Rasipalan : மகரத்துக்கு தடைகள் விலகும், தனுசுக்கு லாபம்: இன்றைய ராசி பலன் இதோ!
Today Rasipalan: மே மாதம் 22ஆம் நாள் புதன் கிழமையான இன்று எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாக காணலாம்.
நாள்: 22.05.2024
கிழமை: புதன்
நல்ல நேரம்:
காலை 9.30 மணி முதல் காலை 10.30 மணி வரை
மாலை 4.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை
இராகு:
பகல் 12.00 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை
குளிகை:
காலை 10.30 மணி முதல் பகல் 12.00 மணி வரை
எமகண்டம்:
காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை
சூலம் - வடக்கு
மேஷம்
மனதளவில் புதிய உற்சாகம் பிறக்கும். சகோதரர்களின் வழியில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறையும். நுட்பமான பொருட்கள் மீது ஆர்வம் ஏற்படும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் அடைவீர்கள். உறவுகளின் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். சுப காரிய பேச்சுவார்த்தைகள் கைகூடும். போட்டித் தேர்வுகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். தாமதம் மறையும் நாள்.
ரிஷபம்
சாமர்த்தியமாக செயல்பட்டு நினைத்ததை முடிப்பீர்கள். நெருக்கடியாக இருந்துவந்த சில பிரச்சனைகள் குறையும். எதிர்பாராத சில உதவிகளால் மாற்றம் ஏற்படும். ஆரோக்கிய பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். வியாபாரத்தில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். சுபம் நிறைந்த நாள்.
மிதுனம்
செய்யும் செயல்களில் புத்திசாலித்தனம் வெளிப்படும். திட்டமிட்டு செயல்பட்டால் முயற்சியில் வெற்றி கிடைக்கும். வியாபாரத்தில் இருந்துவந்த தடைகள் விலகி வளர்ச்சி உண்டாகும். பெரியோர் ஆதரவு நன்மையை தரும். சக பணியாளர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். குடும்ப பிரச்சனைகளில் பொறுமையை கையாளவும். குழப்பம் நிறைந்த நாள்.
கடகம்
குடும்பத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் விலகும். தொழிலில் அபிவிருத்திக்கான சூழல் அமையும். புதிய வாகனம் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். பயனற்ற பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். நினைத்த சில உதவிகள் சாதகமாக அமையும். ஓய்வு நிறைந்த நாள்.
சிம்மம்
பழைய பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். மறைமுக போட்டிகளை வெற்றி கொள்வீர்கள். கருத்துகளுக்கு உண்டான மதிப்பு கிடைக்கும். மனதளவில் புதிய தன்னம்பிக்கை பிறக்கும். வியாபாரத்தில் புதிய அனுபவம் ஏற்படும். பக்தி நிறைந்த நாள்.
கன்னி
நண்பர்களுக்கிடையே புரிதல் அதிகரிக்கும். உடல் தோற்றப்பொலிவில் மாற்றம் ஏற்படும். தடைபட்ட வரவுகள் கிடைக்கும். பயணங்களின் மூலம் ஆதாயம் அடைவீர்கள். பழைய பிரச்சனைகளுக்கு சில தீர்வுகள் கிடைக்கும். கல்விப் பணிகளில் மேன்மை உண்டாகும். வியாபாரம் சார்ந்த எண்ணங்கள் அதிகரிக்கும். உத்தியோகப் பணிகளில் திறமைகள் வெளிப்படும். ஆசைகள் மேம்படும் நாள்.
துலாம்
புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். குடும்பத்தில் சிறு சிறு விவாதங்கள் தோன்றி மறையும். மற்றவர்கள் பற்றிய கருத்துகளை தவிர்க்கவும். வியாபாரம் நிமிர்த்தமான பயணங்களால் ஆதாயம் ஏற்படும். சக ஊழியர்களிடத்தில் அளவுடன் இருப்பது நல்லது. சஞ்சலமான சிந்தனைகளால் சிறு சிறு குழப்பங்கள் தோன்றி மறையும். நிம்மதி நிறைந்த நாள்.
விருச்சிகம்:
குடும்பத்தில் நெருக்கடி அதிகரிக்கும். வரவு, செலவு செய்வதில் விவேகத்துடன் செயல்படவும். வாகன பழுதுகளை சரி செய்வீர்கள். வெளியூர் பயணங்களின் மூலம் எதிர்பார்த்த நன்மை உண்டாகும். வாக்குறுதி அளிப்பதில் கவனம் வேண்டும். ஜாமின் செயல்களில் ஈடுபடுவதை தவிர்க்கவும். வியாபார செயல்களில் சிந்தித்துச் செயல்படவும். வெற்றி நிறைந்த நாள்.
தனுசு
வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். சிலருக்கு புதிய சொத்து சேர்க்கை உண்டாகும். அலுவலகத்தில் ஒத்துழைப்பான சூழல் ஏற்படும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். புதிய வாய்ப்புகளின் மூலம் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். அரசு வழி முயற்சியில் ஆதாயம் அடைவீர்கள். நலம் நிறைந்த நாள்.
மகரம்
செயல்களில் இருந்துவந்த தடைகள் விலகும். உடன்பிறந்தவர்களின் மூலம் ஆதாயம் ஏற்படும். வியாபாரத்தில் இருந்துவந்த சங்கடங்கள் விலகும். அனுசரித்துச் செல்வதன் மூலம் ஆதாயம் அடைவீர்கள். வெளியூர் பொருட்கள் மூலம் மேன்மை உண்டாகும். எதிர்பார்த்த சில மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். ஆர்வம் மேம்படும் நாள்.
கும்பம்
பண வரவில் இருந்துவந்த தடைகள் விலகும். எதிர்பாராத சில பயணங்கள் உண்டாகும். புதிய தொழில்நுட்பம் சார்ந்த துறைகளின் மீது ஈடுபாடு அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருந்துவந்த மனவருத்தம் விலகும். மனதளவில் சில மாற்றங்கள் பிறக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திட்டமிட்ட வேலைகள் வெற்றியாகும். நன்மை நிறைந்த நாள்.
மீனம்
நினைத்த செயல்களை செய்து முடிப்பதில் இழுபறி உண்டாகும். வாகன பயணங்களில் கவனம் வேண்டும். அரசு காரியங்களில் விவேகத்துடன் செயல்படவும். பலதரப்பட்ட சிந்தனைகளால் மனதில் குழப்பம் ஏற்படும். எதிர்பார்ப்புகள் அதிக முயற்சிக்குப்பின் நிறைவேறும். செலவுகள் செய்தாலும் திருப்தி ஏற்படாது. உடன் பிறப்புகளால் அலைச்சல் உண்டாகும். பொறுமை வேண்டிய நாள்.