Today Rasipalan March 22: கும்பத்துக்கு அசதி; மீனத்துக்கு பயம் - உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்!
Today Rasipalan: மார்ச் 22ஆம் தேதி வெள்ளிக்கிழமையான இன்று எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாக காணலாம்.
நாள்: 22.03.2024 - வெள்ளிக்கிழமை
நல்ல நேரம்:
காலை 9.30 மணி முதல் காலை 10.30 மணி வரை
பகல் 2.00 மணி முதல் பகல் 3.00 மணி வரை
இராகு:
காலை 10.30 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை
குளிகை:
காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை
எமகண்டம்:
மாலை 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை
சூலம் - மேற்கு
மேஷம்
விடாப்பிடியாக செயல்பட்டு நினைத்ததை செய்து முடிப்பீர்கள். வர்த்தகம் தொடர்பான பணிகளில் அனுகூலமான வாய்ப்பு கிடைக்கும். எதிலும் விவேகத்துடன் செயல்படவும். கலைப் பணிகளில் ஆர்வம் ஏற்படும். எதிர்பாராத இடமாற்றங்கள் உண்டாகும். கொடுக்கல், வாங்கலில் லாபம் மேம்படும். வெற்றி நிறைந்த நாள்.
ரிஷபம்
மனதளவில் திருப்தி ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே புரிதல் உண்டாகும். சகோதரர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். எதிர்பார்த்த தனவரவுகள் சாதகமாகும். புதிய வீடு வாங்குவது சார்ந்த எண்ணங்கள் மேம்படும். சமூகப் பணிகளில் செல்வாக்கு அதிகரிக்கும். நட்பு நிறைந்த நாள்.
மிதுனம்
திறமைக்கான மதிப்பு கிடைக்கும். குழந்தைகளின் ஆரோக்கியம் மேம்படும். அமைதியான நடவடிக்கை மாற்றத்தை ஏற்படுத்தும். மனதில் புதுவிதமான தேடல் உண்டாகும். கடினமான பணிகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். வேலையாட்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான சூழல் உண்டாகும். பணிவு வேண்டிய நாள்.
கடகம்
குடும்பத்தில் கலகலப்பான சூழல் உண்டாகும். எடுத்துச் செல்லும் உடைமைகளில் கவனம் வேண்டும். ஆடை, ஆபரணச்சேர்க்கை ஏற்படும். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் அடைவீர்கள். திறமைகளை வெளிப்படுத்துவதில் சூழ்நிலை அறிந்து செயல்படவும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகளால் திருப்தி ஏற்படும். பேச்சுக்களால் காரிய அனுகூலம் உண்டாகும். பெருமை நிறைந்த நாள்.
சிம்மம்
மனதில் புதிய வேலை நிமிர்த்தமான சிந்தனை அதிகரிக்கும். சமூகப் பணிகளில் ஆர்வம் உண்டாகும். எதிலும் பொறுமையுடன் செயல்படுவது நல்லது. எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் ஏற்படும். சஞ்சலமான சிந்தனைகளை தவிர்ப்பது நல்லது. விளையாட்டு தொடர்பான விஷயங்களில் சில நுட்பங்களை அறிவீர்கள். சாந்தம் வேண்டிய நாள்.
கன்னி
விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். அரசு சார்ந்த விஷயங்களில் பொறுமையை கையாளவும். வெளியூர் தொடர்பான கல்வி வாய்ப்புகள் சாதகமாகும். எதிர்பாராத தனவரவுகளால் பொருளாதாரம் மேம்படும். வியாபாரத்தில் சற்று விழிப்புணர்வுடன் செயல்படவும். மறைமுகமான தடைகளை புரிந்து கொள்வீர்கள். இன்பம் நிறைந்த நாள்.
துலாம்
வியாபாரத்தில் லாபம் மேம்படும். குடும்பத்தில் அமைதி உண்டாகும். கல்வியில் இருந்துவந்த குழப்பம் விலகும். சமூகம் தொடர்பான பணிகளில் மதிப்பு மேம்படும். மற்றவர்களின் உணர்வுகளை புரிந்து செயல்படுவீர்கள். பழைய பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவு பிறக்கும். உடன் பிறந்தவர்களின் ஆதரவு மேம்படும். உதவி கிடைக்கும் நாள்.
விருச்சிகம்:
புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். நினைத்த பணிகளை செய்து முடிப்பீர்கள். முதலீடு சார்ந்த ஆலோசனை கிடைக்கும். பயணங்களின் மூலம் மனதளவில் மாற்றம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். அரசு வழியில் இருந்துவந்த தாமதங்கள் விலகும். உத்தியோகத்தில் பொறுப்பு மேம்படும். தெளிவு பிறக்கும் நாள்.
தனுசு
தொழில் சார்ந்த பயணங்களில் எதிர்பார்ப்பு நிறைவேறும். மனதில் இறை சார்ந்த சிந்தனை அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் புதிய அனுபவம் ஏற்படும். எழுத்து துறைகளில் சாதகமான சூழல் உண்டாகும். வருமான வாய்ப்புகள் பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும். மனை தொடர்பான பணிகளில் பொறுமை வேண்டும். உயர் அதிகாரிகள் பற்றிய புரிதல் உண்டாகும். அமைதி வேண்டிய நாள்.
மகரம்
நிதானமான செயல்களால் நன்மதிப்பு உண்டாகும். உயர் அதிகாரிகள் பற்றிய புரிதல் மேம்படும். வியாபாரத்தில் மாற்றமான தருணங்கள் உண்டாகும். எதிர்பாராத சில தனவரவுகள் கிடைக்கும். எதிர்காலம் சார்ந்த எண்ணங்களால் குழப்பம் உண்டாகும். முயற்சிகளில் மாறுபட்ட அனுபவம் ஏற்படும். கவனம் வேண்டிய நாள்.
கும்பம்
பேச்சுக்களில் பொறுமை வேண்டும். புதிய விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். நண்பர்களின் வட்டம் விரிவடையும். தவறிய சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். அரசு தொடர்பான விஷயங்களில் எதிர்பார்ப்பு நிறைவேறும். உடன் இருப்பவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறையும். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். அசதி விலகும் நாள்.
மீனம்
பழைய பிரச்சனைகளுக்கு தீர்வு உண்டாகும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். வாகன பயணத்தில் விவேகம் வேண்டும். மனதில் ஆரோக்கியம் பற்றிய எண்ணம் அதிகரிக்கும். வியாபாரத்தில் மாற்றம் உண்டாகும். தேவையற்ற சிந்தனைகளை தவிர்ப்பது நல்லது. கால்நடை தொடர்பான பணிகளில் ஆர்வம் ஏற்படும். பயம் விலகும் நாள்.