Rasi Palan Today Tamil 20 june 2022 : 10th, 12th எழுதிய மாணவர்களா? இன்னைக்கு முழுக்க நம்பிக்கையுடன் இருங்கள்.. உங்க பலன் இதோ?
Rasi Palan Today, june 20 : இந்த நாள் எந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாக காணலாம்.
நாள்: 14.06.2022
நல்ல நேரம் :
காலை 6.30 மணி முதல் 7.30 மணி வரை
மாலை 4.30 மணி முதல் மாலை 5 மணி வரை
காலை 9.30 மணி முதல் காலை 10.30 மணி வரை
மாலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை
இராகு :
காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
குளிகை :
காலை 1.30 மணி முதல் மதியம் 3 மணி வரை
எமகண்டம் :
மதியம் 10.30 மணி முதல் மதியம் 12 மணி வரை
சூலம் – கிழக்கு
மேஷம் :
மேஷ ராசி நேயர்களே, இந்த நாள் உங்களுக்கு போட்டிகள் உண்டாகும். தொழிலில் மற்றும் வியாபராத்தில் கடும் நெருக்கடிகளை சந்திக்க நேரிடும். பொறுமையுடனும், நிதானத்துடனும் செயல்பட வேண்டும். அக்கம்பக்கத்தினர், நண்பர்களிடம் கவனம் தேவை. பண விவகாரங்களில் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். சிவபெருமானை வணங்கி மன அமைதி பெறலாம்.
ரிஷபம்:
ரிஷப ராசி நேயர்களே, இந்த நாள் வீண்கோபம் உண்டாகும். அதனால் பொறுமையுடன் செயல்பட வேண்டும். அலுவலகத்தில், வீட்டில் தேவையற்ற பிரச்சினைகள் உண்டாகலாம். அடுத்தவர் விவகாரத்தில் தலையிடுவதை தவிர்க்க வேண்டும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. அம்மனை வழிபட்டால் சிறப்பு.
மிதுனம் :
மிதுன ராசி நேயர்களே, இந்த நாள் மாணவர்கள், இளைஞர்களுக்கு அமோகமான நாள் ஆகும். பொதுத்தேர்வு முடிவுகளுக்கு காத்திருக்கும் மாணவர்களுக்கு அற்புதமான நாளாக அமையும். விளையாட்டு வீரர்களுக்கு சிறப்பானதாக அமையும். நம்பிக்கை அதிகரிக்கும். குடும்பத்தில் குதூகலம் உண்டாகும்.
கடகம் :
கடக ராசி நேயர்களே, இந்த நாள் உங்களுக்கு சிறப்பான நாளாக அமையும். அக்கம்பக்த்தினர் மற்றும் குடும்பத்தினர் மத்தியில் உங்கள் மதிப்பு அதிகரிக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். பணவரவு, தனவரவு உண்டாகும். குடும்பத்தில் மங்கல ஓசை ஒலிக்கும். நன்மைகள் உண்டாகும்.
சிம்மம்:
சிம்ம ராசி நேயர்களே, இந்த நாள் உங்களுக்கு சுகமான நாளாக அமையும். பெரியவர்கள் பேச்சைக் கேட்டு செயல்படுவீர்கள். பிள்ளைகள் - பெற்றோர்கள் இடையே அன்பு அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். வெளியூர் பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பு உண்டு. வாகன யோகம் உண்டு.
கன்னி :
கன்னி ராசி நேயர்களே, இந்த நாள் உங்களுக்கு தைரியம் உண்டாகும். தெளிவான முடிவு எடுப்பீர்கள். தொழிலில் புதிய முயற்சிகளை எடுப்பீர்கள். வேலைவாய்ப்பில் புதிய மாற்றங்கள் உண்டாகும். காசி விஸ்வநாதர் வழிபாடு மனதிற்கு நிம்மதியை தரும்.
துலாம் :
துலாம் ராசி நேயர்களே, இந்தநாள் உங்களுக்கு பணவரவு உண்டாகும். குபேர யோகம் உண்டாகும். நீண்டநாள் வசூலாகாத கடன் வசூலாகும். நல்லோர்கள் நட்பு கிட்டும். திருமண பாக்கியம் உண்டாகும். பெற்றோர்கள் ஆரோக்கியம் சீராகும். குடும்பத்தில் அன்பு அதிகரிக்கும்.
விருச்சிகம் :
விருச்சிக ராசி நேயர்களே, இந்த நாள் புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். பெற்றோர்கள், பிள்ளைகள் இடையே நீடித்து வந்த மனக்கசப்பு அகலும். குடும்பத்தில் நீடித்து வந்த குழப்பம் தீரும். தொலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சி தரும். நீண்டநாட்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும்.
தனுசு :
தனுசு ராசி நேயர்களே, இந்த நாள் உங்கள் திறமைக்கு ஏற்ற நாளாக அமையும். மாணவர்கள், இளைஞர்களுக்கு உரிய அங்கீகாரம் கிட்டும். படிப்பில் சிறந்து விளங்குவீர்கள். உங்கள் சாமர்த்தியத்தை அக்கம்பக்கத்தினர், குடும்பத்தினர் பாராட்டுவார்கள். உங்கள் மதிப்பு அதிகரிக்கும்.
மகரம் :
மகர ராசி நேயர்களே, இந்த நாள் உங்கள் குடும்பத்தின் மீது உங்களுக்கு அக்கறை அதிகரிக்கும். உங்களது பொறுப்புகள் அறிந்து செயல்படுவீர்கள். வெற்றி பெற வெற்றிவேலனை வழிபட வேண்டும். குழந்தைகள் மீது கூடுதல் கவனம் தேவை. கணவன் மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும்.
கும்பம்:
கும்ப ராசி நேயர்களே, இந்த நாள் உங்களது மனதில் புதிய சிந்தனை உண்டாகும். உங்கள் திறனை நீங்கள் எடைபோட்டு அறிந்து கொள்வீர்கள். தேவையற்ற குழப்பங்கள் அகலும். திறமையை வெளிக்காட்ட நல்ல வாய்ப்புகள் கிட்டும். புதிய முயற்சிக்கான வெற்றிக்கான முதற்படி இன்று அமையும்.
மீனம்:
மீன ராசி நேயர்களே, இந்த நாள் உங்களுக்கு வெற்றி உண்டாகும். விநாயகப்பெருமான் வழிபாடு வீட்டில் சிறப்பை உண்டாக்கும். நம்பிக்கை அதிகரிக்கும். தொழிலில், வியாபாரத்தில் லாபம் இரட்டிப்பாகும். குழந்தைகள் மீது பாசம் அதிகரிக்கும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்