Rasi Palan Today, July 29: தனுசுக்கு ஜெயம், மகரத்துக்கு ஆதரவு: உங்கள் ராசிக்கு என்ன பலன்கள்..!
Rasi Palan Today, July 98: ஜூலை மாதம் 29ஆம் நாள் திங்கள் கிழமையான இன்று எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் மற்றும் நல்ல நேரம் குறித்து விரிவாக காணலாம்.

இன்றைய பஞ்சாங்கம் நல்ல நேரம் | Today Nalla Neram Panchangam:
நாள்: 29.07.2024
கிழமை: திங்கள்
நல்ல நேரம்:
காலை 6.15 மணி முதல் காலை 7.15 மணி வரை
மாலை 4.45 மணி முதல் மாலை 5.45 மணி வரை
இராகு:
காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை
குளிகை:
பிற்பகல் 1.30 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை
எமகண்டம்:
காலை 10.30 மணி முதல் பகல் 12.00 மணி வரை
சூலம் - கிழக்கு
இன்றைய ராசி பலன்கள்:
மேஷம்
குடும்ப வருமானத்தை மேம்படுத்த முயல்வீர்கள். புதுமையான செயல்களில் கவனம் வேண்டும். எதிர்பாராத செலவுகள் மூலம் புதிய அனுபவம் உண்டாகும். ஆரோக்கியம் குறித்த ஆலோசனைகள் கிடைக்கும். பேச்சுக்களில் பொறுமை வேண்டும். நீண்ட நேரம் கண் விழிப்பதை தவிர்க்கவும். உலக வாழ்க்கை பற்றிய புதுவிதமான கண்ணோட்டம் பிறக்கும். பாராட்டு நிறைந்த நாள்.
ரிஷபம்
விவேகமான செயல்பாடுகள் நன்மதிப்பை ஏற்படுத்தும். சந்தேக உணர்வுகளால் நெருக்கமானவர்களிடம் கருத்து வேறுபாடுகள் உண்டாகும். உத்தியோகப் பணிகளில் சற்று விழிப்புணர்வுடன் செயல்படுவது நல்லது. மனதில் பலதரப்பட்ட சிந்தனைகள் ஏற்படும். வேள்வி பணிகளில் ஈடுபாடுகள் உண்டாகும். வாகன பயணங்களில் விவேகம் வேண்டும். நன்மை நிறைந்த நாள்.
மிதுனம்
சுப காரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் கைகூடும். இறை சார்ந்த பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். கலை சார்ந்த செயல்பாடுகளில் ஆர்வம் ஏற்படும். குடும்பத்தில் அமைதி நிலவும். வியாபார அபிவிருத்திக்கான வாய்ப்புகள் அமையும். வெளியூரில் இருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். அமைதி நிறைந்த நாள்.
கடகம்
அனுபவ முடிவுகளால் அனுகூலம் உண்டாகும். தனிப்பட்ட விஷயங்களில் கவனம் வேண்டும். மனை சார்ந்த செயல்களால் ஆதாயம் உண்டாகும். உறவுகளின் வழியில் ஒத்துழைப்பு மேம்படும். முன்யோசனை இன்றி செயல்படுவதை குறைத்துக் கொள்ளவும். விவசாய துறைகளில் மேன்மை ஏற்படும். செலவு நிறைந்த நாள்.
சிம்மம்
எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் உண்டாகும். அதிர்ஷ்டகரமான சில வாய்ப்புகள் மூலம் முன்னேற்றம் ஏற்படும். பொருளாதாரம் தொடர்பான செயல்களில் கவனம் வேண்டும். வேலையாட்கள் மாற்றம் குறித்த சிந்தனைகள் உண்டாகும். பணிபுரியும் இடத்தில் மதிப்பு கூடும். திட்டமிட்ட சில பணிகள் பலிதமாகும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.
கன்னி
செயல்பாடுகளில் ஒருவிதமான சோர்வு ஏற்படும். உடன்பிறந்தவர்களால் அலைச்சல் உண்டாகும். சமூகப் பணிகளில் சில மாற்றமான சூழல் ஏற்படும். வெளி உணவுகளை குறைத்துக் கொள்ளவும். பயனற்ற பேச்சுக்களை தவிர்க்கவும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். வெளியூர் வர்த்தக பணிகளில் கவனம் வேண்டும். தயக்கம் நிறைந்த நாள்.
துலாம்
கெளரவ பொறுப்புகளால் மதிப்பு உயரும். மறதி பிரச்சனைகள் ஓரளவு குறையும். கணவன், மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவீர்கள். எதிர்கால சிந்தனைகள் மேம்படும். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். உயர் அதிகாரிகள் ஆதரவாக செயல்படுவார்கள். மனதில் நினைத்த சில காரியங்கள் நிறைவேறும். வரவு நிறைந்த நாள்.
விருச்சிகம்:
தர்ம காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். மனதளவில் இருந்துவந்த குழப்பம் விலகும். புதிய துறை சார்ந்த தேடல் அதிகரிக்கும். அதிர்ஷ்டகரமான சில வாய்ப்புகள் மூலம் மாற்றம் ஏற்படும். நீண்ட தூர பயண வாய்ப்புகள் கைகூடும். உத்தியோகத்தில் நிர்வாகத் திறமை வெளிப்படும். எதிராக செயல்பட்டவர்கள் விலகிச் செல்வார்கள். தாமதம் நிறைந்த நாள்.
தனுசு
பொழுதுபோக்கான செயல்பாடுகளால் விரயம் ஏற்படும். கடன் செயல்களில் பொறுமை காக்கவும். மாமன் உறவுகளிடம் அனுசரித்துச் செல்லவும். தந்தை வழியில் இருந்துவந்த நெருக்கடியான சூழல் மறையும். பூர்வீக சொத்துக்களில் மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். நுட்பமான செயல்களையும் எளிமையாக செய்து முடிப்பீர்கள். ஜெயம் நிறைந்த நாள்.
மகரம்
கொள்கை பிடிப்பு குணம் அதிகரிக்கும். கல்விப் பணிகளில் ஆர்வம் உண்டாகும். உறவினர்களின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். உடலில் இருந்துவந்த சோர்வு குறையும். புதிய சொத்துக்கள் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். நண்பர்களால் வருமான வாய்ப்புகள் உண்டாகும். ஆதரவு நிறைந்த நாள்.
கும்பம்
மனதில் புதுவிதமான செயல் திட்டம் பிறக்கும். கல்வி பணிகளில் சிறு குழப்பம் ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களின் விருப்பங்களை நிறைவேற்றி வைப்பீர்கள். தந்திரமான சில விஷயங்கள் மூலம் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். பாக பிரிவினை தொடர்பான செயல்களில் விவேகம் வேண்டும். வெற்றி நிறைந்த நாள்.
மீனம்
பழக்கவழக்கங்களில் சில மாற்றங்கள் ஏற்படும். பொன், பொருள் சேர்க்கை சிலருக்கு உண்டாகும். வாக்கு சாதுரியம் மூலம் ஆதாயம் அடைவீர்கள். பெருந்தன்மையான பேச்சுக்களின் மூலம் புதிய அறிமுகமும், செல்வாக்கும் அதிகரிக்கும். எதிர்காலம் சார்ந்த செயல்களில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் உங்கள் மீதான நம்பிக்கை மேம்படும். ஆக்கப்பூர்வமான நாள்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

