Rasipalan 19, June 2023: கடகத்துக்கு மகிழ்ச்சி... கன்னிக்கு ஆக்கப்பூர்வம்... உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்!
RasiPalan Today June 19: இந்த நாளில் எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாகக் காணலாம்.
நாள்: 19.06.2023 - திங்கள்கிழமை
நல்ல நேரம்:
காலை 6.30 மணி முதல் காலை 7.30 மணி வரை
மாலை 4.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை
இராகு:
காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை
குளிகை:
மதியம் 1.30 மணி முதல் மதியம் 3.00 மணி வரை
எமகண்டம்:
காலை 10.30 மணி முதல் மதியம் 12.00 மணி வரை
சூலம் - கிழக்கு
மேஷம்
முயற்சிகளில் இருந்துவந்த தடைகளை அறிந்து கொள்வீர்கள். வாகனப் பழுதுகளை சீர் செய்வீர்கள். உறவினர்களின் வழியில் புரிதல் உண்டாகும். வித்தியாசமான அணுகுமுறைகளின் மூலம் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உத்தியோகத்தில் புதிய முயற்சிகள் ஈடேறும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிலும் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். கவனம் வேண்டிய நாள்.
ரிஷபம்
குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். தடைப்பட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். விலை உயர்ந்த பொருட்களின் மீது ஆர்வம் உண்டாகும். பழைய பிரச்சனைகளுக்கு முடிவு கிடைக்கும். வியாபாரம் நிமிர்த்தமான பயணங்கள் கைகூடும். உத்தியோகப் பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். எதிர்பாராத சில திடீர் திருப்பங்களின் மூலம் மனதளவில் மாற்றம் ஏற்படும். கவலைகள் குறையும் நாள்.
மிதுனம்
பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். சமூகப் பணிகளில் திருப்தி ஏற்படும். மறதியால் சிறு சிறு பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். தோற்றத்தில் மாற்றம் உண்டாகும். செல்வ நிலை மேம்படும். மனதளவில் புதிய பக்குவம் ஏற்படும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். தெளிவு பிறக்கும் நாள்.
கடகம்
வியாபார பணிகளில் முதலீடுகள் அதிகரிக்கும். உணவு சார்ந்த விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். பார்வை தொடர்பான பிரச்சனைகள் தோன்றி மறையும். மனதளவில் புதுவிதமான கற்பனைகள் மேம்படும். மாற்றமான தொழில் சார்ந்த விஷயங்களில் ஈர்ப்பு உண்டாகும். அந்நிய தேச பயணங்களில் சாதகமான சூழல் நிலவும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.
சிம்மம்
தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுணையாக இருப்பார்கள். சொத்து சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். வியாபார பணிகளில் சில மாற்றங்கள் ஏற்படும். கைப்பேசி வாயிலாக மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். வெளியூர் தொடர்பான பயணங்கள் சாதகமாகும். அமைதி நிறைந்த நாள்.
கன்னி
தாய் வழி உறவுகளிடம் ஒற்றுமை ஏற்படும். பழைய பிரச்சனைகளுக்கு மாற்று வழிகளை யோசிப்பீர்கள். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரம் நிமிர்த்தமான பயணங்கள் கைகூடும். எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். தந்தை பற்றிய புரிதல் மேம்படும். ஆக்கப்பூர்வமான நாள்.
துலாம்
மனதளவில் புதிய சிந்தனைகள் ஏற்படும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். உத்தியோக பணிகளில் சாதகமான சூழல் உண்டாகும். நீண்ட தூர பயண வாய்ப்புகள் சாதகமாகும். ஆன்மிகம் தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்பு மேம்படும். வாழ்க்கைத் துணைவரால் ஆதாயம் உண்டாகும். உற்சாகம் நிறைந்த நாள்.
விருச்சிகம்
மனதில் சிறு சிறு கவலைகள் ஏற்பட்டு நீங்கும். விலகிச் சென்றவர்களை பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும். வியாபார பணிகளில் அலைச்சல்கள் ஏற்படும். கடன் தொடர்பான விஷயங்களில் விவேகத்துடன் செயல்படவும். எதிலும் நேர்மறை சிந்தனைகளுடன் இருக்கவும். நெருக்கமானவர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும். அமைதி வேண்டிய நாள்.
தனுசு
சமூகப் பணிகளில் ஈடுபாடு ஏற்படும். சகோதரர்களின் வழியில் ஒற்றுமை பிறக்கும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபார பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். பணி நிமிர்த்தமான முயற்சிகளில் எண்ணங்கள் ஈடேறும். நுட்பமான சில விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். சுபகாரிய எண்ணங்கள் கைகூடும். உழைப்புகள் நிறைந்த நாள்.
மகரம்
உறவினர்களின் வழியில் ஆதரவு கிடைக்கும். பணி நிமிர்த்தமான ஆலோசனைகள் தெளிவை ஏற்படுத்தும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். கால்நடை பணிகளில் ஆர்வம் உண்டாகும். வங்கிப் பணிகளில் இருந்துவந்த தடைகள் குறையும். பயணங்களின் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். நலம் நிறைந்த நாள்.
கும்பம்
மனதில் நினைத்த நீண்ட கால விருப்பங்கள் நிறைவேறும். தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும். முயற்சிக்கு ஏற்ற முன்னேற்றம் உண்டாகும். உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். மறைமுக திறமைகள் வெளிப்படும். புதிய தொழில்நுட்பம் சார்ந்த விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். சிந்தனைகள் மேம்படும் நாள்.
மீனம்
பெரியவர்களின் ஆதரவால் அனுகூலம் உண்டாகும். அரசு சார்ந்த உதவிகள் கிடைக்கும். வியாபார பணிகளில் வரவு மேம்படும். புதிய வேலை நிமிர்த்தமான முயற்சிகள் கைகூடும். பயணங்களின் மூலம் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். கல்விப் பணிகளில் சாதகமான சூழல் அமையும். பேச்சுத் திறமைகளின் மூலம் எண்ணியதை நிறைவேற்றிக் கொள்வீர்கள். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். களைப்புகள் குறையும் நாள்.