Today Rasipalan: தனுசுக்கு கல்வியில் முன்னேற்றம்; மகரத்துக்கு தன்னம்பிக்கை: இன்றைய ராசிபலன்கள் இதோ..
Today Rasipalan: மே மாதம் 5ஆம் நாள் ஞாயிற்றுக் கிழமையான இன்று எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாக காணலாம்.
நாள்: 05.05.2024
கிழமை: ஞாயிறு
நல்ல நேரம்:
காலை 8.00 மணி முதல் காலை 9.00 மணி வரை
மாலை 3.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை
இராகு:
மாலை 4.30 மணி முதல் மாலை 6..00 மணி வரை
குளிகை:
பிற்பகல் 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை
எமகண்டம்:
பகல் 12.00 மணி முதல் பகல் 1.30 மணி வரை
சூலம் - மேற்கு
மேஷம்
அரசு பணிகளில் அலைச்சல் ஏற்படும். உயர் அதிகாரிகளிடத்தில் அனுசரித்துச் செல்லவும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வெளியூர் பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சார்ந்த தொழிலில் புதிய அனுபவம் கிடைக்கும். ரகசியமான சில செயல்களில் ஆர்வம் ஏற்படும். செலவு நிறைந்த நாள்.
ரிஷபம்
தந்தை வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். ஆன்மிகப் பணிகளில் ஆர்வம் உண்டாகும். உயர்கல்வி தொடர்பான செயல்களில் தெளிவு பிறக்கும். எதிர்பாராத சில உதவிகள் மூலம் மாற்றம் உண்டாகும். உடல் ஆரோக்கிய பிரச்சனைகள் குறையும். வர்த்தக பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். ஆர்வம் நிறைந்த நாள்.
மிதுனம்
எதிர்காலம் தொடர்பான சில முடிவுகளை எடுப்பீர்கள். நீண்ட காலமாக இருந்துவந்த பிரச்சனைகள் குறையும். எதிர்பாராத சில அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் கிடைக்கும். வாழ்க்கை துணைவருடன் சிறு தூர பயணங்கள் சென்று வருவீர்கள். வியாபாரம் தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும். முயற்சிகளில் இருந்துவந்த தடைகள் விலகும். பக்தி நிறைந்த நாள்.
கடகம்
நண்பர்கள் பற்றிய புரிதல் ஏற்படும். பழக்கவழக்கங்களில் சில மாற்றங்கள் உண்டாகும். போட்டித் தேர்வுகளில் சாதகமான முடிவு கிடைக்கும். எதிலும் விவேகத்துடன் செயல்படவும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். உழைப்புக்கு ஏற்ற மதிப்பு கிடைக்கும். ஆசைகள் மேம்படும் நாள்.
சிம்மம்
பணிகளில் மாறுபட்ட சூழல் உண்டாகும். கடன் விஷயங்களில் சிந்தித்துச் செயல்படவும். தம்பதிகளுக்குள் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. வியாபாரம் சார்ந்த விஷயங்களில் பொறுமையுடன் இருக்கவும். எதிர்பாராத சில வாய்ப்புகள் மூலம் மாற்றம் ஏற்படும். கால்நடை தொடர்பான விஷயங்களில் அலைச்சல் உண்டாகும். புதிய நபர்களிடம் தனிப்பட்ட விஷயங்களை பகிர்வதை தவிர்க்கவும். அனுபவம் மேம்படும் நாள்.
கன்னி
மனதில் புதுவிதமான ஆசைகள் பிறக்கும். பூர்வீகம் சார்ந்த சில பிரச்சனைகள் குறையும். கற்பனைத் துறைகளில் முன்னேற்றம் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். வழக்கு சார்ந்த விஷயங்களில் திருப்பம் ஏற்படும். சிந்தித்துச் செயல்படவேண்டிய நாள்.
துலாம்
ஆரோக்கியம் தொடர்பான சில பிரச்சனைகள் குறையும். உறவுகளின் வழியில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். மனை மீதான கடன் உதவி கிடைக்கும். சிந்தனை போக்கில் மாற்றம் ஏற்படும். குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். ஆதாயம் நிறைந்த நாள்.
விருச்சிகம்:
உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். அக்கம்-பக்கம் இருப்பவர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைக்கும். பயணங்களின் மூலம் புதிய அனுபவம் ஏற்படும். உடல் ஆரோக்கிய விஷயங்களில் கவனம் வேண்டும். வித்தியாசமான கற்பனைகளால் குழப்பம் ஏற்படும். கல்வியில் ஆர்வமின்மை ஏற்பட்டு நீங்கும். சுபசெலவு நிறைந்த நாள்.
தனுசு
புதிய வீடு மற்றும் வாகனம் வாங்குவது சார்ந்த எண்ணங்கள் மேம்படும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். குடும்பத்தாரிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். எழுத்துத் துறைகளில் மாறுபட்ட அனுபவம் கிடைக்கும். வியாபாரம் சார்ந்த ஆலோசனைகள் கிடைக்கும். ஜெயம் நிறைந்த நாள்.
மகரம்
மனதளவில் இருந்துவந்த குழப்பம் விலகும். செயல்பாடுகளில் துரிதம் ஏற்படும். மறைமுகமாக திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். விளையாட்டுப் போட்டிகளில் ஈடுபட்டு மனமகிழ்வீர்கள். வரவுகளில் இருந்துவந்த தாமதங்கள் விலகும். குடும்ப உறுப்பினர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.
கும்பம்
எதிர்பாராத சில பயணங்களால் அலைச்சல் ஏற்படும். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கம் உண்டாகும். விதண்டாவாத பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. வாக்குறுதி அளிக்கும் போது சூழ்நிலை அறிந்து செயல்படவும். வெற்றி நிறைந்த நாள்.
மீனம்
சேமிப்பு தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். செயல்பாடுகளில் ஒருவிதமான சோர்வு உண்டாகும். சஞ்சலமான சிந்தனைகளால் குழப்பம் ஏற்படும். புதுவிதமான இடங்களுக்கு சென்று வருவீர்கள். எதிலும் தாழ்வு மனப்பான்மையின்றி செயல்படவும். அனுகூலம் நிறைந்த நாள்.