மேலும் அறிய

Rasipalan Today Feb 05: மேஷத்திற்கு மேன்மை.. மிதுனத்திற்கு தனவரவு.. உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் இவைதான்!

Rasipalan Today: இந்த நாள் எந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாகக் காணலாம்.

நல்ல நேரம்:

காலை 7.30 மணி முதல் காலை 8.30 மணி வரை

மாலை 3.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை

கௌரி நல்ல நேரம்:

காலை 10.30 மணி முதல் காலை 11.30 மணி வரை

மதியம் 1.30 மணி முதல் மதியம் 2.30 மணி வரை

இராகு:

மாலை 4.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை

குளிகை:

மதியம் 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை

எமகண்டம்:

மதியம் 12.00 மணி முதல் மதியம் 1.30 மணி வரை

சூலம் - மேற்கு

மேஷம்

வியாபாரம் தொடர்பான பணிகளில் மேன்மை உண்டாகும். திட்டமிட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவும், நம்பிக்கையும் பெறுவீர்கள். மாணவர்களுக்கு கல்வி பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். சகோதரர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். திடீர் பயணங்கள் ஏற்படும். உறவினர்களின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும்.

ரிஷபம்

உத்தியோகம் சார்ந்த பணிகளில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். எதிர்பார்த்த சில உதவிகளால் பொருளாதாரம் சார்ந்த நெருக்கடிகள் குறையும். குழந்தைகளின் செயல்பாடுகளின் மூலம் மகிழ்ச்சியான மாற்றங்கள் உண்டாகும். உடல் ஆரோக்கியம் சார்ந்த இன்னல்கள் நீங்கும். எதையும் செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கை அதிகரிக்கும். புதிய முயற்சிகளின் மூலம் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். 

மிதுனம்

இழுபறியாக இருந்துவந்த தனவரவு கிடைக்கப் பெறுவீர்கள். தொழில் போட்டிகளில் சிந்தித்து முடிவு எடுக்கவும். மனதில் அஞ்ஞான சிந்தனைகள் அதிகரிக்கும். வாகன பயணங்களில் நிதானம் வேண்டும். கமிஷன் வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். வியாபாரம் சார்ந்த பணிகளில் இருந்துவந்த மந்தமான சூழ்நிலைகள் நீங்கும். உறவினர்களின் வழியில் எதிர்பாராத உதவி கிடைக்கும். 

கடகம்

தேவையில்லாத சிந்தனைகளின் மூலம் செயல்பாடுகளில் காலதாமதம் ஏற்படும். கணக்கு வழக்குகளில் விழிப்புணர்வுடன் இருக்கவும். ஆரோக்கியம் சார்ந்த விரயம் உண்டாகும். திறமைகளை வெளிப்படுத்தும் போது சூழ்நிலைகளை அறிந்து செயல்படவும். வர்த்தகம் சார்ந்த பணிகளில் நிதானத்தை கடைபிடிக்கவும். நண்பர்களின் வழியில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். 

சிம்மம்

வழக்கு தொடர்பான பணிகளில் மாற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். வியாபார பணிகளில் லாபம் அதிகரிக்கும். வாக்குறுதிகளை அளிக்கும் முன் சிந்தித்து செயல்படவும். நெருக்கமானவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். உத்தியோகத்தில் எதிர்பாராத சில அலைச்சல்கள் உண்டாகும். ஆடம்பரமான செலவுகளை குறைத்து கொள்ளவும். கால்நடைகளிடம் சற்று நிதானத்துடன் செயல்பட வேண்டும். 

கன்னி

வியாபாரம் சார்ந்த பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். பணிபுரியும் இடத்தில் இருந்துவந்த நெருக்கடிகள் குறையும். நீண்ட நாள் ஆசைகளை நிறைவேற்றுவீர்கள். நிதானமான செயல்பாடுகள் உங்கள் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும். சேமிப்பை அதிகரிப்பது தொடர்பான சிந்தனைகள் ஏற்படும். குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். இணையம் சார்ந்த பணிகளில் வருமானம் அதிகரிக்கும். 

துலாம்

மனதிற்கு மகிழ்ச்சி தரும் வகையிலான செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள். சமூகம் தொடர்பான பணிகளில் செல்வாக்கு மேம்படும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். புதுவிதமான சிந்தனைகள் மனதில் உண்டாகும். உறவினர்களின் வழியில் ஆதரவு கிடைக்கும். நினைத்த காரியங்களை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். 

விருச்சிகம்

அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் தொடர்பு கிடைக்கும். வாகனத்தில் உள்ள பழுதுகளை சரி செய்வீர்கள். புதிய முயற்சிகளில் மாறுபட்ட அனுபவம் கிடைக்கும். வெளிவட்டாரங்களில் இருந்துவந்த சங்கடங்கள் குறையும். ஆபரணங்களின் மீது ஆர்வம் ஏற்படும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு கிடைக்கும். தாயாரின் உடல் நலத்தில் கவனம் வேண்டும். 

தனுசு

நண்பர்களிடையே தேவையில்லாத கருத்துக்களை தவிர்க்கவும். வர்த்தகம் சார்ந்த முதலீடுகளில் தகுந்த ஆலோசனைகளை பெற்று செயல்படவும். தேவையில்லாத செலவுகளை குறைப்பதன் மூலம் பிரச்சனைகள் குறையும். குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து செல்லவும். பொன் ஆபரணங்களில் கவனம் வேண்டும். கொடுக்கல், வாங்கல் தொடர்பான விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். வியாபாரம் சார்ந்த பணிகளில் சாதகமற்ற சூழ்நிலைகள் உண்டாகும். 

மகரம்

கூட்டாளிகளின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். பிரபலமானவர்களின் அறிமுகம் உண்டாகும். தைரியமான செயல்பாடுகளின் மூலம் பொறுப்புகளும், பாராட்டுகளும் கிடைக்கும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் கிடைக்கப் பெறுவீர்கள். கனிவான நடவடிக்கை மூலம் நெருக்கடியான சூழ்நிலைகளையும் எளிதாக சமாளிப்பீர்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும்.

கும்பம் 

வியாபாரம் தொடர்பான வெளியூர் பயணங்கள் செல்வீர்கள். எதிர்ப்புகளை சாமர்த்தியமாக வெற்றி கொள்வீர்கள். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை தெரிந்து கொள்வீர்கள். இழுபறியான வழக்கு பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். மனதில் இருந்த குழப்பம் குறையும். எதிர்பாலின மக்களின் மூலம் ஆதாயம் கிடைக்கும். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் உண்டாகும். 

மீனம்

சகோதர, சகோதரிகளின் வழியில் ஆதரவு கிடைக்கும். கலை சார்ந்த பணிகளில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். குடும்பத்தினருடன் சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். மற்றவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். கடன் சார்ந்த இன்னல்கள் குறையும். மனதிற்குப் பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பூர்வீக சொத்துக்களின் மூலம் லாபம் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மேலும் ஒரு மகுடம்.. பிரதமர் மோடிக்கு விருது கொடுக்க லைன் கட்டும் உலக நாடுகள்!
மேலும் ஒரு மகுடம்.. பிரதமர் மோடிக்கு விருது கொடுக்க லைன் கட்டும் உலக நாடுகள்!
TVK Protest: உத்தரவிட்ட தவெக தலைவர் விஜய்... ஓடிவந்த தொண்டர்கள்... ஸ்தம்பித்த சேலம் மாநகர்..
TVK Protest: உத்தரவிட்ட தவெக தலைவர் விஜய்... ஓடிவந்த தொண்டர்கள்... ஸ்தம்பித்த சேலம் மாநகர்..
"பதஞ்சலி உணவு பூங்கா.. விவசாயிகளுக்கு வரப்பிரசாதம்" தேவேந்திர பட்னாவிஸ் புகழாரம்!
அதிர்ச்சி.. 2 லட்சம் மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு ஆப்சென்ட்- முறைகேடு செய்து பிடிபட்ட 29 பேர்!
அதிர்ச்சி.. 2 லட்சம் மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு ஆப்சென்ட்- முறைகேடு செய்து பிடிபட்ட 29 பேர்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

EX MLA Kathiravan: ”EX MLA கிட்டயே கட்டணமா?” போலீசாருடன் வாக்குவாதம் காரை குறுக்கே நிறுத்தி சண்டைPrashant Kishor On Vijay: விஜய்க்கு 15% - 20% வாக்கு? TWIST கொடுத்த PK! குழப்பத்தில் தவெகPetrol Bunk Scam: ”நீங்க போடுறது பெட்ரோல்லா” வெளுத்துவாங்கிய டாக்டர் BUNK-ல் முற்றிய தகறாறுலேடி கெட்டப்பில் நானா? கோபமான விக்ரமன்! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மேலும் ஒரு மகுடம்.. பிரதமர் மோடிக்கு விருது கொடுக்க லைன் கட்டும் உலக நாடுகள்!
மேலும் ஒரு மகுடம்.. பிரதமர் மோடிக்கு விருது கொடுக்க லைன் கட்டும் உலக நாடுகள்!
TVK Protest: உத்தரவிட்ட தவெக தலைவர் விஜய்... ஓடிவந்த தொண்டர்கள்... ஸ்தம்பித்த சேலம் மாநகர்..
TVK Protest: உத்தரவிட்ட தவெக தலைவர் விஜய்... ஓடிவந்த தொண்டர்கள்... ஸ்தம்பித்த சேலம் மாநகர்..
"பதஞ்சலி உணவு பூங்கா.. விவசாயிகளுக்கு வரப்பிரசாதம்" தேவேந்திர பட்னாவிஸ் புகழாரம்!
அதிர்ச்சி.. 2 லட்சம் மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு ஆப்சென்ட்- முறைகேடு செய்து பிடிபட்ட 29 பேர்!
அதிர்ச்சி.. 2 லட்சம் மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு ஆப்சென்ட்- முறைகேடு செய்து பிடிபட்ட 29 பேர்!
Rajinikanth: அந்த ஸ்டைலை பாருங்கய்யா.. நாட்டுக்கே ரஜினிகாந்த்தான் நாட்டாமை! இது எப்போ நடந்துச்சு?
Rajinikanth: அந்த ஸ்டைலை பாருங்கய்யா.. நாட்டுக்கே ரஜினிகாந்த்தான் நாட்டாமை! இது எப்போ நடந்துச்சு?
அப்பா இந்து.. அம்மா முஸ்லிம்..கிறஸ்துமஸில் பிறந்த பிரபலம்! யாரு அந்த ஹீரோயின்?
அப்பா இந்து.. அம்மா முஸ்லிம்..கிறஸ்துமஸில் பிறந்த பிரபலம்! யாரு அந்த ஹீரோயின்?
சாட்டையை சுழற்றிய அமைச்சர் அன்பில்; பள்ளிகளில் பாலியல் குற்றம் செய்த 23 பேர் டிஸ்மிஸ்!
சாட்டையை சுழற்றிய அமைச்சர் அன்பில்; பள்ளிகளில் பாலியல் குற்றம் செய்த 23 பேர் டிஸ்மிஸ்!
Pakistan Train Hijack: ரயிலை கடத்திய தீவிரவாதிகள்.. பணயக்கைதியாக பிடிக்கப்பட்ட பயணிகள்.. பாகிஸ்தானில் ஷாக்!
ரயிலை கடத்திய தீவிரவாதிகள்.. பணயக்கைதியாக பிடிக்கப்பட்ட பயணிகள்.. பாகிஸ்தானில் ஷாக்!
Embed widget