Rasi Palan Today, April 18: மீனம் கவனக்குறைவு... மிதுனம் புதிய முயற்சிகள்... இன்றைய ராசிபலன்!
Rasi Palan Today, April 18: இன்றைய ராசிபலன்: இன்று எந்த ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன் என்பதை கீழே விரிவாக காணலாம்.
நாள்: 17.04.2022
நல்ல நேரம் :
காலை 6.30 மணி முதல் காலை 7.30 மணி வரை
மாலை 4.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை
கௌரி நல்ல நேரம் :
இரவு 7.30 மணி முதல் இரவு 08.30 மணி வரை
இராகு :
காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை
குளிகை :
மதியம் 1.30 மணி முதல் மதியம் 3.00 மணி வரை
எமகண்டம் :
காலை 10.30 மணி முதல் மதியம் 12.00 மணி வரை
சூலம் – கிழக்கு
மேஷம் :
வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். சுபகாரியம் தொடர்பான முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். உத்தியோகத்தில் எதிர்பாராத சிலருக்கு இடமாற்றம் ஏற்படும். உறவினர்களின் வழியில் உதவி கிடைக்கும். வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.
ரிஷபம் :
பிள்ளைகளுடன் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். சொத்துக்கள் தொடர்பான வழக்கு விவகாரங்களில் வெற்றி கிடைக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான செயல்கள் லாபகரமாக அமையும் வெளிவட்டாரத்தில் புதுவிதமான அனுபவம் உண்டாகும்.
மிதுனம் :
உத்தியோகத்தில் சில நுணுக்கமான விசயங்களை கற்று கொள்வீர்கள். புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஒத்துழைப்பு கிடைக்கும். திறமைக்கேற்ப புதிய வாய்ப்புகள் ஏற்படும். புதிய பொலிவுடனும், உற்சாகத்துடனும் காணப்படுவீர்கள். வியாபாரம் தொடர்பான பொருளாதார நிலை மேம்படும்.
கடகம் :
மற்றவர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். உத்தியோகம் தொடர்பான உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் புதுவிதமான நம்பிக்கையை உண்டாக்கும். மறைமுகமாக இருந்துவந்த போட்டி, பொறாமைகள் குறையும். ஆன்மிகம் காரியங்களில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள்.
சிம்மம் :
புதிய வீடு மற்றும் மனை வாங்குவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். உயர் அதிகாரிகளின் மூலம் அனுகூலமான அமையும். குழந்தைகளின் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் திட்டமிட்டு செயல்படுவதன் அடைவீர்கள். மாணவர்களுக்கு போட்டிகளில் ஆர்வம் அதிகரிக்கும்.
கன்னி :
உடன்பிறந்தவர்களிடத்தில் சூழ்நிலைக்கேற்ப அனுசரித்து செல்லவும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். மனதில் இருக்கும் ரகசியங்களை மற்றவர்களிடம் பகிர்வதை குறைத்துக் கொள்வது நல்லது.
துலாம் :
குடும்ப உறுப்பினர்களின் செயல்பாட்டால் மகிழ்ச்சி அடைவீர்கள். மனதில் இருந்துவந்த கவலைகள் குறையும். நீண்ட நாள் கனவை நடைமுறைப்படுத்த முயல்வீர்கள். ஆடை, ஆபரணச்சேர்க்கை உண்டாகும். உயர் அதிகாரிகளால் அனுகூலமான சூழல் ஏற்படும். வெளியூர் தொடர்பான வேலை வாய்ப்புகளில் சுபச்செய்திகள் கிடைக்கும்.
விருச்சிகம் :
தனவரவின் மூலம் சேமிப்பு அதிகரிக்கும். எதிர்பாராத பொருட்சேர்க்கை உண்டாகும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் நிலுவையில் இருந்துவந்த பணிகளை செய்து முடிப்பீர்கள். வியாபாரம் தொடர்பான பணிகளில் இருந்துவந்த தடை, தாமதங்கள் குறையும். குடும்ப உறுப்பினர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும்.
தனுசு :
மனை தொடர்பான விஷயங்களில் லாபம் உண்டாகும். புதிய தொழில் முயற்சியில் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். அரசாங்கத்திடம் இருந்து அனுகூலமான செய்திகள் கிடைக்கும். புனித யாத்திரை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். உறவினர்களுக்கிடையே ஒற்றுமை மேம்படும்.
மகரம் :
மனதில் தைரியத்துடன் சில முக்கிய முடிவினை எடுப்பீர்கள். குடும்பத்தினருடன் சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள்.
கும்பம் :
சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமாக முடியும். புதிய வாடிக்கையாளர்களின் அறிமுகம் கிடைக்கும். தனவரவு திருப்திகரமாக இருக்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த பிரச்சனைகள் நீங்கும். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.
மீனம் :
கவனக்குறைவால் சில அவப்பெயர்கள் ஏற்படும். மற்றவர்களை நம்பி பொறுப்புகளை ஒப்படைக்கும் பொழுது சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. மனதில் எந்தவொரு செயலிலும் திருப்தியற்ற சூழல் உண்டாகும். எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் தாமதமாக கிடைக்கும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்