Rasi Palan, Mar 19: கடகத்துக்கு சிறப்பு, மீனத்துக்கு மகிழ்ச்சி... இன்றைய பலன்கள் உங்க ராசிக்கு எப்படி?
Rasi Palan Today, March 19 | இன்றைய ராசிபலன் 19 மார்ச் 2022: இன்று எந்தெந்த ராசிகளுக்கு எந்தெந்த பலன்கள்?
நாள்: 18.03.2022
நல்ல நேரம் :
காலை 7.30 மணி முதல் காலை 8.30 மணி வரை
மாலை 4.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை
கௌரி நல்ல நேரம் :
நள்ளிரவு 12.30 மணி முதல் நள்ளிரவு 1.30 மணி வரை
இரவு 9.30 மணி முதல் இரவு 10.30 மணி வரை
இராகு :
காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை
குளிகை :
காலை 6.00 மணி முதல் காலை 7.30 மணி வரை
எமகண்டம் :
காலை 1.30 மணி முதல் காலை 3.30 மணி வரை
சூலம் – கிழக்கு
மேஷம் :
மேஷ ராசி நேயர்களே, இன்று சாதகமான பலன்கள் கிடைக்கும். இன்று அபாரமான வளர்ச்சி காணப்படும். உங்கள் முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள்.முக்கியமான முடிவுகள் எடுக்க இன்றைய நாளை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
ரிஷபம் :
ரிஷப ராசி நேயர்களே, இன்றைய நாள் அனுகூலமாக இருக்காது. பதட்டம் நிறைந்து காணப்படும். நல்ல பலன்களைக் காண ஆன்மீகத்தில் ஈடுபடுத்திக் கொள்ளுங்கள்.
மிதுனம் :
மிதுன ராசி நேயர்களே, இன்று தேவையற்ற மன வருத்தங்கள் காணப்படும். இத்தகைய உணர்வை தவிர்த்தல் நல்லது. பிரார்த்தனை மற்றும் தியானங்கள் மூலம் ஆறுதல் பெறலாம்.
கடகம் :
கடக ராசி நேயர்களே, இன்று சிறப்பான நாளாக இருக்கும். உங்கள் திறமையையும் புத்திசாலித்தனத்தையும் பயன்படுத்தி வெற்றி பெறலாம். இன்று மகிழ்ச்சி நிறைந்து காணப்படும்.
சிம்மம்:
சிம்ம ராசி நேயர்களே, இன்றைய நாள் சுறுசுறுப்புடன் இருக்காது. பதட்டமும் தனிமையும் காணப்படும். தான தர்மம் மற்றும் தொண்டுகளில் ஈடுபடுவதன் மூலம் ஆறுதல் பெறலாம். வெளிப்படையாக இருக்க வேண்டும். எதையும் லேசாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
கன்னி :
கன்னி ராசி நேயர்களே, உங்கள் செயல்களில் சில தாமதங்கள் காணப்படும். உங்கள் அணுகுமுறையில் பொறுமை தேவை. கடவுள் வழிபாடு மற்றும் பிரார்த்தனையில் ஈடுபடுவதன் மூலம் நீங்கள் ஆறுதல் பெறலாம்.
துலாம் :
துலாம் ராசி நேயர்களே, இன்று தவறுகள் செய்ய வாய்ப்புள்ளதால் பொறுமையோடு இருக்க வேண்டும். இன்று நன்மை தீமை இரண்டும் கலந்து காணப்படும். ஆன்மீகத்தில் ஈடுபாவதன் மூலம் நீங்கள் ஆறுதல் பெறலாம்.
விருச்சிகம் :
விருச்சிக ராசி நேயர்களே, உங்கள் லட்சியத்தை நிறைவேற்றிக்கொள்ள இன்றைய நாளை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள். தற்போதைய சூழ்நிலையில் உங்கள் தன்னம்பிக்கை அதிகரித்து காணப்படும். கடினமான பணிகளைக் கூட எளிதாக செய்து விடுவீர்கள்.
தனுசு :
தனுசு ராசி நேயர்களே, இன்று உங்களுக்கு சாதகமான நாள். உங்களிடம் தன்னம்பிக்கை நிறைந்து காணப்படும். இன்று நீங்கள் சிறந்த ஆற்றலுடன் காணப்படுவீர்கள்.
மகரம் :
மகர ராசி நேயர்களே, உங்கள் மனதில் இருந்து எதிர்மறை எண்ணங்களை நீக்க முயலுங்கள். ஆன்மீக ஈடுபாடு மற்றும் யோகா மேற்கொள்வது இன்று பயனுள்ளதாக இருக்கும். எதிர்காலத்தைப் பற்றி மிகுந்த கவலை வேண்டாம். எதிர்காலத்திற்காக இன்றே திட்டமிட்டால் நாளை செழிப்பாக இருக்கலாம்.
கும்பம் :
கும்ப ராசி நேயர்களே, இன்று விருப்பமான பலன்கள் கிடைகாது. எதிர்பார்ப்புகளில் எம்மற்றங்களும் குழப்பங்களும் காணப்படும். இந்தச் சூழ்நிலையை தவிர்க்க பிரார்தனை மேற்கொள்ள வேண்டும். குழந்தைகளின் வளர்ச்சி நீங்கள் எதிர்ப்பார்க்கும் அளவிற்கு காணப்படாது.
மீனம்:
மீன ராசி நேயர்களே, இன்று மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். புதிய தொடர்புகள் ஏற்படுத்திக்கொள்ள இன்றைய நாளை நீங்கள் பயன்படுத்தலாம். விருந்து விழாக்களில் கலந்து கொள்வது மகிழ்ச்சியை அளிக்கும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்