Rasipalan 18 July, 2023: சிம்மத்திற்கு விவேகம்! கடகத்துக்கு சாதனை - உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் இதோ!
Rasipalan 18 July, 2023: இந்த நாளில் எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாகக் காணலாம்.
Rasipalan 18 July, 2023: இன்றைய ராசி பலன்
நாள்: 18.07.2023 - செவ்வாய் கிழமை
நல்ல நேரம் :
காலை 7.45 மணி முதல் காலை 8.45 மணி வரை
மாலை 4.45 மணி முதல் மாலை 5.45 மணி வரை
இராகு :
மதியம் 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை
குளிகை :
மதியம் 12.00 மணி முதல் மதியம் 1.30 மணி வரை
எமகண்டம் :
காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை
சூலம் - வடக்கு
மேஷம்
அரசு சார்ந்த உதவிகள் கிடைக்கும். தொழில் செய்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். சூழ்நிலைக்கேற்ப பேசி தன்னுடைய காரியத்தை சாதித்துக் கொள்வீர்கள். தனவரவில் இருந்துவந்த ஏற்ற, இறக்கங்கள் குறையும். புதிய மனை வாங்குவது சார்ந்த முயற்சிகள் கைகூடும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோக பணிகளில் அதிகாரம் மேம்படும். நிறைவு நிறைந்த நாள்.
ரிஷபம்
வியாபார பணிகளில் நிதானம் வேண்டும். ஆராய்ச்சி சார்ந்த துறைகளில் மேன்மை ஏற்படும். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். பணிபுரியும் இடத்தில் மதிப்பு மேம்படும். நண்பர்களின் வழியில் ஆதாயம் உண்டாகும். இழுபறியான செயல்களை செய்து முடிப்பீர்கள். எதிலும் விவேகத்துடன் செயல்படுவது நல்லது. நலம் நிறைந்த நாள்.
மிதுனம்
உங்களின் பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். நிதானமான செயல்பாடுகள் உங்கள் மிதான நம்பிக்கையை மேம்படுத்தும். புனித தலங்களுக்கு சென்று வருவதற்கான சூழல் ஏற்படும். எதிர்பாராத பணவரவுகள் கிடைக்கும். வழக்கு சார்ந்த விஷயங்களில் அலைச்சல்கள் ஏற்படும். வீடு, மனை விற்பனையில் லாபம் கிடைக்கும். சாதுரியமான பேச்சுக்களால் கீர்த்தி உண்டாகும். கவலைகள் விலகும் நாள்.
கடகம்
மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். செயல்பாடுகளின் தன்மைகளை அறிந்து முடிவு செய்யவும். பயனற்ற விவாதங்களை குறைத்துக் கொள்ளவும். துரித வகை உணவுகளை தவிர்ப்பது நல்லது. வியாபார ரீதியான பயணங்களில் சாதகமான சூழல் அமையும். மனதில் ஒருவிதமான குழப்பமும், அமைதியின்மைக்கான சூழ்நிலையும் உண்டாகும். சாதனை நிறைந்த நாள்.
சிம்மம்
எதிர்பாராத சில உதவிகளின் மூலம் நன்மை கிடைக்கும்.நெருக்கமானவர்களை பற்றிய புரிதல் மேம்படும். நண்பர்களுக்கிடையே அனுசரித்துச் செல்லவும். அந்நிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். சகோதரர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். மற்றவர்கள் கருத்துகளால் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். உத்தியோக பணிகளில் மறைமுக எதிர்ப்புகள் உண்டாகும். விவேகம் வேண்டிய நாள்.
கன்னி
காலதாமதமான பணிகளை செய்து முடிப்பீர்கள். பூர்வீக சொத்துக்களின் மூலம் லாபம் உண்டாகும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். எதிர்பார்த்திருந்த கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கும். சிலருக்கு வெளியூர் மற்றும் வெளிநாடு தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடும். மனதில் நினைத்த பணிகளை செய்து முடிப்பீர்கள். அதிர்ஷ்டகரமான சில வாய்ப்புகளின் மூலம் முன்னேற்றம் ஏற்படும். விழிப்புணர்வு வேண்டிய நாள்.
துலாம்
தாயார் வழியில் ஆதரவான சூழ்நிலைகள் ஏற்படும். கல்வி சார்ந்த துறைகளில் இருப்போருக்கு முன்னேற்றம் உண்டாகும். குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பம் விலகும். வியாபாரத்தில் சில நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள். மனை சார்ந்த பணிகளில் ஆதாயம் ஏற்படும். துறை சார்ந்த விஷயங்களில் தெளிவு உண்டாகும். விருத்தி நிறைந்த நாள்.
விருச்சிகம்
எதிர்காலம் தொடர்பான முயற்சிகளில் பொறுமை வேண்டும். சகோதர, சகோதரிகளால் ஆதாயம் உண்டாகும். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகளை ஏற்பீர்கள். விவசாயம் சார்ந்த துறைகளில் மேன்மை ஏற்படும். மாணவர்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். அலைச்சல் நிறைந்த நாள்.
தனுசு
குடும்ப உறுப்பினர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும். எதையும் சமாளிக்கும் மனோபலம் உண்டாகும். உடன்பிறந்தவர்களின் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். வாக்குறுதிகள் அளிக்கும் போது சிந்தித்துச் செயல்படவும். உணவு விஷயங்களில் கவனம் வேண்டும். காப்பீடு சார்ந்த துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். வர்த்தக பணிகளில் விவேகத்துடன் செயல்படவும். தடைகள் நிறைந்த நாள்.
மகரம்
பெருந்தன்மையான செயல்பாடுகளின் மூலம் பலரின் அறிமுகம் கிடைக்கும். புதிய துறை சார்ந்த தேடல் அதிகரிக்கும். முகத்தில் புதுவிதமான பொலிவுடன் காணப்படுவீர்கள். புதுவிதமான உணவுகளை உண்டு மனம் மகிழ்வீர்கள். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் கைகூடும். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். தாமதம் அகலும் நாள்.
கும்பம்
எதிர்பாராத செலவுகள் ஏற்படும். தாய்மாமன் வழியில் ஆதரவான சூழல் உண்டாகும். உத்தியோக பணிகளில் பதற்றமின்றி செயல்படவும். எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் ஏற்படும். எதிர்பாராத தனவரவுகள் உண்டாகும். இயந்திரம் தொடர்பான பணிகளில் சற்று கவனத்துடன் இருக்கவும். மறைமுகமாக இருந்துவந்த எதிர்ப்புகள் விலகும். வெற்றி நிறைந்த நாள்.
மீனம்
புதுவிதமான ஆசைகள் உண்டாகும். அரசு தொடர்பான பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். மற்றவர்களை பற்றிய கருத்துளை தவிர்க்கவும். பூர்வீக சொத்துக்களின் மூலம் சிறு சிறு விரயங்கள் ஏற்பட்டு நீங்கும். உலகியல் வாழ்க்கை பற்றிய புரிதலும், புதிய கண்ணோட்டமும் பிறக்கும். கலை சார்ந்த பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். யோகம் நிறைந்த நாள்.