Rasipalan November 26: துலாமுக்கு யோகம்...கடகத்துக்கு ஓய்வு...உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் இவைதான்!
RasiPalan Today November 26: இந்த நாள் எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாக காணலாம்.
நாள்: 26.11.2022
நல்ல நேரம்:
காலை 7.45 மணி முதல் காலை 8.45 மணி வரை
மதியம் 3.15 மணி முதல் மாலை 4.15 மணி வரை
இராகு:
காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை
குளிகை:
காலை 6.00 மணி முதல் காலை 7.30 மணி வரை
எமகண்டம்:
மதியம் 1.30 மணி முதல் மதியம் 3.00 மணி வரை
சூலம் - கிழக்கு
மேஷம்
உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் மேம்படும். உயர் அதிகாரிகளிடம் பொறுமையுடன் செயல்படுவதன் மூலம் நன்மை ஏற்படும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். தாய்வழி உறவினர்களுடன் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து செல்லவும். திட்டமிட்ட காரியங்களை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். எதிர்ப்புகள் குறையும் நாள்.
ரிஷபம்
வருவாய் சார்ந்த நெருக்கடியால் அமைதியற்ற சூழல் ஏற்படும். விளையாட்டான பேச்சுக்களை குறைத்து கொள்ளவும். விலை உயர்ந்த பொருட்களை கையாளும் பொழுது கவனம் வேண்டும். சகோதரர்களின் வழியில் அலைச்சல்கள் உண்டாகும். வெளி உணவினை தவிர்ப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது. மற்றவர்களுக்கு வாக்குறுதிகளை அளிக்கும் பொழுது சிந்தித்து செயல்படவும். வியாபார பணிகளில் ஒருவிதமான மந்தத்தன்மை உண்டாகும். அன்பு நிறைந்த நாள்.
மிதுனம்
நண்பர்களின் மத்தியில் நற்பெயர் உண்டாகும். வழக்கு தொடர்பான விஷயங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். தந்தைவழி சொத்துக்களின் மூலம் அனுகூலமான வாய்ப்புகள் அமையும். நீண்ட நாட்களாக இருந்துவந்த கவலைகளில் இருந்து விடுதலை பெறுவீர்கள். உங்களின் பலம் பற்றும் பலவீனத்தை பற்றி அறிந்து கொள்வீர்கள். வெளியூர் மற்றும் வெளிநாடு தொடர்பான பயண வாய்ப்புகள் சிலருக்கு சாதகமாக அமையும். நிறைவான நாள்.
கடகம்
எதிர்பாலின மக்களின் மூலம் மாற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். மனதில் உத்தியோக மாற்றம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். மற்றவர்களுக்கு தேவையான உதவியை செய்து மனம் மகிழ்வீர்கள். கடன் தொடர்பான விஷயங்களில் சாதகமான முடிவு கிடைக்கும். சாதுர்யமான பேச்சுக்களின் மூலம் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி கொள்வீர்கள். எதிர்பாராத சில வாய்ப்புகளின் மூலம் தனவரவு மேம்படும். ஓய்வு நிறைந்த நாள்.
சிம்மம்
மனதில் வியாபாரம் ரீதியான சிந்தனைகள் மேம்படும். குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பொழுதுபோக்கு தொடர்பான செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். வியாபார பணிகளில் அனுபவமிக்க வேலையாட்களின் ஒத்துழைப்பு முன்னேற்றத்தை ஏற்படுத்தும். பெருந்தன்மையுடன் செயல்பட்டு பலரின் ஆதரவை பெறுவீர்கள். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகளுக்கு முக்கியத்துவம் அளிப்பீர்கள். நன்மை நிறைந்த நாள்.
கன்னி
உலகியல் நடவடிக்கைகளின் மூலம் மனதில் மாற்றம் உண்டாகும். கல்வி தொடர்பான பணிகளில் நிபுணத்துவத்தை அறிந்து கொள்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். புதிய பயணங்களின் மூலம் மாற்றமான சூழல் அமையும். ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சார்ந்த தொழிலில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். மாணவர்களுக்கு கற்றலில் ஆர்வம் ஏற்படும். செல்வாக்கு நிறைந்த நாள்.
துலாம்
உயர் அதிகாரிகளிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து செல்லவும். பாகப்பிரிவினை தொடர்பான விஷயங்களுக்கு தைரியமாக முடிவு எடுப்பீர்கள். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். விவசாயம் சார்ந்த பணிகளில் அலைச்சல்களின் மூலம் புதிய அனுபவம் உண்டாகும். முயற்சிக்கு உண்டான அங்கீகாரம் கிடைக்கப் பெறுவீர்கள். குடும்ப பெரியோர்களின் ஆலோசனைகளால் மாற்றமான சூழல் உண்டாகும். யோகம் நிறைந்த நாள்.
விருச்சிகம்
மற்றவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து செயல்படுவது உங்களின் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும். எதிர்பாராத தனவரவு உண்டாகும். உடன்பிறந்தவர்களின் வழியில் விட்டுக்கொடுத்து செல்லவும். செய்கின்ற செயல்பாடுகளின் தன்மையை அறிந்து மேற்கொள்வது நல்லது. வாடிக்கையாளர்களின் ஆதரவு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் மேம்படும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.
தனுசு
புதுமையான சிந்தனைகளின் மூலம் பலரின் பாராட்டுகளை பெறுவீர்கள். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு மாற்றத்தை ஏற்படுத்தும். செயல்பாடுகளில் சோர்வு ஏற்பட்டு நீங்கும். பணிபுரியும் இடத்தில் பொறுப்புகள் மேம்படும். பேச்சுவார்த்தைகளில் கனிவு வேண்டும். வாடிக்கையாளர்களிடம் பொறுமையுடன் செயல்படுவதன் மூலம் சூழல் உண்டாகும். குடும்பத்தில் பொறுப்பும், அலைச்சலும் அதிகரிக்கும். ஆதாயம் நிறைந்த நாள்.
மகரம்
புதுவிதமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். அறம் சார்ந்த காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். நெருக்கமானவர்களின் பலம் மற்றும் பலவீனத்தை அறிந்து கொள்வீர்கள். சிறு தொழில் புரிபவர்களுக்கு முன்னேற்றமும், புதிய வாய்ப்பும் சாதகமாக அமையும். சிலருக்கு வித்தியாசமான கனவுகளின் மூலம் குழப்பம் உண்டாகும். கடன் தொடர்பான நெருக்கடிகள் குறையும். வாக்கு சாதுர்யத்தின் மூலம் இழுபறியான செயல்களை செய்து முடிப்பீர்கள். மகிழ்ச்சி நிறைந்த நாள்.
கும்பம்
மனதில் புதுவிதமான ஆசைகள் மற்றும் விருப்பங்கள் உண்டாகும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். நெருக்கடியான சூழல் குறைந்து மேன்மையான சூழல் ஏற்படும். வியாபார பணிகளில் ஏற்பட்ட மாற்றத்தின் மூலம் லாபம் அடைவீர்கள். பூர்வீக சொத்துக்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்படும். வர்த்தகம் சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மை உண்டாகும். வரவு நிறைந்த நாள்.
மீனம்
உத்தியோகம் தொடர்பான முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். கல்வி சார்ந்த பணிகளில் மேன்மை உண்டாகும். மனதிற்கு நெருக்கமானவர்களுடன் சிறு தூர பயணங்களை மேற்கொள்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். மனை மற்றும் வீடு தொடர்பான கடன் சார்ந்த உதவி கிடைக்கும். உறவினர்களின் மூலம் அனுகூலமான வாய்ப்புகள் உண்டாகும். சிந்தனைகள் மேம்படும் நாள்.