மேலும் அறிய

Rasipalan Today Oct 25: கன்னிக்கு கவலைகள் குறையும்; துலாமுக்கு வெற்றி- உங்கள் ராசிக்கான பலன்?

Rasi Palan Today, October 26: அக்டோபர் மாதம் 26ஆம் நாள் சனிக் கிழமையான இன்று எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் மற்றும் நல்ல நேரம் குறித்து விரிவாக காணலாம்.

இன்றைய ராசி பலன்கள்: Rasi Palan Today October 26, 2024: 

 அன்பார்ந்த வாசகர்களே இன்றைய நாளில் உங்கள் ராசிக்கு எப்படி இருக்க போகிறது என்று பார்க்கலாம்....

மேஷ ராசி
 
சொத்து வாங்குவது குறித்த சிந்தனைகள் அதிகரிக்கும். உறவினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். உடல் ஆரோக்கியம் சார்ந்த இன்னல்கள் மறையும். கடனை அடைப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும். அலுவலகப் பணிகளில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். விவசாயப் பணிகளில் ஆலோசனைகள் கிடைக்கும். புகழ் மேம்படும் நாள்.
 
ரிஷப ராசி
 
மறைமுகமாக இருந்துவந்த திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். எதிர்பாராத வரவுகள் ஏற்படும். புதிய தொழில்நுட்ப கருவிகள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். அக்கம்-பக்கம் இருப்பவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். குடும்பத்துடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். மாறுபட்ட அனுபவம் மூலம் தெளிவு ஏற்படும். இன்பம் நிறைந்த நாள்.
 
மிதுன ராசி
 
பயணங்களால் ஆதாயம் உண்டாகும். பழைய நிகழ்வுகளால் மகிழ்ச்சியான சூழல் அமையும். செயல்களில் இருந்துவந்த எதிர்ப்புகள் குறையும். நகல் பணிகளில் இருந்துவந்த நெருக்கடிகள் மறையும். அடமான பொருட்களை மீட்பது தொடர்பான எண்ணம் பிறக்கும். உறவினர்களிடம் ஒத்துழைப்பு அதிகரிக்கும். சக ஊழியர்களிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் குறையும். திடீர் வரவுகள் மூலம் கையிறுப்புகள் அதிகரிக்கும். உதவி கிடைக்கும் நாள்.
 
 கடக ராசி
 
மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். திறமைக்கு உண்டான அங்கீகாரம் கிடைப்பதில்  அலைச்சல் ஏற்படும். உடன்பிறந்தவர்களிடத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். மனதளவில் புதிய தன்னம்பிக்கை ஏற்படும். பத்திரம் சார்ந்த விஷயங்களில் கவனம் வேண்டும். அலுவலகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தம் சாதகமாக அமையும். பொறுமை வேண்டிய நாள். 
 
 சிம்ம ராசி
 
உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். விவேகமான பேச்சுக்கள் நன்மதிப்பை ஏற்படுத்தும். வியாபாரப் போட்டிகளை சமாளிப்பீர்கள். உறவுகளின் வழியில் சுபச் செய்திகள் கிடைக்கும். உத்தியோகத்தில் அனுசரித்துச் செல்வது நல்லது. விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். அரசு காரியங்களில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். பாராட்டு நிறைந்த நாள்.
 
 கன்னி ராசி
 
உடன்பிறந்தவர்களிடத்தில் அன்பு அதிகரிக்கும். முயற்சிக்கு உண்டான பலன்கள் கிடைக்கும். எதையும் பகுத்தறிந்து முடிவு செய்வீர்கள். வசதி வாய்ப்புகளை மேம்படுத்துவது தொடர்பான  சிந்தனைகள் அதிகரிக்கும். வேலையாட்களிடம் ஒத்துழைப்பான சூழல் அமையும். மனதளவில் இருந்துவந்த கவலைகள் குறையும். வியாபாரத்தில் பற்று வரவு மேம்படும். உழைப்புக்கு  உண்டான மதிப்பு கிடைக்கும். மாற்றம் நிறைந்த நாள்.
 
 துலாம் ராசி
 
அரசு வழியில் மதிப்பு மேம்படும். எதிர்பாராத சில பயணங்கள் உண்டாகும். சமூக நிகழ்வுகளால் மனதளவில் புதிய கண்ணோட்டம் ஏற்படும். செயல்பாடுகளில் சுதந்திரத் தன்மை அதிகரிக்கும். குடும்பத்தில் கலந்தாலோசித்து சில முடிவுகளை எடுப்பீர்கள். பழகும் விதங்களில் சில மாற்றங்கள் ஏற்படும். சிக்கலான சில விஷயங்களுக்கு தெளிவு பிறக்கும். வெற்றி நிறைந்த நாள்.
 
விருச்சிக ராசி
 
தந்தை வழியில் ஒத்துழைப்பு உண்டாகும். ஆன்மிகப் பணிகளில் ஆர்வம் ஏற்படும். ஆராய்ச்சி சார்ந்த துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். எதிலும் தனித்தன்மையுடன் காணப்படுவீர்கள். உயர் அதிகாரிகள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். வெளியூர் பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். மனதில் இனம்புரியாத சில புதிய தேடல் ஏற்படும். அனுபவம் மேம்படும் நாள்.
 
தனுசு ராசி
 
மாணவர்களுக்கு குழப்பங்கள் தோன்றி மறையும். உடற்பயிற்சி விஷயங்களில் விழிப்புணர்வு வேண்டும். உழைப்புக்கு உண்டான மதிப்பு தாமதமாக கிடைக்கும். வியாபாரப் பணிகளில் கவனம் வேண்டும். அரசு சார்ந்த துறைகளில் அலைச்சல் மேம்படும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு புதிய அனுபவம் ஏற்படும். இறை பணிகளில் ஆர்வமின்மை உண்டாகும். அலைச்சல் மேம்படும் நாள்.
 
மகர ராசி
 
விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வாழ்க்கைத் துணைவரால் அனுகூலம் ஏற்படும். சக ஊழியர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். வெளியூர் பயணங்களில் இருந்துவந்த தாமதங்கள் குறையும். பிடித்த இடத்திற்கு சென்று வருவீர்கள். நண்பர்களின் மூலம் ஆதாயம் அடைவீர்கள். பங்குதாரர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். மேன்மை நிறைந்த நாள்.
 
கும்ப ராசி
 
துரிதமான செயல்பாடுகளால் போட்டிகளை வெற்றி கொள்வீர்கள். அரசு காரியங்களில் அனுகூலம் ஏற்படும். வழக்குகளில் சாதகமான சூழல் அமையும். தனம் சார்ந்த நெருக்கடிகள் குறையும். வியாபாரத்தில் வரவுகள் அதிகரிக்கும். நீண்ட நேரம் கண்விழிப்பதை தவிர்க்கவும். உத்தியோகத்தில் மாறுபட்ட அனுபவம் ஏற்படும். சுபம் நிறைந்த நாள்.
 
மீன ராசி
 
குழந்தைகளின் செயல்பாடுகளில் கவனம் வேண்டும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். வெளியூர் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். கூட்டாளிகளிடம் ஒத்துழைப்புகள் உண்டாகும். உயர்நிலைக் கல்வியில் கவனம் வேண்டும். பணியில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் உண்டாகும். நன்மை நிறைந்த நாள்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

State Education Policy: பிளஸ் 1 பொதுத்தேர்வு ரத்து; 8ஆம் வகுப்புவரை ஆல்பாஸ்- மாணவர்களுக்கு காத்திருக்கும் முக்கிய மாற்றங்கள்!
State Education Policy: பிளஸ் 1 பொதுத்தேர்வு ரத்து; 8ஆம் வகுப்புவரை ஆல்பாஸ்- மாணவர்களுக்கு காத்திருக்கும் முக்கிய மாற்றங்கள்!
TVK Vijay: நான்தான் முதலமைச்சர்.. அடம்பிடிக்கும் விஜய்.. அதிமுக கூட்டணிக்கு நோ சொன்ன தளபதி!
TVK Vijay: நான்தான் முதலமைச்சர்.. அடம்பிடிக்கும் விஜய்.. அதிமுக கூட்டணிக்கு நோ சொன்ன தளபதி!
Trump Vs Tiruppur: அய்யய்யோ.! இடியை இறக்கிய ட்ரம்ப் - முடங்கப் போகும் திருப்பூர் - அப்போ தொழிலாளர்களோட கதி.?
அய்யய்யோ.! இடியை இறக்கிய ட்ரம்ப் - முடங்கப் போகும் திருப்பூர் - அப்போ தொழிலாளர்களோட கதி.?
Mahindra Thar: ஒரிஜினல் மான்ஸ்டர் வரார்.. ஆஃப் ரோட் கிங்கின் புதிய அவதாரம், தார் லாஞ்ச் எப்போது தெரியுமா?
Mahindra Thar: ஒரிஜினல் மான்ஸ்டர் வரார்.. ஆஃப் ரோட் கிங்கின் புதிய அவதாரம், தார் லாஞ்ச் எப்போது தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kaliyammal In TVK | திமுக - அதிமுகவிற்கு NO.. தவெகவில்  காளியம்மாள்? தேதி குறித்த விஜய்!
சங்கீதா - கிரிஷ் விவாகரத்து? INSTAGRAM-ல் பெயர் மாற்றம்! கோலிவுட்டில் அடுத்த பூகம்பம்  | Sangeetha Kirsh Divorce
”ஏய் என்ன பேசிட்டு இருக்க”மேயருக்கு எதிராக போர்க்கொடி!அடித்துக் கொண்ட கவுன்சிலர்கள்
”ஷாருக்கானுக்கு தேசிய விருது ஒரு நியாயம் வேண்டாமா?”கொந்தளித்த நடிகை ஊர்வசி | Urvashi On  National Awards
காலியாகி கிடக்கும் கிராமம் ஒற்றை ஆளாய் நிற்கும் தாத்தா நாட்டாகுடியின் கண்ணீர் கதை | Sivagangai News

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
State Education Policy: பிளஸ் 1 பொதுத்தேர்வு ரத்து; 8ஆம் வகுப்புவரை ஆல்பாஸ்- மாணவர்களுக்கு காத்திருக்கும் முக்கிய மாற்றங்கள்!
State Education Policy: பிளஸ் 1 பொதுத்தேர்வு ரத்து; 8ஆம் வகுப்புவரை ஆல்பாஸ்- மாணவர்களுக்கு காத்திருக்கும் முக்கிய மாற்றங்கள்!
TVK Vijay: நான்தான் முதலமைச்சர்.. அடம்பிடிக்கும் விஜய்.. அதிமுக கூட்டணிக்கு நோ சொன்ன தளபதி!
TVK Vijay: நான்தான் முதலமைச்சர்.. அடம்பிடிக்கும் விஜய்.. அதிமுக கூட்டணிக்கு நோ சொன்ன தளபதி!
Trump Vs Tiruppur: அய்யய்யோ.! இடியை இறக்கிய ட்ரம்ப் - முடங்கப் போகும் திருப்பூர் - அப்போ தொழிலாளர்களோட கதி.?
அய்யய்யோ.! இடியை இறக்கிய ட்ரம்ப் - முடங்கப் போகும் திருப்பூர் - அப்போ தொழிலாளர்களோட கதி.?
Mahindra Thar: ஒரிஜினல் மான்ஸ்டர் வரார்.. ஆஃப் ரோட் கிங்கின் புதிய அவதாரம், தார் லாஞ்ச் எப்போது தெரியுமா?
Mahindra Thar: ஒரிஜினல் மான்ஸ்டர் வரார்.. ஆஃப் ரோட் கிங்கின் புதிய அவதாரம், தார் லாஞ்ச் எப்போது தெரியுமா?
Vice President Election: பிரதமர் மோடி கையில் அதிகாரம் - புதிய குடியரசு துணை தலைவர் யார்? டாப் 4ல் இரண்டு ஆளுநர்கள்
Vice President Election: பிரதமர் மோடி கையில் அதிகாரம் - புதிய குடியரசு துணை தலைவர் யார்? டாப் 4ல் இரண்டு ஆளுநர்கள்
தமிழ்நாட்டின் வயிற்றில் அடித்த ட்ரம்ப்.. டேஞ்சரில் ஒன்னே முக்கால் லட்சம் கோடி பிசினஸ் - காப்பாற்றுவது யார்?
தமிழ்நாட்டின் வயிற்றில் அடித்த ட்ரம்ப்.. டேஞ்சரில் ஒன்னே முக்கால் லட்சம் கோடி பிசினஸ் - காப்பாற்றுவது யார்?
தெருவிளக்கில் படிக்கும் அரசுப்பள்ளி மாணவர்கள்... திருவண்ணாமலை கிராமத்திற்கு வெளிச்சம் தருமா தமிழக அரசு?
தெருவிளக்கில் படிக்கும் அரசுப்பள்ளி மாணவர்கள்... திருவண்ணாமலை கிராமத்திற்கு வெளிச்சம் தருமா தமிழக அரசு?
Top 10 News Headlines: மாநில கல்விக் கொள்கை வெளியீடு, தேர்தல் ஆணையத்திற்கு ராகுல் காந்தி எச்சரிக்கை - 11 மணி செய்திகள்
மாநில கல்விக் கொள்கை வெளியீடு, தேர்தல் ஆணையத்திற்கு ராகுல் காந்தி எச்சரிக்கை - 11 மணி செய்திகள்
Embed widget