![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Rasi Palan Today August 18: கும்பத்துக்கு முயற்சிகள் ஈடேறும்... மீனத்துக்கு பொறுமை தேவை.! உங்கள் ராசியின் பலன் என்ன?
Rasi Palan Today August 18: இந்த நாள் எந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாக காணலாம்.
![Rasi Palan Today August 18: கும்பத்துக்கு முயற்சிகள் ஈடேறும்... மீனத்துக்கு பொறுமை தேவை.! உங்கள் ராசியின் பலன் என்ன? Rasi palan Today Tamil 18th August 2022 Daily Horoscope Predictions 12 zodiac signs astrology Nalla Neram Panchangam Rasi Palan Today August 18: கும்பத்துக்கு முயற்சிகள் ஈடேறும்... மீனத்துக்கு பொறுமை தேவை.! உங்கள் ராசியின் பலன் என்ன?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/04/11/b698368a5700ed14ff6a1404e90fbf92_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
நாள்: 18.08.2022
நல்ல நேரம் :
காலை 10.45 மணி முதல் காலை 11.45 மணி வரை
கௌரி நல்ல நேரம் :
மதியம் 12.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை
மாலை 6.30 மணி முதல் மாலை 7.30 மணி வரை
இராகு :
மதியம் 1.30 மணி முதல் மதியம் 3.00 மணி வரை
குளிகை :
காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை
எமகண்டம் :
மாலை 6.00 மணி முதல் மாலை 7.30 மணி வரை
சூலம் –தெற்கு
மேஷம் :
மேஷ ராசி நேயர்களே,
உணர்ச்சிவசமின்றி பொறுமையுடன் செயல்படவும். கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசுவீர்கள். கடந்த கால நினைவுகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். புதிய வீடு, மனை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். மாணவர்களுக்கு கல்வியில் மாற்றமான வாய்ப்புகள் அமையும். சுகம் நிறைந்த நாள்.
ரிஷபம்:
ரிஷப ராசி நேயர்களே,
வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். நெருக்கமானவர்களின் மூலம் அலைச்சலும், புரிதலும் உண்டாகும். கற்பனை தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். மனதில் வித்தியாசமான சிந்தனைகள் உண்டாகும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். பத்திரம் தொடர்பான பணிகளில் கவனம் வேண்டும். எதிர்ப்புகள் விலகும் நாள்.
மிதுனம் :
மிதுன ராசி நேயர்களே,
வியாபாரத்தில் புதிய முதலீடுகள் அதிகரிக்கும். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஈடுபாடு உண்டாகும். நீண்ட நாட்களாக சந்திக்க நினைத்த நபர்களை சந்திப்பீர்கள். எதிர்பார்த்த சில உதவியின் மூலம் பொருளாதாரம் சார்ந்த நெருக்கடிகள் குறையும். வெளியூர் பயணங்களின் மூலம் அனுகூலமான வாய்ப்பும், அறிமுகமும் கிடைக்கும். வெற்றி நிறைந்த நாள்.
கடகம் :
கடக ராசி நேயர்களே,
தாய்வழி உறவினர்களின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வியாபார பணிகளில் இருந்துவந்த இழுபறிகள் நீங்கி சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் ஈடுபாடு உண்டாகும். அரசு சார்ந்த உதவி சிலருக்கு சாதகமான பலன்களை ஏற்படுத்தும். கவலைகள் விலகும் நாள்.
சிம்மம்:
சிம்ம ராசி நேயர்களே,
தந்தைவழி வியாபாரம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். திட்டமிட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். உடன்பிறந்தவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.
கன்னி :
கன்னி ராசி நேயர்களே,
குடும்ப விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்வதை குறைத்து கொள்ளவும். நிர்வாகம் சார்ந்த பணிகளில் நிதானத்துடன் செயல்படவும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் அலைச்சல்கள் உண்டாகும். வியாபார பணிகளில் வாடிக்கையாளர்களிடம் பொறுமையை கடைபிடிக்கவும். அனுபவம் மேம்படும் நாள்.
துலாம் :
துலாம் ராசி நேயர்களே,
கூட்டு வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். மனதில் நினைத்த காரியங்களை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் அலைச்சலும், அனுபவமும் ஏற்படும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். தடைகள் குறையும் நாள்.
விருச்சிகம் :
விருச்சிக ராசி நேயர்களே,
வியாபார பணிகளில் தவறிய சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கப் பெறுவீர்கள். சில பணிகளை செய்து முடிப்பதில் வேகத்தைவிட விவேகம் அவசியம். உத்தியோக பணிகளில் இருந்துவந்த பொறுப்புகள் மற்றும் நெருக்கடியான சூழ்நிலைகள் மறையும். மனதிற்கு நெருக்கமானவர்களின் மூலம் மாற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.
தனுசு :
தனுசு ராசி நேயர்களே,
புதிய பொருட்களை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். வியாபாரம் சார்ந்த பணிகளில் லாபம் அதிகரிக்கும். வியாபாரத்தில் உள்ள சில நுணுக்கங்களை புரிந்து கொள்வீர்கள். மனதில் உத்தியோக மாற்றம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். தாமதம் விலகும் நாள்.
மகரம் :
மகர ராசி நேயர்களே,
வாடிக்கையாளர்களின் அறிமுகமும், ஆதரவும் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும். பிரபலமான நபர்களின் அறிமுகம் கிடைக்கும். உத்தியோகம் சார்ந்த பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பெரியோர்களின் ஆலோசனைகள் மனதிற்கு தெளிவினை ஏற்படுத்தும். அமைதி நிறைந்த நாள்.
கும்பம்:
கும்ப ராசி நேயர்களே,
எதிர்பாராத சில அதிர்ஷ்டகரமான வாய்ப்புகளின் மூலம் நன்மை ஏற்படும். மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். முயற்சிகள் ஈடேறும் நாள்.
மீனம்:
மீன ராசி நேயர்களே,
வாக்கு சாதுர்யத்தின் மூலம் இழுபறியான சில காரியங்களை செய்து முடிப்பீர்கள். நீண்ட நாட்களாக தடைபட்டு வந்த தனவரவு கிடைக்கும். காப்பீடு தொடர்பான பணிகளில் மேன்மையான சூழ்நிலைகள் உண்டாகும். குழந்தைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். பொறுமை வேண்டிய நாள்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)