Today Rasipalan February 18: கும்பத்துக்கு உயர்வு; மகரத்துக்கு போட்டி - இன்றைய நாளுக்கான ராசிபலன்!
Today Rasipalan: பிப்ரவரி 18ஆம் தேதி ஞாயிற்றுகிழமையான இன்று எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாக காணலாம்.
நாள்: 18.02.2024 - ஞாயிற்றுகிழமை
நல்ல நேரம்:
காலை 6.00 மணி முதல் காலை 7.00 மணி வரை
மாலை 3.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை
இராகு:
மாலை 4.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை
குளிகை:
மாலை 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை
எமகண்டம்:
நண்பகல் 12.00 மணி முதல் பகல் 1.30 மணி வரை
சூலம் - மேற்கு
மேஷம்
மனதில் நினைத்த பணிகளை செய்து முடிப்பீர்கள். உத்தியோகம் நிமிர்த்தமான பயணங்கள் ஏற்படும். உறவினர்களின் வழியில் அனுசரித்துச் செல்லவும். எதிர்காலம் தொடர்பான முதலீடுகள் மேம்படும். புதுவிதமான உணவுகளில் ஆர்வம் ஏற்படும். பார்வை தொடர்பான பிரச்சனைகள் குறையும். போட்டி நிறைந்த நாள்.
ரிஷபம்
வியாபாரம் நிமிர்த்தமான பயணங்கள் கைகூடும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகம் உண்டாகும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். பொருளாதாரத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். தந்தை வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். புதிய நபர்களின் அறிமுகத்தால் மகிழ்ச்சி ஏற்படும். எதிர்பார்த்திருந்த சில உதவிகள் சாதகமாகும். அனுபவம் மேம்படும் நாள்.
மிதுனம்
எதிலும் தாழ்வு மனப்பான்மை இன்றி செயல்படவும். வெளியூர் தொடர்பான பயணங்கள் கைகூடும். வழக்கு சார்ந்த விஷயங்களில் நுணுக்கங்களை புரிந்து கொள்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். திருப்பணி சார்ந்த விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். விவேகமான செயல்பாடுகளின் மூலம் உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். விழிப்புணர்வு வேண்டிய நாள்.
கடகம்
உடல் தோற்றப்பொலிவில் சில மாற்றங்கள் ஏற்படும். அரசு காரியத்தில் இருந்துவந்த தாமதம் விலகும். மருமகன் வழியில் மகிழ்ச்சியான சூழ்நிலை ஏற்படும். மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி உண்டாகும். தொழில் சார்ந்த எண்ணங்கள் கைகூடும். மனதில் புதுவிதமான இலக்கு பிறக்கும். இலக்கியப் பணிகளில் புதிய வாய்ப்பு கிடைக்கும். ஆதரவு நிறைந்த நாள்.
சிம்மம்
உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். மாமியாருடன் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் விலகும். சங்கம் தொடர்பான துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். எதிலும் திருப்தியற்ற மனநிலை உண்டாகும். வெளியூர் தொடர்பான பயணங்கள் கைகூடும். உயர் கல்வியில் புதிய வாய்ப்பு கிடைக்கும். நறுமணப் பொருட்களின் வழியில் ஆதாயம் அடைவீர்கள். சலனம் நிறைந்த நாள்.
கன்னி
உடலை வருத்திய சில பிரச்சனைகள் விலகும். மறைமுகமாக இருந்துவந்த எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். தாய்மாமன் வழியில் ஆதரவு ஏற்படும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக செய்லபடுவார்கள். உயர் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். இறை சார்ந்த பணிகளில் ஆதாயம் அடைவீர்கள். சேமிப்பை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனை அதிகரிக்கும். கவலை விலகும் நாள்.
துலாம்
சமூகப் பணிகளில் நிதானம் வேண்டும். குடும்பத்தில் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு வேண்டும். எதிர்பாராத சில நிகழ்வுகளின் மூலம் மனதில் மாற்றம் உண்டாகும். உடன் இருப்பவர்களிடம் பொறுமையுடன் செயல்படவும். விவேகம் வேண்டிய நாள்.
விருச்சிகம்:
உடன் பிறந்தவர்களின் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். பழகும் விதத்தில் சில மாற்றங்கள் உண்டாகும். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். நெருக்கடியான சில பிரச்சனைகள் குறையும். பணிபுரியும் இடத்தில் சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வாழ்க்கைத் துணைவர் இடத்தில் அனுசரித்துச் செல்லவும். விலகி சென்றவர்கள் பற்றிய நினைவுகள் தோன்றி மறையும். கஷ்டம் குறையும் நாள்.
தனுசு
புதுவிதமான கண்ணோட்டங்களின் மூலம் மாற்றம் உண்டாகும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். மனதில் புதிய ஆசைகள் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே புரிதல் ஏற்படும். எதிர்பாராத திடீர் பணவரவு உண்டாகும். வேலையாட்களிடம் அனுசரித்துச் செல்லவும். திடீர் பயணங்களின் மூலம் புதிய அனுபவம் உண்டாகும். பெருமை நிறைந்த நாள்.
மகரம்
இணையப் பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகத்தால் மாற்றம் ஏற்படும். மூத்த உடன் பிறப்புகளிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். இனம்புரியாத சிந்தனைகளின் மூலம் கற்பனை அதிகரிக்கும். உத்தியோகப் பணிகளில் பதற்றமின்றி பொறுமையுடன் செயல்படவும். இலக்கியம் தொடர்பான பணிகளில் ஆர்வம் உண்டாகும். போட்டி நிறைந்த நாள்.
கும்பம்
மனதில் புதுவிதமான சிந்தனை உண்டாகும். அக்கம்-பக்கம் இருப்பவர்களைப் பற்றிய புரிதல் அதிகரிக்கும். மனம் விட்டு பேசுவதன் மூலம் தெளிவு ஏற்படும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். செயல்பாடுகளில் அனுபவ அறிவு வெளிப்படும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். உயர்வு நிறைந்த நாள்.
மீனம்
பூர்வீக சொத்துக்களில் சில மாற்றங்களை செய்வீர்கள். உயர் அதிகாரிகள் பற்றிய புரிதல் மேம்படும். பயனற்ற விவாதங்களை தவிர்க்கவும். கணிதம் தொடர்பான துறைகளில் ஆர்வம் ஏற்படும். சிறு தூரப் பயணங்களால் புதிய அனுபம் உண்டாகும். தகவல் தொடர்பு துறையில் முன்னேற்றம் ஏற்படும். உடன் இருப்பவர்களிடம் ஏற்பட்ட பிரச்சனைகள் குறையும். பரிவு வேண்டிய நாள்.