மேலும் அறிய

Rasipalan Today Jan 28: மேஷத்துக்கு நலம்... கடகத்துக்கு ஆக்கப்பூர்வம்... உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் இவை தான்!

Rasipalan Today: இந்த நாள் எந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாகக் காணலாம்.

நல்ல நேரம்:

காலை 7.30 மணி முதல் காலை 8.30 மணி வரை

மாலை 4.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை

கௌரி நல்ல நேரம்:

காலை 10.30 மணி முதல் காலை 11.30 மணி வரை

மாலை 9.30 மணி முதல் மாலை 10.30 மணி வரை

இராகு:

காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை

குளிகை:

காலை 6.00 மணி முதல் மதியம் 7.30 மணி வரை

எமகண்டம்:

மதியம் 1.30 மணி முதல் மதியம் 3.00 மணி வரை

சூலம் - கிழக்கு

மேஷம்

மனதில் புதுவிதமான சிந்தனைகள் மேம்படும். எந்தவொரு செயலிலும் உணர்ச்சி வேகமின்றி பொறுமையுடன் செயல்படவும். பூர்வீக சொத்துக்களால் லாபம் கிடைக்கும். மனதிற்குப் பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வாழ்க்கை துணைவரிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். வியாபாரம் நிமிர்த்தமான சில உதவிகள் சாதகமாக அமையும். நலம் நிறைந்த நாள்.

ரிஷபம்

நீண்ட நாட்களாக தடையாக இருந்துவந்த பணிகளை செய்து முடிப்பீர்கள். குணநலன்களில் மாற்றம் ஏற்படும். கால்நடை வாங்குவது தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். வெளியூர் பயணம் சார்ந்த செயல்பாடுகளில் புதிய அனுபவம் கிடைக்கும். பயனற்ற பேச்சுக்களையும், வாக்குறுதிகளையும் குறைத்துக் கொள்ளவும். கடன் சார்ந்த விஷயங்களில் பொறுமையை கையாளவும். உதவி கிடைக்கும் நாள்.

மிதுனம்

எதிலும் விவேகத்துடன் செயல்பட வேண்டும். வாழ்க்கை துணைவருடன் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். வித்தியாசமான சிந்தனைகளின் மூலம் மாற்றம் உண்டாகும். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். கலை சார்ந்த துறைகளில் சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும். உயர் அதிகாரிகளிடத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். இன்னல்கள் குறையும் நாள்.

கடகம்

வியாபாரம் தொடர்பான விஷயங்களில் நுணுக்கங்களை அறிந்து கொள்வீர்கள். ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகள் குறையும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். வீடு, மனை சார்ந்த விஷயங்களில் லாபம் அதிகரிக்கும்.  நெருக்கமானவர்களிடம் மனம் திறந்து பேசுவதன் மூலம் தெளிவு உண்டாகும். சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு அங்கீகாரங்கள் கிடைக்கும். ஆக்கப்பூர்வமான நாள்.

சிம்மம்

சகோதரர்களின் வழியில் அனுசரித்து செல்லவும். அக்கம்-பக்கம் இருப்பவர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்படவும். அரசு சார்ந்த துறைகளில் நிதானம் வேண்டும். சிறு தூர பயணங்களின் மூலம் மனதளவில் மாற்றம் உண்டாகும். எதிர்பாராத அதிர்ஷ்டகரமான சூழ்நிலைகள் அமையும். இடமாற்றம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். குழப்பம் நிறைந்த நாள்.

கன்னி

விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் கவனம் வேண்டும். பயனற்ற பேச்சுக்களை குறைத்து கொள்ளவும். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து செல்லவும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் சேமிப்பு குறையும். வர்த்தகம் தொடர்பான முதலீடுகளில் கவனம் வேண்டும். பாகப்பிரிவினை தொடர்பான விஷயங்களில் பொறுமையை கையாளவும். வெற்றி நிறைந்த நாள்.

துலாம்

உத்தியோகம் தொடர்பான பணிகளில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும். தோற்றப்பொலிவில் புதுவிதமான மாற்றம் உண்டாகும். வாழ்க்கை துணைவரின் வழியில் அனுசரித்து நடந்து கொள்ளவும். வியாபாரம் சார்ந்த தொழிலில் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். சுபகாரியங்களை முன்னின்று நடத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். தற்பெருமை எண்ணங்களை குறைத்து செயல்படுவது நன்மை அளிக்கும். பரிசு கிடைக்கும் நாள்.

விருச்சிகம்

கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். பேச்சுவன்மையின் மூலம் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். மனதளவில் இருந்துவந்த தயக்க உணர்வுகள் குறையும். மாணவர்களுக்கு கல்வியில் மாற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். எதிராக செயல்பட்டவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடும். கலை சார்ந்த துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். வாகனங்களில் இருந்துவந்த பழுதுகளை சீர் செய்வீர்கள். புகழ் நிறைந்த நாள்.

தனுசு

மனதில் இருந்துவந்த நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். குழந்தைகளின் எண்ணங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். உயர்கல்வி தொடர்பான சிந்தனைகள் மேம்படும். உத்தியோக பணிகளில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். வியாபாரம் சார்ந்த பணிகளில் புதிய கூட்டாளிகளை இணைப்பது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களிடையே ஒற்றுமை உண்டாகும். அமைதி நிறைந்த நாள்.

மகரம்

சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். தந்தை பற்றிய சிந்தனைகள் அவ்வப்போது தோன்றி மறையும். ஆரோக்கியம் சார்ந்த இன்னல்கள் குறையும். வியாபாரம் நிமிர்த்தமான சிந்தனைகள் மேம்படும். ஓட்டுநர் தொடர்பான துறைகளில் இருந்துவந்த இழுபறியான சூழல் நீங்கும். விவசாயம் சார்ந்த பணிகளில் மேன்மை உண்டாகும். உறவினர்களின் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். கல்வி சார்ந்த பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். நன்மை நிறைந்த நாள்.   

கும்பம்

தந்தையின் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் படிப்படியாக குறையும். உடன்பிறந்தவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். கடன் தொடர்பான சிக்கல்கள் குறையும். ஆன்மிகம் தொடர்பான பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். செயல்பாடுகளில் இருந்துவந்த சோர்வு படிப்படியாக குறையும். ஆராய்ச்சி தொடர்பான பணிகளில் சாதகமான முடிவு கிடைக்கும். ஓய்வு நிறைந்த நாள்.

மீனம்

இழுபறியான தனவரவு கிடைக்கப் பெறுவீர்கள். வாழ்க்கைத் துணைவரின் வழியில் பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் புதிய நபர்களின் வருகையால் மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும். உங்களின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். பார்வை சார்ந்த பிரச்சனைகள் குறையும். மனதில் கற்பனை சார்ந்த சிந்தனைகள் மேம்படும். நண்பர்களின் வருகை மூலம் மாற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். கவனம் வேண்டிய நாள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TNPSC Vacancy: வெளியான அசத்தல் அப்டேட்; அரசு பணியிடங்களை அதிரடியாக உயர்த்திய டிஎன்பிஎஸ்சி- எதில்? எவ்வளவு?
TNPSC Vacancy: வெளியான அசத்தல் அப்டேட்; அரசு பணியிடங்களை அதிரடியாக உயர்த்திய டிஎன்பிஎஸ்சி- எதில்? எவ்வளவு?
TN New Corporation: தமிழகத்தில் மேலும் 2 மாநகராட்சிகள் – எங்கெல்லாம்? அமைச்சர் அறிவித்த குட் நியூஸ்
TN New Corporation: தமிழகத்தில் மேலும் 2 மாநகராட்சிகள் – எங்கெல்லாம்? அமைச்சர் அறிவித்த குட் நியூஸ்
இந்தியா ஒரு மலர் தொட்டம்; தாமரை மட்டும் இருக்காது – அசத்தல் பேச்சை ஆவலாக கேட்ட முதலமைச்சர்!
இந்தியா ஒரு மலர் தொட்டம்; தாமரை மட்டும் இருக்காது – அசத்தல் பேச்சை ஆவலாக கேட்ட முதலமைச்சர்!
Stalin on EPS Delhi Trip: இபிஎஸ் டெல்லி பயணம்.. பேரவையில் போட்டு உடைத்த ஸ்டாலின்.. என்ன கூறினார் தெரியுமா.?
இபிஎஸ் டெல்லி பயணம்.. பேரவையில் போட்டு உடைத்த ஸ்டாலின்.. என்ன கூறினார் தெரியுமா.?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Edappadi Palaniswami : ராஜ்யசபா சீட் யாருக்கு? OPS, TTV-க்கு  செக்! இபிஎஸ் பக்கா ஸ்கெட்ச்Savukku Sankar: சவுக்கு வீட்டில் சாக்கடை.. அடித்து உடைத்த கும்பல்! வெளியான பகீர் காட்சி | CCTVPuducherry Assembly | திமுக MLA-க்கள் ஆவேசம் குண்டுக்கட்டாக வெளியேற்றம் சட்டப்பேரவையில் பரபரப்புMadurai Police Murder | மதுரையில் துப்பாக்கிச் சூடு குற்றவாளியை பிடித்த போலீஸ் காவலர் எரித்துக் கொன்ற விவகாரம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TNPSC Vacancy: வெளியான அசத்தல் அப்டேட்; அரசு பணியிடங்களை அதிரடியாக உயர்த்திய டிஎன்பிஎஸ்சி- எதில்? எவ்வளவு?
TNPSC Vacancy: வெளியான அசத்தல் அப்டேட்; அரசு பணியிடங்களை அதிரடியாக உயர்த்திய டிஎன்பிஎஸ்சி- எதில்? எவ்வளவு?
TN New Corporation: தமிழகத்தில் மேலும் 2 மாநகராட்சிகள் – எங்கெல்லாம்? அமைச்சர் அறிவித்த குட் நியூஸ்
TN New Corporation: தமிழகத்தில் மேலும் 2 மாநகராட்சிகள் – எங்கெல்லாம்? அமைச்சர் அறிவித்த குட் நியூஸ்
இந்தியா ஒரு மலர் தொட்டம்; தாமரை மட்டும் இருக்காது – அசத்தல் பேச்சை ஆவலாக கேட்ட முதலமைச்சர்!
இந்தியா ஒரு மலர் தொட்டம்; தாமரை மட்டும் இருக்காது – அசத்தல் பேச்சை ஆவலாக கேட்ட முதலமைச்சர்!
Stalin on EPS Delhi Trip: இபிஎஸ் டெல்லி பயணம்.. பேரவையில் போட்டு உடைத்த ஸ்டாலின்.. என்ன கூறினார் தெரியுமா.?
இபிஎஸ் டெல்லி பயணம்.. பேரவையில் போட்டு உடைத்த ஸ்டாலின்.. என்ன கூறினார் தெரியுமா.?
Vijay: குருத் துரோகியா விஜய்.? மரணப் படுக்கைல இருந்தும் ஹுசைனிய கண்டுக்கலையே.!!
குருத் துரோகியா விஜய்.? மரணப் படுக்கைல இருந்தும் ஹுசைனிய கண்டுக்கலையே.!!
Siddha Ayush Ministry: சித்த மருத்துவத்தை திருடும் ஆயுர்வேதம்? ஆதரவாக மோடி அரசு? கொதிக்கும் தமிழ் சமூகம்
Siddha Ayush Ministry: சித்த மருத்துவத்தை திருடும் ஆயுர்வேதம்? ஆதரவாக மோடி அரசு? கொதிக்கும் தமிழ் சமூகம்
EPS Delhi Visit : ’விமானத்தில் ஏறிய எடப்பாடி, எஸ்.பி.வேலுமணி’ டெல்லியில் ரகசிய டீல்!
EPS Delhi Visit : ’விமானத்தில் ஏறிய எடப்பாடி, எஸ்.பி.வேலுமணி’ டெல்லியில் ரகசிய டீல்!
ராகுல் காந்தி எந்த நாட்டு குடிமகன்.? முடிவு செய்ய மத்திய அரசுக்கு 4 வாரம் கெடு.. நடந்தது என்ன.?
ராகுல் காந்தி எந்த நாட்டு குடிமகன்.? முடிவு செய்ய மத்திய அரசுக்கு 4 வாரம் கெடு.. நடந்தது என்ன.?
Embed widget