Rasi Palan Today, Feb 20 : துலாம் ராசிக்கு குழப்பம்...! விருச்சிக ராசிக்கு மகிழ்ச்சி...! இந்த நாள் உங்களுக்கு எப்படி...?
Rasi Palan Today | இன்றைய ராசிபலன் 19 பிப்ரவரி 2022: இந்த நாள் மேஷம் முதல் மீனம் வரையிலான ராசிக்காரர்களுக்கு என்ன பலன்கள் என்று கீழே விரிவாக காணலாம்.
நல்ல நேரம் :
காலை 7.30 மணி முதல் காலை 8.30 மணி வரை
மாலை 3.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை
கௌரி நல்ல நேரம் :
காலை 10.30 மணி முதல் காலை 11.30 மணி வரை
மதியம் 1.30 மணி முதல் மதியம் 2.30 மணி வரை
இராகு :
மாலை 4.30 மணி முதல் மாலை 6 மணி வரை
குளிகை :
மதியம் 3 மணி முதல் மாலை 4.30 மணி வரை
எமகண்டம் :
மதியம் 12 மணி முதல் மதியம் 1.30 மணி வரை
சூலம் – மேற்கு
மேஷம் :
மேஷ ராசிக்காரர்களே இந்த நாள் உங்களின் மன உறுதி அதிகரிக்கும். குடும்பத்தாருடன் அதிக நேரம் செலவிட்டு மகிழ்வீர்கள். நீண்ட நாட்களுக்கு பிறகு, பழைய நண்பர்களை, உறவுகளை சந்தித்து மகிழ்வீர்கள். சொத்துக்கள் வாங்குவது குறித்து ஆலோசிப்பீர்கள்.
ரிஷபம் :
ரிஷப ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு நன்மையான நாளாக அமையும். பெற்றோர்கள் – பிள்ளைகள் இடையே இருந்த மனக்கசப்பு விலகும். குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். தொழிலில் எதிர்பார்த்த ஆர்டர்கள் கிடைக்கும்.
மிதுனம் :
மிதுன ராசிக்காரர்களே இந்த நாள் நீங்கள் நல்ல காரியங்களில் ஈடுபடுவீர்கள். அடுத்தவர்க்கு உதவி செய்து மிகவும் ஆனந்தப்படுவீர்கள். பொன், பொருள் வாங்குவதற்கு யோகம் உண்டு. நீண்ட நாள் தள்ளிச்சென்ற மங்கல காரியம் மீண்டும் தொடங்கும்.
கடகம் :
கடக ராசிக்காரர்களே இந்த நாள உங்களுக்கு தேவையில்லாத கோபம் உண்டாகும். மன உளைச்சல் அதிகரிக்கக்கூடும். நண்பர்கள், சுற்றத்தார் விவகாரங்களில் வீண் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். மன அமைதிக்கு விநாயகப் பெருமானை வழிபடுவது சிறப்பு.
கன்னி :
கன்னி ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு யோகமான நாளாக அமையும், வேலைவாய்ப்பு, தொழிலில் எதிர்பார்த்த ஏற்றம் இன்று கிட்டும். நண்பர்கள் மூலமாக நற்செய்தி செவிகளில் வந்து சேரும். வசூலாகாத கடன்தொகை இன்று வசூலாகும். மனதில் நிம்மதி உண்டாகும்.
துலாம் :
துலாம் ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு மனதில் தேவையில்லாத குழப்பம் உண்டாகும். அரசியலில் போட்டியிட்டவர்கள் வெற்றியா? தோல்வியா? என்ற குழப்பத்திலே இருப்பீர்கள். வீண் குழப்பம் உண்டாகும். சுற்றத்தாருடன் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.
விருச்சிகம் :
விருச்சிக ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு மகிழ்ச்சி பொங்கும். கணவன்-மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். புதிய வாகனங்கள் வாங்க யோகம் உண்டு. மனைவி வழியே மனதிற்கு மகிழ்ச்சியான செய்தி வந்து சேரும்.
தனுசு :
தனுசு ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு போட்டியான நாளாக இருக்கம். ஆனாலும், இந்த போட்டி உங்களது வளர்ச்சிக்கு ஆரோக்கியமானதாக அமையும். இருப்பினும், தொழில் மற்றும் அரசியல் போட்டியாளர்களிடம் சுமூகமாக செல்வது நல்லது. சிவபெருமானை வழிபடுவது நல்லது.
மகரம் :
மகர ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு பெருமையாக அமையும். உடலில் நீண்டநாட்களாக இருந்து வந்த உடல்நலக்குறைவு நீங்கம். கணவன் மனைவி இடையே இருந்து வந்த கருத்துவேறுபாடு நீங்கும்.
கும்பம் :
கும்ப ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு சற்று மந்தமாகவே அமையும், எதிர்பார்த்த காரியம் ஒன்று தாமதம் ஆகலாம். வீண் குழப்பமும், மன உளைச்சலுக்கும் ஆளாகக்கூடாது. அமைதியையும், பொறுமையையும் கடைபிடித்தால் வெற்றி கிட்டும்.
மீனம்:
மீன ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு சற்று ஏமாற்றமான நாளாக அமையும். அடுத்தவர் தேவையில்லாமல் வம்பிழுத்தாலும் அமைதியாக செல்வதே நல்லது. கொடுக்கல், வாங்கல் விவகாரங்களை ஒத்திவைக்க வேண்டும். அடுத்தவர் கடனுக்கு உத்தரவாதம் அளிக்கக்கூடாது.