மேலும் அறிய

Rasipalan Today Jan 23: தனுசுக்கு ஜெயம்... மீனத்துக்கு ஆதரவு... உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் இவை தான்!

Rasipalan Today: இந்த நாள் எந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாகக் காணலாம்.

நல்ல நேரம்:

காலை 6.30 மணி முதல் காலை 7.30 மணி வரை

மாலை 4.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை

கௌரி நல்ல நேரம்:

மதியம் 1.30 மணி முதல் மதியம் 2.30 மணி வரை

மாலை 7.30 மணி முதல் மாலை 8.30 மணி வரை

இராகு:

மாலை 7.30 மணி முதல் மாலை 9.00 மணி வரை

குளிகை:

மதியம் 1.30 மணி முதல் மதியம் 3.00 மணி வரை

எமகண்டம்:

காலை 10.30 மணி முதல் மதியம் 12.00 மணி வரை

சூலம் - கிழக்கு

மேஷம்

வியாபாரம் சார்ந்த பணியில் லாபம் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு மேம்படும். திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். எதிலும் திருப்தியற்ற சிந்தனைகள் ஏற்பட்டு நீங்கும். கனிவான பேச்சுக்கள் உங்கள் மீதான நன்மதிப்பை மேம்படுத்தும். சமூகம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். வெற்றி நிறைந்த நாள்.

ரிஷபம்

உத்தியோக ரீதியான பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். உங்களின் தனித்திறமைகளை அறிந்து கொள்வீர்கள். ஆராய்ச்சி சார்ந்த துறைகளில் சாதகமான முடிவு கிடைக்கும். ஆன்மிக தலங்களுக்கு சென்று வருவீர்கள். வெளியூர் தொடர்பான பயணங்கள் கைகூடும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றி மகிழ்வீர்கள். விரும்பிய பொருட்களை வாங்குவதில் சில அலைச்சல்கள் உண்டாகும். சோர்வு விலகும் நாள்.

மிதுனம்

மற்றவர்களை பற்றிய கருத்துக்களை தவிர்க்கவும். கணவன், மனைவிக்கிடையே விட்டுக்கொடுத்து செல்லவும். நெருக்கமானவர்களின் மூலம் சில மாற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். தனிப்பட்ட விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்வதை குறைத்துக் கொள்ளவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். அவசர முடிவுகளை தவிர்த்து பொறுமையை கையாளவும். உத்தியோக பணியில் கூடுதல் கவனத்துடன் செயல்படவும். விவேகம் வேண்டிய நாள்.

கடகம்

சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். மற்றவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து செயல்படுவீர்கள். தவறிப்போன சில பொருட்களை பற்றிய சிந்தனைகள் உண்டாகும். எதிர்பாராத சில அலைச்சல்கள் ஏற்படும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி அடைவீர்கள். அரசு சார்ந்த பணிகளில் ஆதரவு கிடைக்கும். நிதானம் வேண்டிய நாள்.

சிம்மம்

உணவு முறையில் மாற்றங்கள் உண்டாகும். எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். உத்தியோகப் பணிகளில் புதுமையான சூழ்நிலைகள் ஏற்படும். நெருக்கமானவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். மறதி தொடர்பான பிரச்சனைகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். திருப்பங்கள் நிறைந்த சூழ்நிலைகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சோர்வும், மந்தத்தன்மையும் ஏற்படும். அமைதி நிறைந்த நாள்.

கன்னி

கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். சிற்றின்ப விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். எதையும் பகுத்தறிந்து முடிவுகளை எடுப்பீர்கள். அழகு சார்ந்த விஷயங்களில் ஈடுபாடு உண்டாகும். உணர்வுப்பூர்வமாக சிந்திப்பதை விட சூழ்நிலைக்கு ஏற்ப செயல்படுவது நல்லது. குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பொறுமை வேண்டிய நாள்.

துலாம்

விவசாயம் சார்ந்த பணிகளில் மேன்மை ஏற்படும். சிந்தனைகளில் ஒருவிதமான சோர்வு உண்டாகும். வாகன பயணங்களில் விவேகம் வேண்டும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். சிக்கனமாக செயல்பட்டு சேமிப்பை மேம்படுத்துவீர்கள். கலகலப்பான பேச்சுக்களின் மூலம் பலரின் பாராட்டுகளை பெறுவீர்கள். தாமதம் விலகும் நாள்.

விருச்சிகம்

திட்டமிட்ட பணிகளில் எண்ணங்கள் ஈடேறும். மாணவர்களுக்கு ஞாபக சக்தி அதிகரிக்கும். குறுகிய தூர பயணங்களின் மூலம் புத்துணர்ச்சி அடைவீர்கள். இடமாற்றம் சார்ந்த முயற்சிகள் ஈடேறும். வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மறைமுக எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். விற்பனை சார்ந்த துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். அனுகூலம் நிறைந்த நாள்.

தனுசு

ஆடம்பரப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். எதிர் வாதங்களில் சிந்தித்து செயல்படவும். நண்பர்களின் மூலம் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களின் மூலம் ஆதாயம் ஏற்படும். தாய்மாமன் வழியில் ஆதரவு கிடைக்கும். தூக்கமின்மை பிரச்சனைகள் குறையும். புதிய உணவுகளில் கவனம் வேண்டும். ஜெயம் நிறைந்த நாள்.

மகரம்

தோற்றப்பொலிவில் மாற்றம் ஏற்படும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு நிதானமாக முடிவுகளை எடுக்கவும். சமூகப் பணிகளில் செல்வாக்கு நிலை அதிகரிக்கும். நிர்வாகம் சார்ந்த துறைகளில் பொறுமை வேண்டும். உத்தியோகப் பணிகளில் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து செல்லவும். புதிய விஷயங்களை கற்பதில் ஆர்வம் ஏற்படும். போட்டிகள் நிறைந்த நாள்.

கும்பம்

உறவினரின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் மூலம் அனுகூலமான சூழ்நிலைகள் ஏற்படும். கால்நடை தொடர்பான வியாபாரத்தில் முயற்சிக்கு ஏற்ப மேன்மை உண்டாகும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்பாடுகளின் மூலம் விரயங்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் உண்டாகும். எழுத்து துறைகளில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். மறதி குறையும் நாள்.

மீனம்

வியாபாரம் தொடர்பான பணிகளில் முதலீடுகள் அதிகரிக்கும். வழக்கு சார்ந்த விஷயங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வியாபார பணிகளில் வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தனவரவுகளின் மூலம் சேமிப்பு உண்டாகும். குறுந்தொழில் சார்ந்த முயற்சிகள் அதிகரிக்கும். மறைமுக எதிர்ப்புகளை அறிந்து கொள்வதற்கான சூழ்நிலைகள் ஏற்படும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். ஆதரவு நிறைந்த நாள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
Syria War: கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
CM Stalin: நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.!  அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.! அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
Embed widget