Rasipalan September 1: கும்பத்துக்கு வரவு...சிம்மத்துக்கு விவேகம்...உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் இவைதான்!
RasiPalan Today September 01: இந்த நாளில் எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாகக் காணலாம்.
நாள் - 01.09.2023 - வியாழன் கிழமை
நல்ல நேரம்:
காலை 9.15 மணி முதல் காலை 10.15 மணி வரை
மாலை 04.45 மணி முதல் மாலை 05.45 மணி வரை
இராகு:
காலை 10.30 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை
குளிகை:
காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை
எமகண்டம்:
மாலை 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை
சூலம் - மேற்கு
மேஷம்
எதிலும் தனித்தன்மையுடன் செயல்படுவீர்கள். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். சமூகப் பணிகளில் ஆர்வம் உண்டாகும். சேமிப்பு சார்ந்த சிந்தனைகள் மேம்படும். செயல்பாடுகளில் இருந்துவந்த சோர்வு குறையும். வியாபாரம் நிமிர்த்தமான உதவிகள் கிடைக்கும். நெருக்கமானவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். தன்னம்பிக்கை நிறைந்த நாள்.
ரிஷபம்
மனதளவில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். அரசு சார்ந்த பணிகளில் விவேகம் வேண்டும். வியாபாரம் நிமிர்த்தமான வெளியூர் பயணங்கள் சாதகமாக அமையும். எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். எதிலும் ஆதாயத்துடன் செயல்படுவீர்கள். வியாபார அபிவிருத்தி சார்ந்த உதவிகள் கிடைக்கும். மறதி குறையும் நாள்.
மிதுனம்
உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். ஆன்மிகப் பணிகளில் ஆர்வம் ஏற்படும். வியாபார பணிகளில் லாபம் உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். தந்தை வழியில் ஒத்துழைப்பான சூழல் ஏற்படும். உடல் ஆரோக்கியம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். எதிர்ப்புகள் விலகும் நாள்.
கடகம்
உயர் அதிகாரிகளிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். செல்லப்பிராணிகளால் அலைச்சல்கள் ஏற்படும். ஆன்மிகப் பணிகளில் ஆர்வம் உண்டாகும். நேர்மறையான சிந்தனைகளை வளர்த்துக் கொள்ளவும். வழக்கு சார்ந்த செயல்களில் கவனம் வேண்டும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். கவனம் வேண்டிய நாள்.
சிம்மம்
எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் உண்டாகும். நீண்ட நாள் பிரச்சனைகள் குறையும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் அடைவீர்கள். உயர்கல்வியில் மேன்மை உண்டாகும். எதிர்காலம் சார்ந்த சில முடிவுகளை எடுப்பீர்கள். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். விவேகம் வேண்டிய நாள்.
கன்னி
சமூகம் தொடர்பான துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பலதரப்பட்ட மக்களின் அறிமுகம் ஏற்படும். பழகும் விதங்களில் சில மாற்றங்கள் உண்டாகும். வியாபாரப் பணிகளில் எதிர்பாராத அலைச்சல்கள் அதிகரிக்கும். நெருக்கமானவர்களை பற்றிய புரிதல் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்லவும். தடைகள் குறையும் நாள்.
துலாம்
சவாலான பணிகளில் ஈடுபாடு உண்டாகும். கற்பனை சார்ந்த சிந்தனைகள் மேம்படும். தாய்மாமன் வழியில் பொறுமை வேண்டும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சாதகமாக முடியும். வாழ்க்கைத் துணைவர் ஆதரவாக இருப்பார். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். அதிகாரிகளின் மறைமுகமான ஆதரவு திருப்தியை ஏற்படுத்தும். ஆசைகள் நிறைவேறும் நாள்.
விருச்சிகம்
வித்தியாசமான சிந்தனைகளின் மூலம் அலைச்சல்கள் ஏற்படும். உயர்கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். கால்நடை பணிகளில் மேன்மையான சூழல் அமையும். வேலையாட்களிடம் அனுசரித்துச் செல்வதன் மூலம் நன்மை ஏற்படும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். உங்கள் கருத்துகளுக்கு மதிப்புகள் அதிகரிக்கும். அரசு பணிகளால் ஆதாயம் உண்டாகும். அறிமுகம் நிறைந்த நாள்.
தனுசு
திட்டமிட்ட பணிகளை எளிதில் செய்து முடிப்பீர்கள். பூமி விருத்தி தொடர்பான எண்ணங்கள் கைகூடும். வாகன மாற்றம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். சிறுதொழிலில் சில நுணுக்கங்களை அறிவீர்கள். மறைமுகமான திறமைகள் வெளிப்படும். எதிலும் சிக்கனமாக செயல்படுவீர்கள். முயற்சிக்கு உண்டான சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும். உதவிகள் நிறைந்த நாள்.
மகரம்
நண்பர்களின் மூலம் ஆதரவு ஏற்படும். வசதி வாய்ப்புகள் மேம்படும். வெளி உணவுகளில் கவனம் வேண்டும். சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். பயணங்களின் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். வியாபாரம் நிமிர்த்தமான நெருக்கடியான சூழ்நிலைகள் குறையும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். புரிதல் நிறைந்த நாள்.
கும்பம்
கனிவான பேச்சுக்கள் உங்கள் மீதான நம்பிக்கையை அதிகப்படுத்தும். சகோதரர் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். புதிய தொழில்நுட்ப கருவிகள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் மாற்றம் ஏற்படும். பலதரப்பட்ட சிந்தனைகளால் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். வரவு நிறைந்த நாள்.
மீனம்
மனதளவில் இருந்துவந்த கட்டுப்பாடுகள் குறையும். நெருக்கமானவர்களை பற்றிய புரிதல் உண்டாகும். சமூகப் பணிகளில் புதிய அனுபவம் கிடைக்கும். உயர்கல்வி தொடர்பான குழப்பம் ஏற்பட்டு நீங்கும். வெளியாட்களுடன் பயனற்ற விவாதங்களை தவிர்க்கவும். ஆடம்பரமான செலவுகளால் சேமிப்பு குறையும். மதிப்பு நிறைந்த நாள்.