Rasi Palan Today, May 26: எந்தெந்த ராசிக்கு என்னென்ன பலன்கள்... இன்றைய ராசிபலன்கள் இதோ!
Rasi Palan Today, May 26: இன்று எந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாக காணலாம்.
நாள்: 26.05.2022
நல்ல நேரம் :
காலை 10.30 மணி முதல் காலை 11.30 மணி வரை
கௌரி நல்ல நேரம் :
காலை 12.30 மணி முதல் காலை 1.30 மணி வரை
மாலை 6.30 மணி முதல் மாலை 7.30 மணி வரை
இராகு :
மதியம் 1 மணி முதல் மதியம் 3.00 மணி வரை
குளிகை :
காலை 9.00 மணி முதல் 10.30 மணி வரை
எமகண்டம் :
காலை 6.00 மணி முதல் காலை 7.30 மணி வரை
சூலம் – தெற்கு
மேஷம் :
மேஷ ராசி நேயர்களே, எளிதில் முடித்துவிடலாம் என நினைத்த காரியங்களை கூடப் போராடி முடிக்க வேண்டி இருக்கும். பிள்ளைகளை அன்பால் அரவணைத்துப் போங்கள். எதிர்பாராத பயணங்கள் செலவினங்களால் திணறுவீர்கள். வியாபாரத்தில் போட்டிகளை தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும்.
ரிஷபம்:
ரிஷப ராசி நேயர்களே, பயணங்களின் போது கவனம் தேவை. குடியிருக்கும் வீட்டை சீரமைக்க வேண்டிவரும். எதிர்பாராத மருத்துவ செலவுகள் வரும். உத்யோகத்தில் ஆதரவு பெருகும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்து கொள்வார்கள்.
மிதுனம் :
மிதுன ராசி நேயர்களே, வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். வீடு வாகனத்தை சீர் செய்வீர்கள். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.
கடகம் :
கடக ராசி நேயர்களே, வசீகரமான பேச்சால் மற்றவர்களை எளிதில் கவர முடியும். சொந்த பந்தங்கள் தேடி வருவர். கடன் வாங்கும் பழக்கத்தை கைவிடவும். தொழில், வியாபாரம் செழிப்படையும். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள்
சிம்மம்:
சிம்ம ராசி நேயர்களே, சுற்றி இருப்பவர்களின் சுய ரூபம் புரியவரும். மன பயம் நீங்கும். உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். இதுவரை இருந்த குழப்பங்கள் நீங்கி எதிலும் ஒரு தெளிவு பிறக்கும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். புதிய சிந்தனைகள் தோன்றும்.
கன்னி :
கன்னி ராசி நேயர்களே, கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். மனைவி வழியில் ஆதரவு பெருகும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். தாயார் ஆதரித்துப் பேசுவார். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள்.
துலாம் :
துலாம் ராசி நேயர்களே, குடும்பத்தில் உங்கள் அந்தஸ்து உயரும். தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். மனதில் புதிய சிந்தனைகள் பிறக்கும். உத்யோகத்தில் அமைதி நிலவும். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் ராஜதந்திரத்தால் லாபத்தை அதிகரிப்பீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும்.
விருச்சிகம் :
விருச்சிக ராசி நேயர்களே, வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறிவீர்கள். ஆடம்பர செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
தனுசு :
தனுசு ராசி நேயர்களே, குடும்ப விஷயங்களை கவனமாக கையாளவும். காரிய அனுகூலம் உண்டாகும். அத்தியாவசிய தேவைகள் அதிகரிக்கும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு. வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் வேலைகளை சேர்த்து முடிப்பீர்கள்.
மகரம் :
மகர ராசி நேயர்களே, குடும்பத்திற்காக நிறைய தியாகம் செய்ய வேண்டிவரும். உறவினர்களின் அன்பு தொல்லை இருக்கும். வாகனங்களில் மெதுவாக செல்லவும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள்.
கும்பம்:
கும்ப ராசி நேயர்களே, கணவன் மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். தோற்றப் பொலிவுக் கூடும். புதியவர்கள் நண்பர்கள அவர்கள். எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார்.
மீனம்:
மீன ராசி நேயர்களே, குடும்பம் கலகலப்பாக இருக்கும். வாழ்க்கை தரம் வெகுவாக உயரும். மனதில் ஏற்பட்ட விரக்தி மனப்பான்மை விலகும். தொழில், வியாபாரம் சிறப்பாக அமையும். அதிக வேலைச்சுமையால் அவ்வப்போது கோபப்படுவீர்கள். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்