Rasipalan December 01: மகரத்துக்கு பெருமை... விருச்சிகத்துக்கு உயர்வு... உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் இவை தான்!
RasiPalan Today December 01: இந்த நாள் எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாகக் காணலாம்.
நாள்: 01.12.2022
நல்ல நேரம்:
காலை 9.15 மணி முதல் காலை 10.15 மணி வரை
மாலை 4.45 மணி முதல் மாலை 5.45 மணி வரை
இராகு:
மதியம் 12.00 மணி முதல் மதியம் 1.30 மணி வரை
குளிகை:
காலை 10.30 மணி முதல் மதியம்12.00 மணி வரை
எமகண்டம்:
காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை
சூலம் - வடக்கு
மேஷம்
மனதிற்கு மகிழ்ச்சி தரும் வகையிலான செய்திகள் கிடைக்கும். வியாபார பணிகளில் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் லாபமும், அனுபவமும் உண்டாகும். விவசாயம் தொடர்பான பணிகளில் மேன்மை ஏற்படும். சமூகம் சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு சாதகமான சூழல் அமையும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். பூர்வீக சொத்துக்களின் மூலம் லாபமும், வாய்ப்பும் சாதகமாக அமையும். பரிசு கிடைக்கும் நாள்.
ரிஷபம்
விடாப்பிடியாக செயல்பட்டு இழுபறியான காரியங்களை செய்து முடிப்பீர்கள். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் உதவி கிடைக்கப் பெறுவீர்கள். பெற்றோர்களின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். தொழில் நிமிர்த்தமான புதிய முயற்சிகள் சாதகமாக அமையும். அரசு சார்ந்த பணிகளில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். மாற்றமான சிந்தனைகளின் மூலம் புதுவிதமான அனுபவங்களும், சூழ்நிலைகளும் உண்டாகும். நிதானம் வேண்டிய நாள்.
மிதுனம்
உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு மனதிற்கு புதிய மாற்றத்தை ஏற்படுத்தும். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். உறவினர்களின் மூலம் சாதகமான சூழ்நிலையும், உற்சாகமும் ஏற்படும். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கப் பெறுவீர்கள். வியாபார பணிகளில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். மேன்மை நிறைந்த நாள்.
கடகம்
நிர்வாகம் சார்ந்த பணிகளில் நிதானத்துடன் செயல்படவும். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் உண்டாகும். வியாபாரம் சம்பந்தமான விஷயங்களில் சற்று பொறுமையுடன் முடிவெடுப்பது நல்லது. நண்பர்களுடன் தேவையற்ற கருத்துக்கள் பகிர்வதை தவிர்க்கவும். வழக்கு சார்ந்த பணிகளில் இழுபறியான சூழ்நிலைகள் ஏற்படும். மனதில் அஞ்ஞான சிந்தனைகள் மேம்படும். ஆராய்ச்சி சார்ந்த பணிகளில் அலைச்சல்கள் உண்டாகும். விவேகம் வேண்டிய நாள்.
சிம்மம்
கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். வர்த்தகம் சார்ந்த பணிகளில் இருப்பவர்கள் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. நண்பர்களின் வழியில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். சுபகாரியம் தொடர்பான விரயங்கள் உண்டாகும். போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை பெறுவீர்கள். வர்த்தகம் சார்ந்த பணிகளில் லாபகரமான சூழ்நிலைகள் ஏற்படும். இழந்த பொருட்களை மீட்பதற்கான உதவி கிடைக்கும். தனவரவு மேம்படும் நாள்.
கன்னி
வியாபாரம் சார்ந்த பணிகளில் லாபம் அதிகரிக்கும். பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கப் பெறுவீர்கள். உத்தியோகம் சார்ந்த பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். கால்நடை தொடர்பான வியாபாரத்தில் லாபகரமான வாய்ப்புகள் அமையும். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் மேன்மை உண்டாகும். வாகன பழுதுகளை சீர் செய்வதற்கான சூழ்நிலைகள் ஏற்படும். பெரியோர்களின் ஆலோசனைகள் மனதிற்கு தெளிவினை ஏற்படுத்தும். உழைப்பு நிறைந்த நாள்.
துலாம்
இலக்கியம் சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு கற்பனை திறன் மேம்படும். எண்ணிய சில காரியங்களை நினைத்த விதத்தில் செய்து முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் வழியில் ஆதரவு கிடைக்கும். கடன் சார்ந்த நெருக்கடிகள் படிப்படியாக குறையும். உத்தியோக பணிகளில் உள்ள சில சூட்சுமங்களை அறிந்து செயல்படுவீர்கள். புதிய முயற்சிகளின் மூலம் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். லாபம் நிறைந்த நாள்.
விருச்சிகம்
திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் சாதகமாக அமையும். குடும்ப உறுப்பினர்களின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் அமையும். விவசாய பணிகளில் இருப்பவர்களுக்கு பாசனம் தொடர்பான வசதிகள் மேம்படும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் அலைச்சல்கள் உண்டாகும். மூலிகை சார்ந்த வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வியாபார பணிகளில் வாடிக்கையாளர்களிடம் பொறுமையுடன் செயல்படவும். உயர்வான நாள்.
தனுசு
உயர்கல்வி தொடர்பான சிந்தனைகள் மற்றும் ஆலோசனைகள் கிடைக்கப் பெறுவீர்கள். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். புதிய சொத்துக்களை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் உண்டாகும். உறவினர்களின் வழியில் ஆதரவு கிடைக்கும். மனதில் தன்னம்பிக்கையும், தைரியமும் மேம்படும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். திட்டமிட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். நலம் நிறைந்த நாள்.
மகரம்
எதிர்பாராத தனவரவு கிடைக்கும். உடன்பிறந்தவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். பிள்ளைகளின் வழியில் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் மாற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். பத்திரம் சார்ந்த பணிகளில் கவனத்துடன் செயல்படவும். வெளியூர் பயணங்களின் மூலம் அனுகூலமான வாய்ப்பும், புதிய நபர்களின் அறிமுகமும் கிடைக்கும். பெருமை நிறைந்த நாள்.
கும்பம்
சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு செல்வாக்கு மேம்படும். புதிய முதலீடுகள் தொடர்பான விஷயங்களில் தகுந்த ஆலோசனைகளை பெற்று முடிவு எடுக்கவும். புதுவிதமான சிந்தனைகளின் மூலம் புத்துணர்ச்சியான தருணங்கள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். வியாபாரத்தில் மந்தமான சூழ்நிலைகள் ஏற்படும். உயர் அதிகாரிகளிடத்தில் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் சாதகமான முடிவு கிடைக்கப் பெறுவீர்கள். நன்மை நிறைந்த நாள்.
மீனம்
வியாபாரம் தொடர்பான பணிகளில் இருந்துவந்த நெருக்கடிகள் குறையும். உடல் தோற்றப்பொலிவில் மாற்றம் ஏற்படும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். விலை உயர்ந்த பொருட்களின் மீதான ஆசை அதிகரிக்கும். எதிர்பாராத செலவுகளின் மூலம் நெருக்கடியான சூழல் உண்டாகும். மனதில் உலகியல் வாழ்க்கையை பற்றிய புதுவிதமான கண்ணோட்டம் உண்டாகும். மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். புதுமையான நாள்.