Rasipalan 18 August, 2023: மிதுனத்துக்கு வெற்றி.. சிம்மத்துக்கு புகழ்... உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்!
RasiPalan Today August 18: இந்த நாளில் எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாகக் காணலாம்.
நாள் - 18.08.2023 - வெள்ளிக்கிழமை
நல்ல நேரம்:
காலை 09.15 மணி முதல் காலை 10.15 மணி வரை
மாலை 04.45 மணி முதல் மாலை 05.45 மணி வரை
இராகு:
காலை 10.30 மணி முதல் மதியம் 12.00 மணி வரை
குளிகை:
காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை
எமகண்டம்:
மாலை 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை
சூலம் - மேற்கு
மேஷம்
கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். உயர் அதிகாரிகளின் மத்தியில் செல்வாக்கு மேம்படும். குடும்பத்தாரின் ஒத்துழைப்புடன் சில செயல்களை செய்து முடிப்பீர்கள். நண்பர்களின் மூலம் அனுகூலமான வாய்ப்புகள் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். உடனிருப்பவர்களை அனுசரித்துச் செல்லவும். செலவுகள் நிறைந்த நாள்.
ரிஷபம்
மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். அரசு வழியில் அனுகூலம் உண்டாகும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். மறைமுகமாக இருந்துவந்த எதிர்ப்புகள் விலகும். வெளியூர் பயணங்களின் மூலம் முன்னேற்றம் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். உதவிகள் கிடைக்கும் நாள்.
மிதுனம்
எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். புத்திசாலித்தனமாக செயல்பட்டு நினைத்ததை முடிப்பீர்கள். மனை சம்மந்தமான முடிவுகளில் நிதானம் வேண்டும். இழுபறியாக இருந்துவந்த பணிகளை செய்து முடிப்பீர்கள். குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். வியாபார பணிகளில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். வெற்றி நிறைந்த நாள்.
கடகம்
மனதளவில் மகிழ்ச்சி உண்டாகும். எதிர்காலம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். சமூகப் பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். தடைபட்ட வருமானம் மீண்டும் கிடைக்கும். நிர்வாகம் தொடர்பான செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். பொருளாதாரம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். பூர்வீக சொத்துக்களின் வழியில் அனுகூலமான செய்திகள் கிடைக்கும். இன்பம் நிறைந்த நாள்.
சிம்மம்
இலக்குகளை நோக்கிய சிந்தனைகள் மேம்படும். அரைகுறையாக நின்ற பணிகளை மேற்கொள்வீர்கள். உறவுகளின் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். வியாபார வளர்ச்சிக்கான செயல்களில் ஆர்வம் அதிகரிக்கும். எதிர்பார்த்திருந்த சில உதவிகள் கிடைப்பதில் காலதாமதம் உண்டாகும். உத்தியோக பணிகளில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும். புகழ் நிறைந்த நாள்.
கன்னி
எதிர்பாராத செய்திகளால் அலைச்சல்கள் உண்டாகும். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் மேம்படும். வாகன பராமரிப்பு செலவுகள் ஏற்படும். நண்பர்களிடத்தில் நிதானத்துடன் நடந்து கொள்ளவும். கோபமான பேச்சுக்களை குறைத்துக் கொள்வது நல்லது. மன சஞ்சலங்களும், கருத்து வேறுபாடுகளும் ஏற்பட்டு நீங்கும். ஆக்கப்பூர்வமான நாள்.
துலாம்
மனதளவில் புதிய தன்னம்பிக்கை ஏற்படும். கூட்டு வியாபார சிந்தனைகள் மேம்படும். பழைய பிரச்சனைகளுக்கு முடிவு கிடைக்கும். அரசியல் பணிகளில் ஈடுபாடு ஏற்படும். எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். எதிர்பார்த்திருந்த சில கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கும். மனதில் புதுவிதமான ஆசைகள் உண்டாகும். தெளிவு நிறைந்த நாள்.
விருச்சிகம்
இடமாற்றம் பற்றிய சிந்தனைகள் மேம்படும். மனம் மகிழும் படியான சூழ்நிலைகள் உண்டாகும். சஞ்சலமான சில முடிவுகளுக்கு தெளிவு ஏற்படும். நண்பர்கள் வட்டம் விரிவடையும். நெருக்கமானவர்களின் விருப்பங்களை நிறைவேற்றி வைப்பீர்கள். புதிய துறை சார்ந்த தேடல் அதிகரிக்கும். இன்ப சுற்றுலா செல்வது தொடர்பான எண்ணங்கள் உண்டாகும். அமைதி நிறைந்த நாள்.
தனுசு
எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். வேலையாட்கள் சேர்ப்பு பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும். பெரியோர்களின் ஆலோசனைகள் மற்றும் உதவிகள் கிடைக்கும். பயணங்களின் மூலம் புதுவிதமான அனுபவம் உண்டாகும். சொத்து சம்பந்தமான வழக்குகளில் சாதகமான முடிவு கிடைக்கும். மனதளவில் புதிய உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். உறுதி நிறைந்த நாள்.
மகரம்
செய்யும் பணிகளில் கவனத்துடன் இருக்கவும். விமர்சனப் பேச்சுக்கள் ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களை குறை கூறாமல் இருக்கவும். தன விஷயங்களில் விழிப்புணர்வு வேண்டும். வியாபார பணிகளில் தாமதம் உண்டாகும். உத்தியோகத்தில் பொறுமையுடன் செயல்படவும். எதிர்பாராத சில பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். விரயம் நிறைந்த நாள்.
கும்பம்
திட்டமிட்ட காரியங்களில் திடீர் மாற்றம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். பங்குதாரர்கள் விஷயத்தில் அனுசரித்துச் செல்லவும். எதிலும் தன்னம்பிக்கையுடன் செயல்பட வேண்டும். குடும்ப உறுப்பினர்களின் வழியில் சுபச்செலவுகள் ஏற்படும். பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளுக்கு எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். சுகம் நிறைந்த நாள்.
மீனம்
செயல்பாடுகளில் திறமைகள் வெளிப்படும். நம்பிக்கையானவர்களின் எண்ணிக்கை மேம்படும். விருப்பமான நபர்கள் தேடி வருவார்கள். தடைபட்ட ஆசைகள் நிறைவேறும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். செயல்பாடுகளில் சுதந்திரத்தன்மை அதிகரிக்கும். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் மேம்படும். அலைச்சல் நிறைந்த நாள்.