Today Rasipalan January 31: விருச்சிகத்திற்கு முயற்சி.. கன்னிக்கு கவனம்.. உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்!
Today Rasipalan: ஜனவரி 31 ஆம் தேதி செவ்வாய்கிழமையான இன்று எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாக காணலாம்.
நாள்: 31.01.2024 - புதன் கிழமை
நல்ல நேரம்:
காலை 9.30 மணி முதல் காலை 10.30 மணி வரை
மாலை 4.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை
நண்பகல் 12.00 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை
குளிகை:
காலை 10.30 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை
எமகண்டம்:
காலை 7.30 மணி முதல் காலை 09.00 மணி வரை
சூலம் - வடக்கு
மேஷம்
உறவினர்களின் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். செய்யும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். நெருக்கமானவர்களின் மூலம் புதுவிதவிதமான அனுபவம் ஏற்படும். இழுபறியில் இருந்துவந்த காரியங்கள் முடிவுக்கு வரும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். சோதனை நிறைந்த நாள்.
ரிஷபம்
அடமான பொருட்களை மீட்பதற்கான சூழல் உண்டாகும். புதிய முயற்சிகளில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். கலைப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். மனதில் பலதரப்பட்ட சிந்தனைகளின் மூலம் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். பூர்வீக சொத்துக்களின் மூலம் அனுகூலமான வாய்ப்பு கிடைக்கும். உற்சாகம் நிறைந்த நாள்.
மிதுனம்
வீடு, மனை வாங்குவது தொடர்பான சிந்தனை மேம்படும். மக்கள் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு அனுகூலமான சூழ்நிலை உண்டாகும். பேச்சுவன்மையின் மூலம் காரியசித்தி உண்டாகும். சிந்தனைகளில் தெளிவு ஏற்படும். தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். குடும்பத்தினர் ஆதரவாக செயல்படுவார்கள். ஆக்கப்பூர்வமான நாள்.
கடகம்
வாழ்க்கைத் துணைவருடன் சிறு தூரப் பயணங்கள் சென்று வருவீர்கள். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும். பணிகளை திட்டமிட்டு செயல்படுத்துவீர்கள். வேலையாட்களால் ஏற்பட்ட இன்னல்கள் குறையும். பாகப்பிரிவினைகளில் எதிர்பார்ப்பு நிறைவேறும். உத்தியோகப் பணிகளில் சில திருப்பங்கள் ஏற்படும். வரவு நிறைந்த நாள்.
சிம்மம்
சுபகாரியங்களில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். திடீர் தனவரவு உண்டாகும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம். கலைத்துறைகளில் மேன்மை உண்டாகும். பேச்சுக்களில் கனிவு வேண்டும். புதுவிதமான ஆடை சேர்க்கை உண்டாகும். பழக்கவழக்கங்களில் மாற்றம் ஏற்படும். ஆன்மிக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். லாபம் நிறைந்த நாள்.
கன்னி
முதலீடுகள் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். நினைத்த காரியங்கள் எண்ணிய விதத்தில் நிறைவேறும். வியாபாரப் பணிகளில் இருந்துவந்த போட்டிகள் குறையும். வாக்குறுதிகள் அளிக்கும்போது சிந்தித்துச் செயல்படவும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் அவசியம். தியான பயிற்சிகளை செய்வதால் மன சங்கடம் குறையும். மூத்த சகோதரர்களின் வழியில் அனுகூலம் ஏற்படும். இரக்கம் வேண்டிய நாள்.
துலாம்
மனதிற்குப் பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். புதுவிதமான துறைகளின் மீது ஆர்வம் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான பணிகளில் மாற்றம் ஏற்படும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். இழுபறியில் இருந்துவந்த வழக்குகளுக்கு முடிவு கிடைக்கும். உடல் ஆரோக்கிய விஷயங்களில் கவனம் வேண்டும். போட்டி நிறைந்த நாள்.
விருச்சிகம்:
சேமிப்பை மேம்படுத்துவதற்கான முயற்சி அதிகரிக்கும். உழைப்பிற்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும். கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த தகவல் சாதகமாகும். மூத்த சகோதரர்களின் உதவி கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயணங்களின் மூலம் மேன்மை உண்டாகும். சேமிப்பு சார்ந்த சிந்தனைகள் மனதில் மேம்படும். வேதனை விலகும் நாள்.
தனுசு
தொழில் தொடங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். சுபகாரிய முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். நெருக்கமானவர்களின் மூலம் அனுகூலமான பலன் கிடைக்கும். எதிர்பாராத சில உதவிகளால் மாற்றம் ஏற்படும். நண்பர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். நிதிநிலையில் முன்னேற்றம் ஏற்படும். உறவினர்களின் வழியில் ஒத்துழைப்பு உண்டாகும். கீர்த்தி நிறைந்த நாள்.
மகரம்
தந்தை வழி சொத்துக்களில் இருந்துவந்த இன்னல்கள் படிப்படியாக குறையும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். சுற்று வட்டாரத்தில் மதிப்பு மேம்படும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். வெளியூர் வர்த்தகப் பணிகளில் புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். உத்தியோகப் பணிகளில் மேன்மையான சூழல் உண்டாகும். சலனம் நிறைந்த நாள்.
கும்பம்
பழைய நினைவுகளின் மூலம் மனதில் ஒருவிதமான சோர்வு ஏற்படும். நண்பர்களின் வழியில் சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றும். வீண்செலவுகளால் மனச்சஞ்சலம் ஏற்படும். எதிர்காலம் குறித்த சிந்தனைகளால் குழப்பம் உண்டாகும். கொடுக்கல், வாங்கல் விவகாரங்களில் கவனம் வேண்டும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதுவிதமான அனுபவம் ஏற்படும். வெற்றி வேண்டிய நாள்.
மீனம்
உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைக்கும். குழந்தைகளால் மதிப்பு அதிகரிக்கும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சாதகமாகும். மனதில் புதுவிதமான இலக்கு பிறக்கும். வியாபாரம் தொடர்பான பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். ஆரோக்கியம் மேம்படும் நாள்.