Today Rasipalan, November 09: மீனத்துக்கு இனிமை...கும்பத்துக்கு விவேகம்...உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் இதோ!
Today Rasipalan: இன்று எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாக காணலாம்.
![Today Rasipalan, November 09: மீனத்துக்கு இனிமை...கும்பத்துக்கு விவேகம்...உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் இதோ! Rasi palan today tamil 2023 9th november daily horoscope predictions 12 zodiac signs astrology nalla neram panchangam Today Rasipalan, November 09: மீனத்துக்கு இனிமை...கும்பத்துக்கு விவேகம்...உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் இதோ!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/08/68602930ae2a0a19ac6a6f13ddf1383b1699439029417572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
நாள் - 09.11.2023 - வியாழன் கிழமை
நல்ல நேரம்:
காலை 10.45 மணி முதல் காலை 11.45 மணி வரை
இராகு:
நண்பகல் 12.00 மணி முதல் பகல் 1.30 மணி வரை
குளிகை:
பகல் 1.30 மணி முதல் மாலை 3.00 மணி வரை
எமகண்டம்:
காலை 6.00 மணி முதல் காலை 7.30 மணி வரை
சூலம் - தெற்கு
மேஷம்
வழக்கு விவகாரங்களில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். தடைபட்ட சில பணிகளை செய்து முடிப்பீர்கள். தாய்மாமன் வழியில் ஆதரவு உண்டாகும். எதிராக இருந்தவர்களால் ஆதாயம் மேம்படும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மனதளவில் இருந்துவந்த இறுக்கம் குறையும். சிந்தனை நிறைந்த நாள்.
ரிஷபம்
புதுவிதமான சிந்தனைகள் மற்றும் கற்பனைகள் மேம்படும். குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உத்தியோக மாற்றம் தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். பழமையான செயல்களில் ஆர்வம் மேம்படும். வாகனச் சேர்க்கை உண்டாகும். வருவாயை மேம்படுத்துவதற்கான சிந்தனைகள் அதிகரிக்கும். கற்பனை துறைகளில் மேன்மை ஏற்படும். நன்மை நிறைந்த நாள்.
மிதுனம்
தாய்வழி உறவுகளின் மூலம் மேன்மை உண்டாகும். செல்வச் சேர்க்கை தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். வியாபாரப் பணிகளில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். அரசியல் துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். கல்வியில் இருந்துவந்த மந்தநிலை குறையும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். லாபம் நிறைந்த நாள்.
கடகம்
மனதில் தோன்றிய கருத்துகளை வெளிப்படுத்துவீர்கள். நண்பர்களுடைய சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். உணவு சார்ந்த விஷயங்களில் ஆதாயம் அடைவீர்கள். வருமானத்தில் திருப்தியான சூழல் அமையும். நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். முயற்சிகளில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். எதிர்ப்பு குறையும் நாள்.
சிம்மம்
எதிலும் அலட்சியம் இல்லாமல் செயல்படவும். பேச்சுத் திறமையால் சாதகமான சூழல் உண்டாகும். பொன், பொருள்கள் மீது ஆர்வம் ஏற்படும். உணவு சார்ந்த செயல்பாடுகளில் ஆதாயம் அடைவீர்கள். கலைகளை கற்பதில் ஆர்வம் அதிகரிக்கும். சிறு தூரப் பயணங்களின் மூலம் மாற்றம் உண்டாகும். உடன்பிறந்தவர்களிடம் விட்டுக்கொடுத்துச் செல்லவும். உழைப்பு நிறைந்த நாள்.
கன்னி
பலம் மற்றும் பலவீனங்களை அறிந்து கொள்வீர்கள். பயனற்ற விவாதங்களை தவிர்க்கவும். வியாபாரப் பணிகளில் இடமாற்றம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். பழக்கவழக்கங்களில் சில மாற்றங்கள் உண்டாகும். உலகியல் வாழ்க்கை பற்றிய புரிதல் மேம்படும். ரகசியமான சில செயல்களால் ஆதாயம் அடைவீர்கள். திடீர் பயணங்களின் மூலம் அனுபவம் ஏற்படும். மேன்மை நிறைந்த நாள்.
துலாம்
முன்கோபத்தினால் நெருக்கடிகள் தோன்றலாம். கடன் விஷயங்களில் சிந்தித்துச் செயல்படவும். இனம்புரியாத சில சிந்தனைகளால் தயக்கம் உண்டாகும். பிற இன மக்களால் ஆதாயம் அடைவீர்கள். உடனிருப்பவர்களை பற்றிய புதிய கண்ணோட்டம் ஏற்படும். ஜாமீன் சார்ந்த செயல்களில் சிந்தித்துச் செயல்படவும். திடீர் செலவுகளால் கையிருப்பு குறையும். சுகம் நிறைந்த நாள்.
விருச்சிகம்
சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் ஈடேறும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். எதிலும் சுறுசுறுப்பாகவும், புத்துணர்ச்சியாகவும் செயல்படுவீர்கள். இறை சார்ந்த பணிகளில் ஈடுபாடு உண்டாகும். மறைமுகமான சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். வெளியூர் பயணங்களின் மூலம் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். ஆசை மேம்படும் நாள்.
தனுசு
தொழில் நிமிர்த்தமான சிந்தனைகள் மேலோங்கும். உத்தியோகப் பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். நிர்வாகத் துறைகளில் அதிகாரம் மேம்படும். புதிய முயற்சிகளில் அனுபவமும், லாபமும் கிடைக்கும். உயர் கல்வியில் மேன்மை உண்டாகும். குடும்ப உறுப்பினர்களை பற்றிய புரிதல் மேம்படும். கால்நடை வளர்ப்பு பணிகளில் ஆதாயம் உண்டாகும். துரிதம் பிறக்கும் நாள்.
மகரம்
பணியாளர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். அதிர்ஷ்டகரமான சில வாய்ப்புகளின் மூலம் மாற்றம் உண்டாகும். தந்தைவழி உறவுகளின் மூலம் ஒத்துழைப்பு கிடைக்கும். ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் அமையும். உயர் கல்வி தொடர்பான சிந்தனைகள் உண்டாகும். சகோதரர் வழியில் உதவி கிடைக்கும். பெருமை மேம்படும் நாள்.
கும்பம்
தவறிய சில வாய்ப்புகளால் கவலைகள் ஏற்பட்டு நீங்கும். வியாபாரப் பணிகளில் மந்தமான போக்கு ஏற்படும். அலுவலகத்தில் இருந்துவந்த மறைமுக போட்டிகள் குறையும். மற்றவர்களின் செயலால் மனதில் மாற்றம் ஏற்படும். நண்பர்களிடத்தில் அதிக உரிமைகளை எடுத்துக் கொள்வதை தவிர்க்கவும். சமூகப் பணிகளில் இருப்பவர்கள் நிதானத்துடன் செயல்படவும். விவேகம் வேண்டிய நாள்.
மீனம்
வாழ்க்கைத் துணைவரின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். தந்தை வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். உங்களைப் பற்றிய புரிதல் அதிகரிக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். பலம் மற்றும் பலவீனங்களை அறிந்து கொள்வீர்கள். தவறிய சில பொருட்கள் பற்றிய குறிப்புகள் கிடைக்கும். கூட்டாளிகளின் வழியில் ஆதரவான சூழல் அமையும். இனிமை நிறைந்த நாள்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)