மேலும் அறிய

Rasipalan Today Jan 17: தனுசுக்கு நலம்... கடகத்துக்கு தனம்... உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்!

Rasipalan Today: இந்த நாள் எந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாகக் காணலாம்.

நல்ல நேரம்:

காலை 7.30 மணி முதல் காலை 8.30 மணி வரை

மாலை 4.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை

கௌரி நல்ல நேரம்:

காலை 10.30 மணி முதல் காலை 11.30 மணி வரை

இரவு 7.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை

இராகு:

மதியம் 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை

குளிகை:

மதியம் 12.00 மணி முதல் மதியம் 1.30 மணி வரை

எமகண்டம்:

காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை

சூலம் - வடக்கு

மேஷம்

தந்தையிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் அலைச்சல்கள் உண்டாகும். சமூகப் பணிகளில் மாறுபட்ட அனுபவம் கிடைக்கும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் நெருக்கடிகள் ஏற்படும். ஏற்றுமதி, இறக்குமதி சார்ந்த விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். சஞ்சலமான சிந்தனைகளை தவிர்ப்பது நல்லது. பணிபுரியும் இடத்தில் உயர் அதிகாரிகளிடம் விவேகத்துடன் செயல்படவும். விவேகம் வேண்டிய நாள்.

ரிஷபம்

நண்பர்களின் வழியில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். வியாபார பணிகளில் லாபம் அதிகரிக்கும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். இணையம் தொடர்பான துறைகளில் திறமைகள் வெளிப்படும். தவறிப்போன சில பொருட்கள் மீண்டும் கிடைக்கும். வர்த்தகப் பணிகளில் சாதகமான சூழ்நிலைகள் உண்டாகும். சேமிப்பை மேம்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். நன்மை நிறைந்த நாள்.

மிதுனம்

கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து நடந்து கொள்ளவும். அரசு சார்ந்த பணிகளால் ஆதாயம் உண்டாகும். மனதை உறுத்திய சில விஷயங்களுக்கு தெளிவான முடிவுகள் கிடைக்கும். இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். சமூகப் பணிகளில் பலதரப்பட்ட மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். உத்தியோக பணிகளில் திறமைகள் வெளிப்படும். கடன் சார்ந்த முயற்சிகள் கைகூடும். போட்டிகள் நிறைந்த நாள்.

கடகம்

மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி அடைவீர்கள். மனதில் புதுமையான சிந்தனைகள் மேம்படும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். ஆன்மிகம் தொடர்பான புரிதல் மேம்படும். நுண்கலை சார்ந்த தேடல் அதிகரிக்கும். எதிர்பாராத தனவரவு கிடைக்கப் பெறுவீர்கள். தனம் நிறைந்த நாள்.

சிம்மம்

விவசாய பணிகளில் லாபகரமான சூழ்நிலைகள் உண்டாகும். சொந்த ஊர் தொடர்பான பயணங்கள் கைகூடும். காப்பீடு சார்ந்த பணிகளில் சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். எதிர்பாராத சில அதிர்ஷ்டகரமான சூழல் ஏற்படும். வழக்கு சார்ந்த விஷயங்களில் சாதகமான முடிவு கிடைக்கும். ஆடம்பரமான சிந்தனைகளை தவிர்த்து சிக்கனமாக செயல்படுவீர்கள். நண்பர்களின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். வெற்றி நிறைந்த நாள்.

கன்னி

அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும். உறவினர்களை பற்றிய புரிதல் உண்டாகும். சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். விவசாயப் பணிகளில் மேன்மை உண்டாகும். உயர் அதிகாரிகள் ஆதரவாக செயல்படுவார்கள். வியாபார பணிகளில் முன்னேற்றம் கிடைக்கும். மனதளவில் புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். அமைதி நிறைந்த நாள்.

துலாம்

தனவரவில் இருந்துவந்த தடைகள் குறையும். குடும்ப உறுப்பினர்களின் மூலம் ஒத்துழைப்பு கிடைக்கும். பயணம் சார்ந்த விஷயங்களில் ஆதாயம் உண்டாகும். எதிர்பார்த்த கடன் சார்ந்த உதவி கிடைக்கும். தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். திறமைகளை வெளிப்படுத்தும் போது சூழ்நிலையை அறிந்து செயல்படவும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.

விருச்சிகம்

விலை உயர்ந்த பொருட்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். நுட்பமான விஷயங்களில் கவனம் வேண்டும். செயல்பாடுகளில் இருந்துவந்த தயக்கங்கள் நீங்கும். புதிய நபர்களின் அறிமுகத்தினால் மாற்றம் உண்டாகும். மனதளவில் சில குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். பூர்வீக சொத்துக்களின் மூலம் அனுகூலம் உண்டாகும். தாமதம் குறையும் நாள்.

தனுசு

சஞ்சலமான சில சிந்தனைகளின் மூலம் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். வாகனம் வாங்குவது தொடர்பான விஷயங்கள் கைகூடும். செயல்பாடுகளில் ஒருவிதமான மந்தத்தன்மை உண்டாகும். உறவினர்களின் வழியில் சுபச்செய்திகள் கிடைக்கும். வீடு மற்றும் மனை சார்ந்த பணிகளில் ஆதாயம் ஏற்படும். வாக்குறுதி அளிக்கும் போது சிந்தித்து செயல்படவும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். நலம் நிறைந்த நாள்.

மகரம்

ஆன்மிக பணிகளில் ஈடுபாடு உண்டாகும். திறமைக்கு உண்டான மதிப்பு கிடைக்கும். உடனிருப்பவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். உடன்பிறந்தவர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். செல்வ சேர்க்கை தொடர்பான முயற்சிகள் கைகூடும். இணையம் சார்ந்த துறைகளில் சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். பொறுமை வேண்டிய நாள்.

கும்பம்

பணிபுரியும் இடத்தில் உயர் அதிகாரிகளால் ஆதரவான சூழ்நிலைகள் ஏற்படும். வெளியூர் தொடர்பான பயணங்கள் கைகூடும். தொழில் நிமிர்த்தமான தொடர்புகள் அதிகரிக்கும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான தருணங்கள் உண்டாகும். பார்வை தொடர்பான பிரச்சனைகள் குறையும். மனதிற்கு பிடித்த உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். திறமை வெளிப்படும் நாள்.

மீனம்

வியாபார பணிகளில் பொறுமை வேண்டும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு மேம்படும். வெளியூர் பணி நிமிர்த்தமான முயற்சிகள் கைகூடும். இறை சார்ந்த பயணங்கள் சாதகமாக அமையும். எதிர்பாராத சில அதிர்ஷ்டகரமான புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நிர்வாக திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். இரக்கம் நிறைந்த நாள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Minister Moorthy: ” இது ஆண்ட பரம்பரை என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்” சர்ச்சையாகும் அமைச்சர் மூர்த்தி பேச்சு
” இது ஆண்ட பரம்பரை என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்” சர்ச்சையாகும் அமைச்சர் மூர்த்தி பேச்சு
மொத்தமா மாறப்போகுது! சென்னை மாநகராட்சி விரிவாக்கம்.. தமிழக அரசு அறிவிப்பு!
மொத்தமா மாறப்போகுது! சென்னை மாநகராட்சி விரிவாக்கம்.. தமிழக அரசு அறிவிப்பு!
TN Rain: திருநெல்வேலியில் ஒரேநாளில் 18 செ.மீ கனமழை..இன்று எங்கு கனமழை பெய்யும்.!
TN Rain: திருநெல்வேலியில் ஒரேநாளில் 18 செ.மீ கனமழை..இன்று எங்கு கனமழை பெய்யும்.!
சாகசத்திற்கு தயாரா? குடியரசு தின அணிவகுப்பை நேரில் பார்க்கனுமா? உடனே புக் பண்ணுங்க!
சாகசத்திற்கு தயாரா? குடியரசு தின அணிவகுப்பை நேரில் பார்க்கனுமா? உடனே புக் பண்ணுங்க!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”அஜித் சொன்ன சீக்ரெட்” : மகிழ் திருமேனி Open Talk : குஷியில் ரசிகர்கள்ஸ்டாலின் ஏழை முதல்வரா? இது நம்ம LIST -லயே இல்லயே! வெளியான சொத்து பட்டியல்!ADMK Alliance BJP : Amit shah  போட்ட ஆர்டர் அடங்கி போன Annamalai டெல்லியில் நடந்தது என்ன? : EPSNithish Kumar | கூட்டணி மாறும் நிதிஷ் குமார்?தலைவலியில் பாஜக! சூடுபிடிக்கும் பீகார் தேர்தல் Bihar

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Moorthy: ” இது ஆண்ட பரம்பரை என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்” சர்ச்சையாகும் அமைச்சர் மூர்த்தி பேச்சு
” இது ஆண்ட பரம்பரை என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்” சர்ச்சையாகும் அமைச்சர் மூர்த்தி பேச்சு
மொத்தமா மாறப்போகுது! சென்னை மாநகராட்சி விரிவாக்கம்.. தமிழக அரசு அறிவிப்பு!
மொத்தமா மாறப்போகுது! சென்னை மாநகராட்சி விரிவாக்கம்.. தமிழக அரசு அறிவிப்பு!
TN Rain: திருநெல்வேலியில் ஒரேநாளில் 18 செ.மீ கனமழை..இன்று எங்கு கனமழை பெய்யும்.!
TN Rain: திருநெல்வேலியில் ஒரேநாளில் 18 செ.மீ கனமழை..இன்று எங்கு கனமழை பெய்யும்.!
சாகசத்திற்கு தயாரா? குடியரசு தின அணிவகுப்பை நேரில் பார்க்கனுமா? உடனே புக் பண்ணுங்க!
சாகசத்திற்கு தயாரா? குடியரசு தின அணிவகுப்பை நேரில் பார்க்கனுமா? உடனே புக் பண்ணுங்க!
அடங்கி போன அண்ணாமலை; அமித்ஷா போட்ட ஆர்டர்..டெல்லியில் நடந்தது என்ன?
அடங்கி போன அண்ணாமலை; அமித்ஷா போட்ட ஆர்டர்..டெல்லியில் நடந்தது என்ன?
"விவசாயிகளின் நலனே முக்கியம்.." உறுதிபட கூறிய பிரதமர் மோடி!
IBPS RRB Result: ஐபிபிஎஸ் ஆர்ஆர்பி தேர்வு முடிவுகள் வெளியீடு; காண்பது எப்படி?
IBPS RRB Result: ஐபிபிஎஸ் ஆர்ஆர்பி தேர்வு முடிவுகள் வெளியீடு; காண்பது எப்படி?
RSS தலைவருக்கு பறந்த கடிதம்.. ரூட்டை மாற்றும் கெஜ்ரிவால்.. பாஜகவுக்கு ஷாக்!
RSS தலைவருக்கு பறந்த கடிதம்.. ரூட்டை மாற்றும் கெஜ்ரிவால்.. பாஜகவுக்கு ஷாக்!
Embed widget