மேலும் அறிய

Today Rasipalan: விருச்சிகத்துக்கு போட்டி; தனுசுக்கு பெருமை- உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்!

Today Rasipalan: ஏப்ரல் 22 ஆம் தேதி திங்கள் கிழமையான இன்று எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாக காணலாம்.

நாள்: 22.04.2024 

கிழமை: திங்கள்

நல்ல நேரம்:

காலை 6.30 மணி முதல் காலை 7.30 மணி வரை

மாலை 4.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை

இராகு:

காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை

குளிகை:

பகல் 1.30 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை

எமகண்டம்:

காலை 10.30 மணி முதல் பகல் 12.00 மணி வரை

சூலம் - கிழக்கு

மேஷம்

உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். எதிர்பாராத பயணங்களால் ஆதாயம் அடைவீர்கள். தடைபட்ட சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். மனதளவில் இருந்துவந்த கவலை குறையும். மற்றவர்கள் பற்றிய கருத்துகளை தவிர்க்கவும். எடுத்துச் செல்லும் உடைமைகளில் கவனம் வேண்டும்.  நிதானம் வேண்டிய நாள்.

ரிஷபம்

திட்டமிட்ட சில பணிகளில் தாமதம் ஏற்படும். சிறு தூரப் பயணங்களால் மனதில் மாற்றம் உண்டாகும். சிறு மற்றும் குறுந்தொழில் தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். திறமைகளை வெளிப்படுத்தும்போது சூழ்நிலை அறிந்து செயல்படவும். மற்றவர்கள் பற்றிய கருத்துகளை தவிர்க்கவும். வியாபாரத்தில் விவேகம் வேண்டும். திறமை வெளிப்படும் நாள்.

மிதுனம்

வாக்குறுதிகள் அளிக்கும்போது சிந்தித்துச் செயல்படவும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். பயணங்களின் மூலம் புதிய அனுபவம் உண்டாகும். உங்கள் மீதான நம்பிக்கை மேம்படும். நறுமணப் பொருட்களின் மூலம் ஆதாயம் அடைவீர்கள். கல்வியில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். உறுதி நிறைந்த நாள்.

கடகம்

மனதளவில் இருந்துவந்த குழப்பம் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். வியாபாரத்தில் புதிய முதலீடுகளை மேற்கொள்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். நினைத்த காரியங்கள் எண்ணியபடி நடக்கும். உடன் இருப்பவர்கள் இடத்தில் புரிதல் மேம்படும். கோபம் குறையும் நாள்.

சிம்மம்

இழுபறியாக இருந்துவந்த சில தனவரவுகள் மீண்டும் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். மாணவர்கள் பாடங்களில் கவனத்துடன் இருக்கவும். பல்லில் சிறு சிறு வலிகள் தோன்றி மறையும். பயனற்ற பேச்சுக்களைக் குறைத்து கொள்ளவும். வியாபாரம் தொடர்பான விஷயங்களில் சில மாற்றங்கள் ஏற்படும். தனம் நிறைந்த நாள்.

கன்னி

சமூகப் பணிகளில் விழிப்புணர்வுடன் செயல்படவும். மனதில் சேமிப்பு தொடர்பான சிந்தனை மேம்படும். எதிலும் தாழ்வு மனப்பான்மை இன்றி செயல்படவும். இணைய வர்த்தகப் பணிகளில் விவேகம் வேண்டும். வீடு வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். புதிய முயற்சிகள் சாதகமாக அமையும். தந்தைவழி உறவினர்களால் ஆதாயம் கிடைக்கும். பயம் குறையும் நாள்.

துலாம்

வெளியூர் தொடர்பான பயணங்கள் சாதகமாகும். உடலில் ஒருவிதமான அசதிகள் ஏற்பட்டு நீங்கும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். மறைமுகமான எதிர்ப்புகள் ஏற்பட்டு நீங்கும். அலுவலகப் பணிகளில் விவேகத்துடன் செயல்படவும். வெளி உணவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. வேலையாட்களால் புதிய அனுபவம் ஏற்படும். இன்பம் நிறைந்த நாள்.

விருச்சிகம்:

கணவன், மனைவிக்கிடையே புரிதல் அதிகரிக்கும். நண்பர்களின் வருகை ஏற்படும். எதிர்காலத்தை மனதில் கொண்டு சில முடிவுகளை எடுப்பீர்கள். வெளியூர் தொடர்பான பயணங்களால் ஆதாயம்  உண்டாகும். வியாபாரத்தில் லாபம் திருப்திகரமாக இருக்கும். எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். இழுபறியாக இருந்துவந்த பழைய வழக்குகள் சாதகமாகும். போட்டி நிறைந்த நாள்.

தனுசு

சிந்தனையின் போக்கில் கவனம் வேண்டும். வித்தியாசமான பொருட்களின் மீது ஆர்வம் உண்டாகும். அரசு தொடர்பான துறைகளில் ஆதாயம் அடைவீர்கள். உத்தியோகப் பணிகளில் உயர்வு ஏற்படும். உற்பத்தி சார்ந்த தொழிலில் சந்தை நிலவரங்களை அறிந்து செயல்படவும். எதிர்பாராத சில பயணங்கள் சாதகமாக அமையும். பெருமை நிறைந்த நாள். 

மகரம்

நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். யோகா, ஆன்மிகம் சார்ந்த விஷயங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரத்தில் இருந்துவந்த போட்டிகள் குறையும். மனம் விட்டுப் பேசுவதால் தெளிவு பிறக்கும். தந்தை வழியில் அனுகூலம் ஏற்படும். உத்தியோகத்தில் இழுபறியாக இருந்துவந்த வேலைகளை செய்து முடிப்பீர்கள். அக்கம்-பக்கத்தினருடன் பயனற்ற விவாதங்களைத் தவிர்க்கவும். தாமதம் விலகும் நாள்.

கும்பம்

வியாபாரம் சார்ந்த விஷயங்களில் பொறுமை காக்கவும். பணி நிமிர்த்தமாக எதிர்மறை எண்ணங்கள் தோன்றும். ஜாமீன் சார்ந்த விஷயங்களை தவிர்ப்பது நல்லது. நினைத்த சில பணிகளை செய்து முடிப்பதில் காலதாமதம் உண்டாகும். மனதிற்கு நெருக்கமானவர்களால் பொறுப்பு அதிகரிக்கும். பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்து செயல்படவும். விவேகம் வேண்டிய நாள்.

மீனம்

மனதில் இருந்துவந்த குழப்பம் விலகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். குழந்தைகளின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்பு மேம்படும். கூட்டுத்தொழிலில் புதிய பங்குதாரர்களின் அறிமுகம் ஏற்படும். வீம்பு மறையும் நாள். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அடம்பிடித்த அதிமுக எம்.எல்.ஏக்கள்! குண்டுகட்டாக தூக்கி வெளியேற்றிய அவைக்காவலர்கள் - நடந்தது என்ன?
அடம்பிடித்த அதிமுக எம்.எல்.ஏக்கள்! குண்டுகட்டாக தூக்கி வெளியேற்றிய அவைக்காவலர்கள் - நடந்தது என்ன?
TN Assembly Session LIVE: கேள்வி நேரத்தை ஒத்திவைக்க கோரி அமளி - அதிமுக எம்.எல்.ஏக்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றம்
TN Assembly Session LIVE: கேள்வி நேரத்தை ஒத்திவைக்க கோரி அமளி - அதிமுக எம்.எல்.ஏக்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றம்
TN Weather Update: நாளை மறுநாள் முதல் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட் - இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
நாளை மறுநாள் முதல் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட் - இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
Kallakurichi illicit liquor: கள்ளக்குறிச்சியில் மேலும் 30 பேர் கவலைக்கிடம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு, பலி எண்ணிக்கை உயருமா?
Kallakurichi illicit liquor: கள்ளக்குறிச்சியில் மேலும் 30 பேர் கவலைக்கிடம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு, பலி எண்ணிக்கை உயருமா?
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

GV Prakash on Kallakurichi kalla sarayam : ”இழப்பீடுகள் எதையும் ஈடுசெய்யாது” ஜி.வி.பிரகாஷ் ஆதங்கம்Vijay at Kallakurichi : கள்ளக்குறிச்சியில் விஜய்! நேரில் வந்து ஆறுதல்Arvind Kejriwal bail : கெஜ்ரிவாலுக்கு ஜாமின்! எப்போது வெளியே வருகிறார்? கொண்டாட்டத்தில் ஆம் ஆத்மிMK Stalin on Kallasarayam  : ”விஷச்சாராயம் எப்படி வந்துச்சி..களத்துக்கு போ உதய்” ஆணையிட்ட ஸ்டாலின்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அடம்பிடித்த அதிமுக எம்.எல்.ஏக்கள்! குண்டுகட்டாக தூக்கி வெளியேற்றிய அவைக்காவலர்கள் - நடந்தது என்ன?
அடம்பிடித்த அதிமுக எம்.எல்.ஏக்கள்! குண்டுகட்டாக தூக்கி வெளியேற்றிய அவைக்காவலர்கள் - நடந்தது என்ன?
TN Assembly Session LIVE: கேள்வி நேரத்தை ஒத்திவைக்க கோரி அமளி - அதிமுக எம்.எல்.ஏக்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றம்
TN Assembly Session LIVE: கேள்வி நேரத்தை ஒத்திவைக்க கோரி அமளி - அதிமுக எம்.எல்.ஏக்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றம்
TN Weather Update: நாளை மறுநாள் முதல் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட் - இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
நாளை மறுநாள் முதல் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட் - இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
Kallakurichi illicit liquor: கள்ளக்குறிச்சியில் மேலும் 30 பேர் கவலைக்கிடம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு, பலி எண்ணிக்கை உயருமா?
Kallakurichi illicit liquor: கள்ளக்குறிச்சியில் மேலும் 30 பேர் கவலைக்கிடம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு, பலி எண்ணிக்கை உயருமா?
Breaking News LIVE: கள்ளக்குறிச்சி விவகாரம்: மெத்தனால் விற்பனை செய்த முக்கிய குற்றவாளி கைது
Breaking News LIVE: கள்ளக்குறிச்சி விவகாரம்: மெத்தனால் விற்பனை செய்த முக்கிய குற்றவாளி கைது
Latest Gold Silver Rate: மீண்டும் உச்சம் தொட்ட தங்கம் விலை.. வெள்ளி விலையும் உயர்ந்ததால் மக்கள் அதிர்ச்சி..!
மீண்டும் உச்சம் தொட்ட தங்கம் விலை.. வெள்ளி விலையும் உயர்ந்ததால் மக்கள் அதிர்ச்சி..!
டெல்லி முதல் தமிழ்நாடு வரை.. இந்தியாவை உலுக்கிய கள்ளச்சாராயம் மரணங்கள்..
டெல்லி முதல் தமிழ்நாடு வரை.. இந்தியாவை உலுக்கிய கள்ளச்சாராயம் மரணங்கள்..
கோடீஸ்வரனாக போகும் ராசிகள் எவை?  12 ராசிகளுக்கான குருவின் ரோகினி பெயர்ச்சி பலன்கள்..!
கோடீஸ்வரனாக போகும் ராசிகள் எவை? 12 ராசிகளுக்கான குருவின் ரோகினி பெயர்ச்சி பலன்கள்..!
Embed widget