Rasi palan Today 2 july : கும்பத்துக்கு ஏமாற்றம்...! மீனத்துக்கு பரிசு..! இந்த நாள் உங்களுக்கு எப்படி...?
Today Rasipalan : இந்தநாள் எந்த ராசியினருக்கு எப்படி அமையப்போகிறது என்று கீழே விரிவாக காணலாம்.
நாள்: 02.07.2022, சனிக்கிழமை
நல்ல நேரம் :
காலை 7.45 மணி முதல் காலை 8.45 மணி வரை
மாலை 4.45 மணி முதல் மாலை 5.45 வரை
இராகு :
காலை 0 மணி முதல் காலை 10.30 மணி வரை
குளிகை :
காலை 6 மணி முதல் காலை 7.30 மணி வரை
எமகண்டம் :
மதியம் 1.30 மணி முதல் மதியம் 3 மணி வரை
சூலம் – கிழக்கு
மேஷம் :
மேஷ ராசி நேயர்களே, இந்த நாள் உங்களுக்கு வெற்றிகரமான நாள் ஆகும். நீண்டநாள் எதிர்பார்த்த வேலைவாய்ப்பு கிட்டுவதற்கான யோகம் உண்டாகும். காதல் திருமணத்தில் முடியும். பிரிந்து சென்ற நண்பர்கள் மீண்டும் வந்து சேர்வார்கள். எதிர்பார்த்த பணவரவு உண்டாகும்.
ரிஷபம்:
ரிஷப ராசி நேயர்களே, இந்தநாள் உங்களுக்கு அமோகமான நாள் ஆகும். உங்களுக்கும் நம்பிக்கை அதிகரிக்கும். நீண்டநாள் எதிர்பார்த்த வாய்ப்பு கிட்டும். பெற்றோர்கள் - பிள்ளைகள் இடையே பிரச்சினைகள் சரியாகும். குடும்பத்தகராறு நீங்கும்.
மிதுனம் :
மிதுன ராசி நேயர்களே, இந்த நாள் உங்களுக்கு லாபகரமான நாள் ஆகும். நீண்டநாள் வசூலாகாத கடன் தொகை வசூல் ஆகும். சகோதரர்கள் வழி நீடித்து வந்த சிக்கல் தீரும்.
கடகம் :
கடக ராசி நேயர்களே, இந்த நாள் நீங்கள் புது முயற்சியை மேற்கொள்வீர்கள். குடும்பத்தில் குதூகலம் உண்டாகும், தொழிலில் மற்றும் வியாபாரத்தில் தைரியமான முடிவை எடுப்பீர்கள். புது முயற்சி அமோகமாக கைகொடுக்கும். மங்கலப்பேச்சுக்கள் வீட்டில் ஒலிக்கும்.
சிம்மம்:
சிம்ம ராசி நேயர்களே, இந்தநாள் உங்களுக்கு போட்டியான நாள் ஆகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் போட்டி ஏற்படும். சாமர்த்தியமாக செயல்பட வேண்டும். தேவையற்ற வாக்குவாதங்கள், பிரச்சினைகளில் தலையிடக்கூடாது. ஆரோக்கியத்தில் அக்கறை வேண்டும்.
கன்னி :
கன்னி ராசி நேயர்களே, இந்த நாள் உங்களுக்கு மன நிறைவு உண்டாகும். பெற்றோர்கள் பிள்ளைகள் இடையே அன்பு அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். தொலைபேசி வழித்தகவல்கள் மன நிறைவைத் தரும். வேலைவாய்ப்பில் புதிய நம்பிக்கை பிறக்கும்.
துலாம் :
துலாம் ராசி நேயர்களே, இந்த நாள் உங்களுக்கு உடல்உபாதை சீராகும். மனதில் நீடித்து வந்த மனக்குழப்பம் அகலும். பெரியவர்கள் ஆலோசனைப்படி செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். குடும்பத்தில் உள்ள பெரியவர்களின் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. ஆலய வழிபாடு அவசியம்.
விருச்சிகம் :
விருச்சிக ராசி நேயர்களே, இந்த நாள் உங்களுக்கு புதிய நட்பு கிட்டும். இதன்மூலம் உங்கள் வாழ்வில் புதிய மாற்றம் ஏற்படும். குடும்பத்தில் நீண்டநாட்களாக நடக்காத திருமண பேச்சுக்கள் நடக்கலாம். அற்புதமான நாளாக அமையும்.
தனுசு :
தனுசு ராசி நேயர்களே, இந்தநாள் உங்களுக்கு நிறைவான நாள் ஆகும். நீண்டநாள் நிலுவையில் இருந்த சொத்துப்பிரச்சினை சாதகமாக முடியும். வாகன யோகம் உண்டாகும். தொலைபேசி வழித்தகவல்கள் இன்ப அதிர்ச்சி தரும். பிள்ளைகளின் கல்வியில் முக்கிய முடிவு எடுப்பீர்கள்.
மகரம் :
மகர ராசி நேயர்களே, இந்தநாள் உங்களுக்கு அற்புதமான நாள் ஆகும். உங்களது புகழ் மேலோங்கும். அக்கம்பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் மத்தியில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் வெற்றி மேலோங்கும்.
கும்பம்:
கும்ப ராசி நேயர்களே, இந்தநாள் உங்களுக்கு மிகுந்த ஏமாற்றமான நாளாக அமையும். அதீத எதிர்பார்ப்பை குறைத்துக்கொள்ளவும். அடுத்தவருடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவதை தவிர்க்கவும். பணிபுரியும் இடங்களில் அமைதியை கடைப்பிடிக்கவும். எதிர்பார்த்த பணவரவு, வேலைவாய்ப்பு தள்ளிப்போகும்.
மீனம்:
மீன ராசி நேயர்களே, இந்தநாள் உங்களுக்கு அற்புதமான நாள் ஆகும். நீண்ட நாள் உழைப்பிற்கு உரிய அங்கீகாரம் கிட்டும். பிடித்தவர்களிடம் இருந்து பிரியமான பரிசு கிட்டும். குடும்பத்தில் அன்பு அதிகரிக்கும். காதலுக்கு வீட்டில் பச்சைக்கொடி காட்டுவார்கள்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்