மேலும் அறிய

Today Rasipalan January 08: மேஷத்துக்கு விவேகம்; ரிஷபத்துக்கு நட்பு - உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் இதோ!

Today Rasipalan: ஜனவரி 8ஆம் தேதியான இன்று எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாக காணலாம்.

நாள்: 08.01.2024 - திங்கள் கிழமை

நல்ல நேரம்:

காலை 6.30 மணி முதல் காலை 7.30 மணி வரை

மாலை 4.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை

இராகு:

காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை

குளிகை:

பகல் 1.00 மணி முதல் மாலை 3.00  மணி வரை

எமகண்டம்:

காலை 10.30 மணி முதல் நண்பகல் 12.00  மணி வரை

சூலம் - கிழக்கு

மேஷம்

மனதில் இனம்புரியாத சில சிந்தனைகளால் குழப்பம் உண்டாகும். வாக்குறுதிகள் அளிப்பதை குறைத்துக் கொள்வது நல்லது. எதிர்பாராத செலவுகளின் மூலம் சேமிப்பு குறையும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். சக ஊழியர்களிடம் விவாதங்களை குறைத்துக் கொள்ளவும். விவேகம் வேண்டிய நாள். 

ரிஷபம்

மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். புதிய வேலை நிமிர்த்தமான முயற்சிகள் ஈடேறும். போட்டிகளில் பங்குபெற்று திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். தவறிய சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். வியாபாரத்தில் வேலையாட்களுடன் அனுசரித்து நடந்து கொள்ளவும். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் மாற்றங்கள் பிறக்கும். நட்பு மேம்படும் நாள்.

மிதுனம்

காப்பீடு தொடர்பான துறைகளில் ஆதாயம் மேம்படும். தடைபட்ட சில பணிகளை செய்து முடிப்பீர்கள். பணி தொடர்பான வெளியூர் பயணங்கள் கைகூடும். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் மேம்படும். வியாபாரப் பணிகளில் இருந்துவந்த தடைகள் விலகும். சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். நலம் நிறைந்த நாள். 

கடகம்

நண்பர்களின் ஆதரவு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும்.  பொருளாதாரத்தில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் ஏற்படும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் தோன்றும். குழந்தைகளின் எதிர்காலம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். பணிபுரியும் இடத்தில் சஞ்சலமான சிந்தனைகள் ஏற்பட்டு நீங்கும். பூர்வீக சொத்துக்களின் மூலம் ஆதாயம் ஏற்படும். ஊக்கம் நிறைந்த நாள். 

சிம்மம்

உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். அரசுப் பணிகளில் இருந்துவந்த இழுபறியான சூழல் மறையும். தாய்வழி உறவுகளிடம் அனுசரித்துச் செல்லவும். பணிகளில் முன்னேற்றமான வாய்ப்பு கிடைக்கும். இறை வழிபாடு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். மனதில் நினைத்த எண்ணங்கள் கைகூடுவதற்கான சூழல் அமையும். கவலை விலகும் நாள்.

கன்னி

மறைமுக எதிர்ப்புகளை புரிந்து கொள்வீர்கள். உடன்பிறந்தவர்கள் ஆதரவாகச் செயல்படுவார்கள். பணிகளில் திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளைப் பெறுவீர்கள். தொழில்நுட்பம் சார்ந்த தேடல் அதிகரிக்கும். நினைத்த எண்ணங்களை செயல் வடிவில் மாற்றுவீர்கள். வியாபாரத்தில் சில நுட்பமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். ஆக்கம் நிறைந்த நாள். 

துலாம்

உறவினர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பதில் இருந்துவந்த தடைகள் விலகும். உத்தியோகப் பணிகளில் மாற்றமான சூழ்நிலை ஏற்படும். குழந்தைகளின் எண்ணங்களை அறிந்து கொள்வீர்கள். தனம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். பயணங்களின் மூலம் ஆதாயம் அடைவீர்கள். வியாபாரத்தில் வரவுகள் மேம்படும். முயற்சி நிறைந்த நாள். 

விருச்சிகம்:

எந்தவொரு செயலிலும் ஆர்வமின்மையுடன் செயல்படுவீர்கள். மனதில் புதுவிதமான சிந்தனைகள் ஏற்படும். வாகன பயணங்களில் நிதானம் வேண்டும். உத்தியோகப் பணிகளில் பதற்றமின்றி செயல்படவும். கால்நடைகளின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.  வியாபாரப் பணிகளில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு மேம்படும். கவனம் வேண்டிய நாள்.

தனுசு

விலகிச் சென்றவர்கள் பற்றிய எண்ணம் மேம்படும். சுதந்திர மனப்பான்மை அதிகரிக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் மாற்றம் பிறக்கும். செயல்பாடுகளில் அனுபவம் வெளிப்படும். சுபகாரிய நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். புதிய செயல்களில் சிந்தித்துச் செயல்படவும். செலவு நிறைந்த நாள். 

மகரம்

சேமிப்பை மேம்படுத்துவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பம் விலகும். சுயதொழில் சார்ந்த பயணம் கைகூடும். உத்தியோகப் பணிகளில் மதிப்பு அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். சுபகாரியங்களில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். பொறுமை வேண்டிய நாள்.

கும்பம்

குடும்பத்தில் மகிழ்ச்சியான செய்திகள் உண்டாகும். திடீர் பயணங்களின் மூலம் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். சுபகாரியங்கள் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். ஆன்மிகப் பணிகளில் ஆர்வம் உண்டாகும். வியாபார ரீதியான செயல்பாடுகளில் அரசு சார்ந்த உதவி கிடைக்கும். பக்தி நிறைந்த நாள். 

மீனம்

வியாபாரப் பணிகளில் பொறுமையை கையாளவும். தனவரவுகளின் மூலம் சேமிப்பு அதிகரிக்கும். வெளியூர் தொடர்பான பயணங்களால் ஆதாயம் ஏற்படும். நீண்ட நேரம் கண் விழிப்பதை குறைத்துக் கொள்ளவும். புதிய முயற்சிகளை செயல்படுத்துவதில் கவனம் வேண்டும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் சூழ்நிலைக்கு ஏற்ப சிந்தித்துச் செயல்படவும். சுபம் நிறைந்த நாள். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Neet exam 2025 : ஆன்லைன் தேர்வு இல்லை! இந்த ஆண்டு நீட் தேர்வு இப்படி தான் நடக்கும்! NTA அறிவிப்பு...
Neet exam 2025 : ஆன்லைன் தேர்வு இல்லை! இந்த ஆண்டு நீட் தேர்வு இப்படி தான் நடக்கும்! NTA அறிவிப்பு...
"சம்பளம் உயரப்போகுது" அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. மோடி கொடுத்த கிரீன் சிக்னல்!
"அதிக குழந்தைகளை பெத்துக்கலனா.. தேர்தலில் போட்டியிட முடியாது" இறுக்கி பிடித்த சந்திரபாபு நாயுடு
சைஃப் அலிகானை குத்தியது யார்? படிக்கட்டில் இருந்து இறங்கும் மர்ம நபர்.. பரபர CCTV காட்சி!
சைஃப் அலிகானை குத்தியது யார்? படிக்கட்டில் இருந்து இறங்கும் மர்ம நபர்.. பரபர CCTV காட்சி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

கையை விரித்த கூட்டணியினர்! கழற்றி விடப்பட்ட காங்கிரஸ்! என்ன செய்யப் போகிறார் ராகுல்?BJP state executive: மாணவிக்கு பாலியல் தொல்லை.. தலைமறைவான BJP  நிர்வாகி! தட்டித்தூக்கிய காவல் துறை!Velumani Vs Munusamy | கே.பி.முனுசாமி Vs எஸ்.பி.வேலுமணி.. பிரிந்து நிற்கும் MLA-க்கள்! தலைவலியில் EPSVijay Vs Ajith : அஜித்தை கண்டுக்காத விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Neet exam 2025 : ஆன்லைன் தேர்வு இல்லை! இந்த ஆண்டு நீட் தேர்வு இப்படி தான் நடக்கும்! NTA அறிவிப்பு...
Neet exam 2025 : ஆன்லைன் தேர்வு இல்லை! இந்த ஆண்டு நீட் தேர்வு இப்படி தான் நடக்கும்! NTA அறிவிப்பு...
"சம்பளம் உயரப்போகுது" அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. மோடி கொடுத்த கிரீன் சிக்னல்!
"அதிக குழந்தைகளை பெத்துக்கலனா.. தேர்தலில் போட்டியிட முடியாது" இறுக்கி பிடித்த சந்திரபாபு நாயுடு
சைஃப் அலிகானை குத்தியது யார்? படிக்கட்டில் இருந்து இறங்கும் மர்ம நபர்.. பரபர CCTV காட்சி!
சைஃப் அலிகானை குத்தியது யார்? படிக்கட்டில் இருந்து இறங்கும் மர்ம நபர்.. பரபர CCTV காட்சி!
TN Rain Alert: அடுத்த 2 நாட்களுக்கு மிதமான பெய்ய வாய்ப்பு - எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?
TN Rain Alert: அடுத்த 2 நாட்களுக்கு மிதமான பெய்ய வாய்ப்பு - எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?
Ranji Trophy; கல்தா கொடுத்த கோலி... கேப்டனாக களமிறங்கும் ரிஷப் பண்ட்...
ரஞ்சிக் கோப்பை; கல்தா கொடுத்த கோலி... கேப்டனாக களமிறங்கும் ரிஷப் பண்ட்...
Vidamuyarchi Trailer : அஜித் நடித்துள்ள விடாமுயற்சி படத்தின் டிரைலர் மற்றும் ரிலீஸ் தேதி இதோ
Vidamuyarchi Trailer : அஜித் நடித்துள்ள விடாமுயற்சி படத்தின் டிரைலர் மற்றும் ரிலீஸ் தேதி இதோ
AjithKumar Racing; அஜித்குமார் ரேஸிங் அணி வீரரின் இன்ஸ்டா பதிவு... என்ன சொல்லியிருக்கார்.?
அஜித்குமார் ரேஸிங் அணி வீரரின் இன்ஸ்டா பதிவு... என்ன சொல்லியிருக்கார்.?
Embed widget