![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Rasi Palan Today, August 17: ரிஷபம் வீண் விவாதம் வேண்டாம், கடகம் தெளிவு தேவை: உங்கள் ராசிக்கான பலன்?
Rasi Palan Today, August 17: ஆகஸ்ட் மாதம் 17ஆம் நாள் சனிக் கிழமையான இன்று எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் மற்றும் நல்ல நேரம் குறித்து விரிவாக காணலாம்.
![Rasi Palan Today, August 17: ரிஷபம் வீண் விவாதம் வேண்டாம், கடகம் தெளிவு தேவை: உங்கள் ராசிக்கான பலன்? Rasi palan today tamil 2024 August 17th daily horoscope12 zodiac signs astrology Rasi Palan Today, August 17: ரிஷபம் வீண் விவாதம் வேண்டாம், கடகம் தெளிவு தேவை: உங்கள் ராசிக்கான பலன்?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/08/17/67bc43c5d50ed3ade3d55868b55e5fcc1723833128459572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
இன்றைய ராசி பலன்கள்: Rasi Palan Today August 17, 2024:
அன்பார்ந்த வாசகர்களே இன்றைய சந்திரன் தனுசு ராசியில் சென்று கொண்டிருப்பதால் உங்களுக்கு இன்றைய நாள் எப்படி இருக்கும் என்பதை பார்க்கலாம் ….
மேஷ ராசி
அன்பார்ந்த மேஷ ராசி வாசகர்களே இன்னைக்கு புகழ் கூடும் நாள் உங்களைப் பற்றி மற்றவர்கள் பேசும் அளவிற்கு நற்செயல்களை செய்வீர்கள். ஆன்மீக காரியங்களை மேற்கொள்ள நல்ல நாள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும்.
ரிஷப ராசி
அன்பார்ந்த ரிஷப ராசி வாசகர்களே, உங்களுடைய ராசிக்கு சந்திராஷ்டமம் செல்வதால் சற்று நிதானமாக இருப்பது நல்லது. எந்த ஒரு புது காரியத்தை தொடங்கினாலும் அதை ஓரி நாட்களுக்கு தள்ளிப் போடுங்கள் யாரிடமும் வீண் விவாதம் வேண்டாம்.
மிதுன ராசி
அன்பார்ந்த மிதுன ராசி வாசகர்களே உங்களுக்கு மதியம் வரை சிறப்பாக நாள் சென்று கொண்டிருக்கும் அதே வேளையில் சந்திராஷ்டமம் ஆரம்பிக்க போவதால் முக்கியமான காரியங்களை சற்று தள்ளிப் போடுங்கள். குழப்பமாக இருக்கும் காரியங்களை குறித்து தெளிவான முடிவெடுங்கள். யார் உங்களைப் பற்றி குறை கூறினாலும் அவர்களிடத்தில் இருந்து விலகிச் செல்லுங்கள்.
கடக ராசி
அன்பார்ந்த கடக ராசி வாசகர்களே, உங்களுடைய ராசிக்கு ஏற்றமான நாள் . எதையும் சாதிக்கக் கூடிய தன்னம்பிக்கை பிறக்கும். முன்னோர்கள் வழி ஆதாயம் உண்டு. குலதெய்வத்தின் அனுக்கிரகத்தால் நற்காரியங்கள் நடைபெறும். குடும்பத்தில் சுப சேகரமான சம்பவங்கள் ஏற்படும்.
சிம்ம ராசி
அன்பார்ந்த சிம்ம ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு தொழில் சற்று அழுத்தமாக சென்றாலும் ராசி பலன் படி நன்றாக இருப்பதால் நிலைமையை சமாளிப்பீர்கள் . வியாபாரத்திலோ அல்லது நீங்கள் செய்யும் வேலையிலோ சற்று அழுத்தங்கள் போல தோன்றலாம் ஆனால் கவலை வேண்டாம் சரியாகிவிடும். ஆஞ்சநேயரை வழிபடுங்கள் நன்மை பிறக்கும்.
கன்னி ராசி
அன்பார்ந்த கன்னி ராசி வாசகர்களே உங்களுக்கான நாள் இதுதான் . வீட்டுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்கி மகிழுங்கள். சுபச்செலவு அதிகரிக்கலாம் பழைய பசுமையான நினைவுகள் குறித்து சற்று அசை போடுவீர்கள். எதற்கும் தயாராக இருங்கள் நன்மை வரும் காலம்.
துலாம் ராசி
அன்பார்ந்த துலாம் ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு வாகன யோகம் உண்டாகும் நாள். மற்றவர் இடத்தில் தன்மையாக நடந்து கொள்வீர்கள். அமைதியான சூழலில் மனம் செல்லும். கடன்கள் அடையும் நாள்.
விருச்சிக ராசி
அன்பார்ந்த விருச்சிக ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு ஏற்றமான நாள். வாழ்க்கையில் அடுத்த கட்டத்தை பற்றி யோசிப்பதற்கான நாள். எதிர்காலத்தை பற்றிய சிந்தனை இருக்கும்.
தனுசு ராசி
அன்பார்ந்த தனுசு ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு ராசியில் சந்திரன் செல்வதால் வார்த்தையில் சற்று கவனமாக இருக்க வேண்டும். நீங்கள் பேசும் சிறிய வார்த்தை கூட பெரிய சண்டையாக மாற வாய்ப்புண்டு. கவனமாக நாளை நடத்தி செல்ல வேண்டிய தினம்.
மகர ராசி
அன்பார்ந்த மகர ராசி வாசகர்களே உங்களுடைய பிரயாணங்களை மேற்கொள்ளும் நாள். நண்பர்களுடன் நீண்ட தூர பிரயாணங்களை மேற்கொள்ள வாய்ப்புண்டு. உற்சாகம் பெருகும் நாள். ராசிக்குள் சந்திரன் பயணிக்க இருப்பதால் புத்துணர்ச்சி பெரும் அதே நாளில் சற்று கவனமாகவும் இருக்க வேண்டும்.
கும்ப ராசி
அன்பார்ந்த கும்ப ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு எதிரிகள் ஒடுங்கும் நாள். வேண்டிய பொருளை வாங்கி மகிழுங்கள். எதிலும் நன்மையே ஏற்படும். உயர் அதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும்.
மீன ராசி
அன்பார்ந்த மீன ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு தொழில் முன்னேற்றம் ஏற்படும் நாள். இடமாற்றும் உண்டாக வாய்ப்புண்டு. நண்பர்கள் உதவிக்கு வருவார்கள். காரிய சித்தி ஏற்படும்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)