Rasipalan : கும்பத்துக்கு உயர்வு; மீனத்துக்கு நன்மை - உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்!
Today Rasipalan: ஏப்ரல் 5ஆம் தேதி வெள்ளிக்கிழமை இன்று எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாக காணலாம்.
நாள்: 05.04.2024 - வெள்ளிக்கிழமை
நல்ல நேரம்:
காலை 9.30 மணி முதல் காலை 10.30 மணி வரை
மாலை 4.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை
இராகு:
காலை 10.30 மணி முதல் பகல் 12.00 மணி வரை
குளிகை:
காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை
எமகண்டம்:
மாலை 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை
சூலம் - மேற்கு
மேஷம்
வர்த்தகம் தொடர்பான பணிகளில் லாபம் உண்டாகும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். பழைய பிரச்சனைகளுக்கு மாறுபட்ட விதத்தில் தீர்வு காண்பீர்கள். சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். சேமிப்பு சார்ந்த சிந்தனை மேம்படும். மனதளவில் தெளிவு ஏற்படும். சுகம் மேம்படும் நாள்.
ரிஷபம்
வியாபாரத்தில் இடமாற்றம் குறித்த சிந்தனை உண்டாகும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்பு கிடைக்கும். பயணம் சார்ந்த எண்ணங்கள் நிறைவேறும். இறை சார்ந்த பணிகளில் ஆர்வம் உண்டாகும். மாறுபட்ட அனுபவங்களால் மனப்பக்குவம் ஏற்படும். உறவினர்களுடன் கலந்தாலோசித்து சில முடிவுகளை எடுப்பீர்கள். மனதளவில் ஒருவிதமான திருப்தி ஏற்படும். லாபம் நிறைந்த நாள்.
மிதுனம்
அலுவல் பணிகளில் துரிதத்துடன் செயல்படுவீர்கள். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தம் சாதகமாகும். மனதளவில் புதுவிதமான தேடல் பிறக்கும். ஆன்மிகப் பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். சேமிப்புகளின் மூலம் ஆதாயம் அடைவீர்கள். செயல்பாடுகளில் சில மாற்றங்கள் ஏற்படும். நட்பு நிறைந்த நாள்.
கடகம்
எதிலும் சிந்தித்துச் செயல்படவும். குழந்தைகளின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். உடன் இருப்பவர்களிடம் வளைந்து கொடுத்து செல்வது நல்லது. நீண்ட நேரம் கண்விழிப்பதை தவிர்க்கவும். குடும்பத்தில் அனுசரித்துச் செல்லவும். எதிலும் திருப்தி இல்லாத மனநிலை உண்டாகும். வியாபாரம் சார்ந்த அலைச்சல் மேம்படும். சிந்தித்துச் செயல்படவேண்டிய நாள்.
சிம்மம்
வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடும். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். எண்ணங்களை செயல் வடிவில் மாற்றுவீர்கள். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். அன்பு நிறைந்த நாள்.
கன்னி
உங்கள் பேச்சுக்களுக்கு மதிப்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். திடீர் தனவரவுகள் ஏற்படும். குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். செயல்பாடுகளில் துரிதம் ஏற்படும். நெருக்கமானவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்துச் செயல்படுவீர்கள். குணநலன்களில் சில மாற்றங்கள் உண்டாகும். ஆசைகள் பிறக்கும் நாள்.
துலாம்
நெருக்கமானவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். உறவினர்களின் வழியில் புரிதல் ஏற்படும். பண விவகாரங்களில் நாணயத்தோடு செயல்படுவீர்கள். நண்பர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்தி கைகூடும். புதிய வாய்ப்புகளின் மூலம் சில மாற்றங்கள் உண்டாகும். கற்பனை துறைகளில் மதிப்பு மேம்படும். தன்னம்பிக்கை மேம்படும் நாள்.
விருச்சிகம்:
நெருக்கமானவர்களின் சந்திப்பு ஏற்படும். எதிர்பார்த்த சில பணிகள் நிறைவேறும். உடல் ஆரோக்கியம் மேம்படும். தடைபட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். பழுதடைந்த வாகனங்களை சீர் செய்வீர்கள். வீடு மாற்றம் குறித்த சிந்தனை உண்டாகும். பணிபுரியும் இடத்தில் திருப்தியான சூழல் அமையும். வியாபாரத்தில் சில மாற்றமான தருணம் உண்டாகும். புகழ் நிறைந்த நாள்.
தனுசு
தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். நிலுவையில் இருந்துவந்த வியாபார சரக்குகள் விற்பனையாகும். தனவரவுகள் திருப்திகரமாக இருக்கும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். விளையாட்டு சார்ந்த விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். எதிலும் பகுத்தறிந்து செயல்படுவீர்கள். திட்டமிட்ட பணிகள் நிறைவேறும். நலம் நிறைந்த நாள்.
மகரம்
கணவன், மனைவிக்கிடையே மனம்விட்டு பேசுவீர்கள். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். தோற்றப்பொலிவில் மாற்றம் உண்டாகும். வாக்கு வன்மையால் ஆதாயம் ஏற்படும். பொன், பொருட்சேர்க்கை தொடர்பான சிந்தனை மேம்படும். சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பம் விலகும். அமைதி வேண்டிய நாள்.
கும்பம்
தாழ்வு மனப்பான்மை இன்றி செயல்படவும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். உத்தியோகத்தில் சூழ்நிலைக்கு ஏற்ப செயல்படவும். முன்கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. விமர்சன பேச்சுக்கள் ஏற்பட்டு நீங்கும். மனதில் தொழில் நிமிர்த்தமான புதிய சிந்தனை ஏற்படும். உயர்வு நிறைந்த நாள்.
மீனம்
ஆடம்பரமான பொருட்களின் மீது ஆர்வம் உண்டாகும். திடீர் பயணங்களால் புதிய அனுபவம் கிடைக்கும். புதிய நபர்களிடம் பயனற்ற வாதங்களை தவிர்க்கவும். கால் வலி ஏற்பட்டு நீங்கும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உயர் அதிகாரிகளிடம் விட்டுக்கொடுத்துச் செல்லவும். தர்ம காரியத்தில் ஈடுபாடு உண்டாகும். நன்மை நிறைந்த நாள்.