Today Rasipalan January 02: மேஷத்துக்கு நன்மை; ரிஷபத்துக்கு அமைதி - உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் இதோ!
Today Rasipalan: ஜனவரி 2ஆம் தேதியான இன்று எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாக காணலாம்.
நாள்: 02.01.2024 - செவ்வாய் கிழமை
நல்ல நேரம்:
காலை 7.30 மணி முதல் காலை 8.30 மணி வரை
மாலை 4.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை
இராகு:
மாலை 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை
குளிகை:
நண்பகல் 12.00 மணி முதல் பகல் 1.30 மணி வரை
எமகண்டம்:
காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை
சூலம் - வடக்கு
மேஷம்
வர்த்தகப் பணிகளில் முன்னேற்றமான வாய்ப்பு கிடைக்கும். மனதில் புதுவிதமான ஆசைகள் உண்டாகும். புத்திக்கூர்மையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பு கிடைக்கும். தந்தை வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். மனதளவில் புதிய தெளிவு உண்டாகும். ஆராய்ச்சி கல்வியில் புதிய வாய்ப்பு கிடைக்கும். கலை சார்ந்த துறைகளில் ஈடுபாடு அதிகரிக்கும். நன்மை நிறைந்த நாள்.
ரிஷபம்
அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு மேம்படும். உடலில் ஒருவிதமான சோர்வுகளின்ன் மூலம் சுறுசுறுப்பின்மை உண்டாகும். உறவினர்களின் வருகை ஏற்படும். எதையும் சமாளிக்கும் பக்குவம் உண்டாகும். பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும். வர்த்தகப் பணிகளில் லாபகரமான சூழல் ஏற்படும். மாணவர்களுக்கு உயர் கல்வி தொடர்பான ஆலோசனை கிடைக்கும். அமைதி நிறைந்த நாள்.
மிதுனம்
பொருளாதாரம் சார்ந்த நெருக்கடிகள் குறையும். சில கடன் பிரச்சனைகள் முடிவுக்கு வரும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். நண்பர்களின் வழியில் அனுகூலம் கிடைக்கும். தாயின் ஆரோக்கியத்தில் சற்று கவனம் வேண்டும். சிறு தூரப் பயணங்களின் மூலம் புத்துணர்ச்சி பெறுவீர்கள். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். களிப்பு நிறைந்த நாள்.
கடகம்
வியாபாரத்தில் கடன் சார்ந்த உதவி கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து கொள்வீர்கள். பொதுமக்கள் சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். பணிபுரியும் இடத்தில் நன்மை ஏற்படும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் கைகூடும். வெளியூர் தொடர்பான பயணங்களின் மூலம் புதிய அனுபவம் ஏற்படும். சிக்கல் விலகும் நாள்.
சிம்மம்
உத்தியோகத்தில் பொறுப்புகள் மேம்படும். மற்றவர்களின் செயல்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. வியாபாரத்தில் இழுபறியான சூழல் உண்டாகும். எதிலும் பதற்றமின்றி செயல்படவும். சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது குறித்த சிந்தனை அதிகரிக்கும். ஊடக துறைகளில் இருப்பவர்களுக்கு புதிய அனுபவம் ஏற்படும். பலதரப்பட்ட சிந்தனைகளால் ஒருவிதமான சோர்வு உண்டாகும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.
கன்னி
உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். உறவினர்களின் வழியில் அனுசரித்துச் செல்லவும். வெளியூர் தொடர்பான பயணங்கள் கைகூடும். வீட்டில் சிறு மாற்றங்களை செய்வீர்கள். பணிமாற்றம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். வழக்கு சார்ந்த விஷயங்களில் திருப்பம் ஏற்படும். செயல்பாடுகளில் இருந்துவந்த கட்டுப்பாடுகள் குறையும். பாராட்டுகள் நிறைந்த நாள்.
துலாம்
இழுபறியான வரவுகள் கிடைக்கும். புதிய வேலை சார்ந்த முயற்சிகள் ஈடேறும். மற்றவர்களுக்கு தேவையான பணிகளை செய்து முடிப்பீர்கள். புதிய செயல் திட்டங்களை அமைப்பீர்கள். சோர்வுகள் நீங்கி சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். உணர்வுப்பூர்வமாக பேசுவதைக் குறைத்துக் கொண்டு சூழ்நிலை அறிந்து செயல்படவும். வெற்றி நிறைந்த நாள்.
விருச்சிகம்:
கலகலப்பான பேச்சுக்களின் மூலம் சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். புதுவிதமான சிந்தனை உண்டாகும். மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். வெளி வட்டாரங்களில் மதிப்பு அதிகரிக்கும். உத்தியோகப் பணிகளில் முன்னுரிமை கிடைக்கும். பார்வை தொடர்பான பிரச்சனைகள் குறையும். மதிப்பு மேம்படும் நாள்.
தனுசு
மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். புதிய முயற்சிகள் கைகூடும். திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெறுவீர்கள். உடன்பிறந்தவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மேம்படும். உயர் பதவிகளில் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும். வியாபார விஷயங்களில் சற்று நிதானத்துடன் முடிவெடுப்பது நல்லது. உயர்வு நிறைந்த நாள்.
மகரம்
ஆரோக்கியத்தில் ஒருவிதமான மந்தத்தன்மை உண்டாகும். தேவையில்லாத அலைச்சல்களின் மூலம் சோர்வு ஏற்படும். வெளியூர் பயணங்களால் அனுபவம் மேம்படும். புதிய முயற்சிகளில் மாறுபட்ட அனுபவம் கிடைக்கும். கூட்டாளிகளிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். எதிர்காலம் தொடர்பான சிந்தனை அதிகரிக்கும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் நெருக்கடிகள் உண்டாகும். கவனம் வேண்டிய நாள்.
கும்பம்
உத்தியோகப் பணிகளில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். கலகலப்பான பேச்சுக்களின் மூலம் நட்பு வட்டம் மேம்படும். புதிய நபர்களால் ஆதாயம் உண்டாகும். கல்வி சார்ந்த பணிகளில் ஆர்வம் ஏற்படும். உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பு மேம்படும். இணையம் சார்ந்த துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். வெற்றி நிறைந்த நாள்.
மீனம்
மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகப் பணிகளில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். குழந்தைகளின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் மேம்படும். எதிர்பாராத சில திருப்பங்கள் உண்டாகும். ஆக்கப்பூர்வமான நாள்.