ல நேரம் :
காலை 10.45 மணி முதல் காலை 11.45 மணி வரை
கௌரி நல்ல நேரம் :
காலை 12.15 மணி முதல் மதியம் 1.15 மணி வரை
மாலை 6.30 மணி முதல் மாலை 7.30 மணி வரை
இராகு :
மதியம் 1.30 மணி முதல் மதியம் 3.00 மணி வரை
குளிகை :
காலை 9.00 மணி முதல் காலை10.30 மணி வரை
எமகண்டம் :
காலை 6.00 மணி முதல் காலை 7.30 மணி வரை
சூலம் –தெற்கு
மேஷம் :
மேஷ ராசி நேயர்களே, இன்று உங்களிடம் விரைந்து முடிவெடுக்கும் திறன் காணப்படும். உங்கள் செயல்களில் வெற்றி பெற வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும். இந்தப் போக்கின் காரணமாக நீங்கள் நன்மை அடைவீர்கள். உங்கள் தனித்த திறன் உங்கள் செயல்திறனில் வெளிப்படும். உங்கள் பணிக்கு அங்கீகாரம் கிடைக்கும்.
ரிஷபம்:
ரிஷப ராசி நேயர்களே, இன்று பணிகள் சமூகமாக நடக்காது. உங்கள் வளர்ச்சியில் தடைகள் காணப்படும். தகுந்த பலன்கள் கிடைக்காது. என்றாலும் கட்டுப்பாட்டுடன் சுமூகமாகச் செயல்களை செய்ய வேண்டும் ஆன்மீகத்தில் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளுங்கள்.
மிதுனம் :
மிதுன ராசி நேயர்களே, இன்று அதிகமான செயல்கள் காணப்படாது மனக் குழப்பத்தில் தவறான முடிவுகளை எடுப்பீர்கள். முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும்.பணியிடத்தில் வளர்ச்சி குறைந்து காணப்படும். பணிகள் அதிகமாக காணப்படும்.பணிகளை குறித்தநேரத்தில் முடிக்க நீங்கள் திட்டமிட்டு பணியாற்ற வேண்டும்.
கடகம் :
கடக ராசி நேயர்களே, இன்று வளர்ச்சி காணப்படும். இன்று நீங்கள் உங்கள் செயல்களில் மும்மரமாக இருப்பீர்கள். உங்கள் புத்திசாலித்தனத்தின் மூலம் நன்மை பெறுவீர்கள். நீங்கள் உங்கள் திறமைகளை பயன்படுத்தி செயலாற்றுவீர்கள். இது உங்களுக்கு திருப்தியை அளிக்கும்.
சிம்மம்:
சிம்ம ராசி நேயர்களே, இன்று நீங்கள் தன்னம்பிக்கை, தைரியம் மற்றும் உறுதியுடன் செயல்பட வேண்டும். கடினமான சூழ்நிலைகளை நம்பிக்கையுடன் சமாளிக்க வேண்டும். தன்னம்பிக்கையை பராமரிக்க முயற்சி செய்யலாம்.
கன்னி :
கன்னி ராசி நேயர்களே, இன்று சாதகமான பலன்கள் கிடைக்காது. உங்கள் முன்னேற்றத்தில் ஏற்ற இறக்கங்கள் காணப்படும். எனவே உங்கள் செயல்களை சிறப்பாக திட்டமிட வேண்டும். இசை கேட்டல் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் உங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.
துலாம் :
துலாம் ராசி நேயர்களே, இன்று மகிழ்சிகரமான பலன்கள் கிடைக்காது. எனினும் எதிர்பாராத நன்மை கிடைக்க வாய்ப்புள்ளது. முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும்.இன்று பணிகள் அதிகரித்துக் கொண்டே இருப்பதைக் காண்பீர்கள். இன்று பொறுமையான அணுகுமுறை மேற்கொள்ள வேண்டியது அவசியம்,
விருச்சிகம் :
விருச்சிக ராசி நேயர்களே,இன்று நன்மை நடக்கும் நாள். உங்கள் செயல்களில் வெற்றி காண்பீர்கள். விளையாட்டுப் போக்கில் இன்று உங்களுக்கு நன்மை கிடைக்கும்.பணிகள் அதிகமாக காணப்பட்டலும் நீங்கள் பணிகளை குறித்தநேரத்தில் முடிப்பீர்கள். இன்று உங்கள் பணிகளை நீங்கள் நம்பிக்கையுடன் கையாள்வீர்கள்.
தனுசு :
தனுசு ராசி நேயர்களே, இன்று இன்று சிறப்பான நாள். உங்கள் இலட்சியங்கள் நிறைவேறும் நாள். புதிய தொடர்புகள் கிடைக்கும். நட்பு வட்டராம் விரிவடையும்.பணியில் முன்னேற்றம் காணப்படும். உங்கள் செயல் திறன் கண்டு சக பணியாளர்கள் பொறாமைப்படுவார்கள்பணியில் கிடைக்கும் புதிய வாய்ப்புகள் காரணமாக மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.
மகரம் :
மகர ராசி நேயர்களே, இன்று சாதகமான பலன்கள் கிடைக்காது.இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக அமைய உங்கள் புத்திசாலித் தனத்தை பயன்படுத்த வேண்டும்.கவனமின்மை காரணமாக உங்கள் செயல் திறன் பாதிக்கப்படும். உங்கள் பணிகளை திறமையாக ஆற்ற சக பணியாளர்களின் ஆலோசனைகளைக் கேளுங்கள்.
கும்பம்:
கும்ப ராசி நேயர்களே, இன்று உற்சாகமும் ஆற்றலும் குறையும்படியான சூழ்நிலை உருவாகும். குறைந்த எதிர்பார்ப்புடன் உங்கள் செயல்களை ஆற்றினால் வெற்றி கிடைக்கும். பணியிடச் சூழல் சாதகமாகஇருக்காது. பணிகள் அதிகமாக காணப்படுவதால் நீங்கள் சில சௌகரியங்களை இழக்க நேரும். இது உங்களுக்கு வருத்தத்தை உருவாக்கும்.
மீனம்:
மீன ராசி நேயர்களே, இன்று மகிழ்ச்சி நிறைந்து காணப்படும். இன்று அதிர்ஷ்டகரமான நாள். இன்று முக்கிய முடிவுகளை எடுக்க உகந்த நாள். பணியிடச் சூழல் உங்களுக்கு சாதகமாக இருக்கும். உங்களுக்கு கொடுக்கப்பட்ட பணிகளை விரும்பி செய்வீர்கள். உங்கள் திறமை மற்றும் கடின உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்